
கணவனும் மனைவியும் இரு உயிரும் ஒன்றி வாழும் நிலை
கணவனைப் பிரிந்தவர்கள் மனைவியைப் பிரிந்தவர்கள் அந்த ஆன்மாக்களைச்
சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும் என்றும் அவர் இட்ட மாங்கல்யம்
உங்களிடம் இருக்கிறது என்ற உறுதி கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும்.
1.அவர் உணர்வுகள் உங்கள் உடலிலே உண்டு
2.அதன் வலுக் கொண்டு அந்த ஆன்மாவைச் சப்தரிஷி
மண்டலத்துடன் இணைக்க வேண்டும்,
இப்பொழுது சாங்கியம் சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றார்கள்…?
கணவன் இறந்துவிட்டால் கணவனை மனைவி மறந்துவிட வேண்டும் என்பதை
ஆதாரமாகக் காட்டிக் “கணவனை இழந்தவள்” என்று மற்றவர்களை அறியச் செய்வதற்கு மாங்கல்யத்தைப் பறிக்கின்றார்கள். அங்கேதான் தவறு செய்கின்றார்கள்.
தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு கணவன்
பால் அப்படி நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி தவறு செய்ய விடாது.
இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகள் செயல்படுத்தப்பட்டு “கணவனை இழந்தவள் இழந்தவள்”
என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனை உணர்வைக் கொண்டு அந்த
வேதனையால் பேய் மணமாக மாற்றி… இந்த உணர்வின் துணைகொண்டு தன்
குடும்பத்தின் நிலைகள் கொண்டு அது செயல்படும்.
இறந்த பின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலில் சென்று பேய்
உணர்வுகளைத் தான் ஊட்டி… அந்தப் பாசத்தால் அந்தக்
குடும்பத்திற்கும் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர ஒளியின் சரீரம் பெற முடியாது… நல்வழி செல்ல முடியாது.
ஞானிகள் காட்டிய நிலைகளில்…
1.வசிஷ்டரும் அருந்ததி போன்று கவர்ந்து கொண்ட
உணர்வுகள் என்றும் ஒன்றி மனிதனுக்குள் வாழ்ந்தால்
2.அருள் ஒளி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்று
அருள் ஒளி மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்றும்
3.அப்படிப்பட்ட உணர்வுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள்
தான் என்றும் பிறவியில்லா நிலை அடைகின்றனர்.
இந்த உடலில் குறுகிய காலமே இருப்பினும் அது மனைவியின் உணர்வின்
துணைகொண்டு வலு கொண்டு சப்தரிஷி மண்டலத்தில் இணைய வேண்டும் என்று எண்ணி அந்த
வலுவினைச் சேர்த்து விட்டால் அதை நினைவு… அந்த விண்ணை நோக்கிச் செல்கின்றது மனைவியின் எண்ணம்.
1.அந்த உணர்வு கணவன் வாழ்ந்த காலத்தில் எப்படி
மகிழ்ந்திருந்ததோ
2.கனாக்களில் மகிழ்ச்சியின் உணர்வையே தோற்றுவிக்கும்.
அருள் ஒளி பெற வேண்டும் என்று அண்டத்தின் நிலைகளில் மிதந்து கொண்டிருக்கும்
ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து விட்டால்… அவர் அருள் ஒளிச் சுடர் பெறும் நிலைகள் கொண்டு… நமக்குள் இந்தப் புவியின் பற்றினை நீக்கிடும் அருள் உணர்வுகளை நமக்குள்
தோற்றுவித்து நம்மை அந்த எண்ணத்துடன் வாழச் செய்யும். நம்
நினைவில் நம் மக்களை வாழ்த்தச் செய்யும்.
இல்லை என்றால் மாங்கல்யத்தைப் பறித்து விட்டால் இழந்து விட்டோம்
இழந்து விட்டோம் என்று சர்வத்தையும் இழந்திடும் நிலைகள் கொண்டு வேதனை கொண்டு தான்
வாழும் நிலை வரும்.
கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும் இனி தவறு செய்யாது
1.உங்களுடன் அவர் வாழ்கின்றார் என்ற நினைவு
கொண்டு
2.அந்த ஆன்மா ஒளியின் சரீரமாக உங்களுடன் வாழ்ந்து
கொண்டே இருக்கின்றது.
அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன்
இணைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்து
1.என்று அவர் உங்களுடன் ஒன்றினாரோ அந்த நினைவுகள்
வந்து கொண்டே இருக்கும்
2.அந்த அணுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.
அவர் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணி இதை போன்ற
காலங்களில் சப்தரிஷி மண்டலங்களுடன் ஆன்மாக்களை இணைத்து விட்டால் இந்த நினைவு அங்கே
செல்லும்.
நம் உணர்வுகள் இங்கே வளரும். அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும்.
அருள் ஒளிச் சுடராக மாற்ற நமது எண்ணங்கள் அந்த ஞானிகள் காட்டிய வழியில் செல்ல
முடியும்.
ஆகவே கணவனை இழந்துள்ளோம் என்று எண்ண வேண்டாம். அவருடைய உணர்வுகள் உங்களுக்குள் உண்டு.
இதைப் போன்று இந்த உணர்வின் வலுக் கொண்டு இன்னொரு உடலுக்குள்
அந்த ஆன்மா சென்று இருந்தாலும் அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் இந்த ஆன்மாக்களைத்
தொடர்ந்து அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று
1.காலை துருவ தியானங்களில் செயல்படுத்துவீர்கள்
என்றால் அந்த உணர்வுகள் ஒளியாகப் பெறுகின்றது.
2.அவர்களுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுகின்றது
3.அவர் அருள் வழி பெறுகின்றார் ஒளியின் சரீரம்
பெறுகின்றார்
4.அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும் நிலையும்
ஒன்றி வாழும் உணர்வினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளலாம்.
இதைப் போல மனைவியை இழந்தவர்களும் மாற்று மனைவி பெற்றாலும் தவறில்லை. ஆனாலும் முந்திய மனைவியின் உணர்வுகள் அந்த
ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் உடல் பெறும் உணர்வுகள் கரைந்து ஒளி சரீரம்
பெற வேண்டும் என்று எண்ணினால்
1.அந்த ஆன்மா முன் சென்றால் அந்த அருள் ஒளி
கொண்டு இணைந்து வாழும் மற்ற மனைவிக்கும் அருள் கொடுக்கும்.
2.அதனால் மக்களும் அருள் ஒளி பெறும் தகுதியும்
இந்த வாழ்க்கையில் இருள் சூழா நிலையும் உருவாகும்.