
பாவத்தைப் போக்கும் இடம் எது…?
கடையில் வேலை செய்கின்றார்கள். வேலை செய்து
கொண்டிருக்கும் போது எதிர்பாராது அங்கே ரோட்டிலே
சம்பவங்கள் நடக்கிறது. அதாவது கடும் வேதனைப்படுகின்றனர்.
நம்மால் அல்ல…! வேறு யார் கூடேயோ சண்டை
போடுகின்றார்கள். அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகளை நாம் நுகர்ந்து விடுகின்றோம்.
நுகர்ந்த
பின் அதே உணர்வு ஓம் நமச்சிவாய என்று உடலில் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது. அந்த நேரத்தில் பயமும் அதிர்ச்சி வருகின்றது.
1.அந்த
அதிர்வான உணர்வு வரப்படும் பொழுது கடையிலே இவன் (சண்டையிட்டதைப்
பார்த்து நுகர்ந்தவன்) வேலை பார்க்கின்றான்
2.பயமான உணர்வுடன் வேலை செய்யும் போது சரியான முறையில்
வேலை செய்யவில்லை.
முதலாளி
பார்த்துக் கேட்கும் போது… “ரோட்டில் சண்டை போடுவதை நீ ஏன் பார்க்கின்றாய்…? அதைப் பார்த்து என் தொழிலை நீ கெடுக்கிறாயா…? உனக்கு இங்கே வேலை இல்லை போடா…!” என்று சொல்லி விடுகின்றார்.
இந்த
உணர்வுகள் அதைச் சொன்னாலும் ஓம் நமச்சிவாய…
சிவாய நம ஓம்…! வேலை செய்பவன் பயப்படும் போது துரத்தி விடுகிறார் முதலாளி. ஆனால் பிழைப்பு போய் விடுகின்றது.
1.இந்தப் பாவத்தைப் போக்குவதற்கு
என்ன செய்வது…?
2.வேதனை வந்துவிடுகிறது… அந்த நேரம் இராமேஸ்வரம் போவீர்களா…?
ரோட்டிலே
போகின்றோம். திடீரென்று அங்கே விபத்து நடக்கிறது. பார்த்ததும் பாவ நிலைகள் இங்கே வந்து விடுகின்றது. பதட்டம் ஆகின்றது. கடையிலே வந்து வேலை செய்ய முடியவில்லை. வீட்டிற்கு
வந்தாலும் சமையல் செய்து சாப்பிட முடியவில்லை…!
1.பயமாக
இருக்கின்றது.
2.அதற்காக வேண்டி இங்கிருந்து இராமேஸ்வரம் போவீர்களா…?
தப்பு
செய்யவில்லை…! ஆனால் பாவ நிலைகளைப்
பார்க்கின்றோம். அவன் வேதனைப்படுகிறான் என்று அந்தப் பாவ நிலையைக் கண்கள் உணர்த்துகின்றது உடல்
முழுவதும் பரவச் செய்கிறது… அதனால் நடுக்கம் ஆகிறது.
அப்போது
இராமேஸ்வரம் போய் விட்டு வருகின்றீர்களா…? யாராவது அப்படிப் போகின்றோமா…?
இங்கே
சோற்றுக்கே வழியில்லை. அப்புறம் இராமேஸ்வரத்திற்குச் சென்று அத்தனை கிணற்றிலும் காசைக் கொடுத்துக் குளித்துவிட்டுச் சுற்றி வந்து முடிந்தால் பாவம் போய்விடுமா…? நன்றாக யோசனை செய்து
பாருங்கள்.
நாம் என்ன செய்ய வேண்டும்…? பாவத்தைப் போக்க வேண்டும் என்றால் அதைப் போக்கக்கூடிய சக்தி
நம்மிடம் இருக்கின்றது.
1.அந்தச்
சக்தியைத் தான் தியானத்தில் உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
2.உங்களுக்குள் அதைப் பதிவு செய்துவிட்டால் போதும்.
ஒரு
விபத்தாகின்றது என்னால்
1.அடுத்த கணமே ஈஸ்வரா…! என்று
புருவ மத்தியிலே நினைவைக் கொண்டு சென்று
2.அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்
3.அது
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும்
என்று
4.இதை வலுவாக்கிக் கொண்டால் அந்தப் பாவமான உணர்வுகளை இது மறைத்து விடுகின்றது.
துருவ
நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து இப்படிச்
சுத்தம் செய்து விட்டோம் என்றால் போதும்.
அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
அந்த மகரிஷியின் அருள் சக்தி விபத்தில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா பெற வேண்டும்
1.அவர்களும் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
2.அந்த ஆன்மாவுக்கு நல்ல மோட்சம்
கிடைக்க வேண்டும். என்று நாம் இப்படி எண்ண வேண்டும்.
ஆனால்
அடிபட்ட வேதனையால் வாடுகின்றார்கள் என்றால் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்திவிட்டு
1.அவர்களுக்கு இந்தச் சக்தி கிடைக்க வேண்டும்.
2.இனி ஒரு நல்ல நிலையை அவர் அடைய வேண்டும் என்று நினைக்க
வேண்டும்.
ஆனால்
நாம் என்ன செய்கின்றோம்…? ஆ…ஆ…! என்று பயத்தால் பதட்டமடைந்து விடுகின்றோம்.
அது பாவ நிலையாக உருவாகி விடுகின்றது.
ஆனால்
உடனே நமக்குள் துடைக்கும் விதமாக
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று
தூய்மைப்படுத்தி விட்டு விபத்தில் சிக்கியவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
எண்ணினால்
1.“நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் உருவாக்குகின்றது…”
2.இதைப் போன்று நாம் நமக்குள் வரும் பொழுது தீமை வென்றிடும் உணர்வுகள் மன
உறுதி கிடைக்கின்றது
3.அருள் ஒளி என்ற உணர்வினை நமக்குள் செலுத்தப்படும்
பொழுது இருளை அகற்றுகின்றது.
இப்படி
ஒவ்வொரு நேரத்திலும் துருவ நட்சத்திரத்த்தின்
சக்தியை எடுத்து நமக்குள் நல்லதாக மாற்றிக்
கொள்ள வேண்டும். பாவத்தைப் போக்க இதுதான் சுலபமான வழி… ஞானிகள் காட்டியது…!