ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 4, 2025

பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டவர்கள் சப்தரிஷிகள்

பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டவர்கள் சப்தரிஷிகள்


ஒலி கொண்டு ஒளி பெற்று ஒலி ஒளியாக ஆத்ம வலுக் கொண்டு சீரிய சுடர்தல் எனும் நிலையாகத் தன்னை வளர்த்து உயர்நிலை கொண்டிடும் ஒலி(ளி) ஜீவன்கள் ஒன்றாக மிளிர்ந்திடும் சூட்சும உலகே சதாசிவ மண்டலம்…” (சப்தரிஷி மண்டலம்)
1.ஆதி சக்தியின் வளர்ப்பையே வளப்பாக்கும் செயல் கொண்டு
2.பூமியின் உயர் ஞான வித்துக்களைப் பேணிக் காத்திடும் வல்லமை கொண்டிட்டவர்கள் அவர்கள் தான்…!
 
அவர்களுடன் இணைந்து
1.வளர்ப்பின் பக்குவத்தில் தன்னை வளர்த்திடும் உயர் ஞான எண்ணம் கொண்டிடும் ஜீவன்கள்
2.அந்த மகான்கள் அருள் எனும் ஒளி நெறி கண்டு தாமும் அந்த நிலை பெற்றிடவே
3.பேரருள் பேரொளி கொண்டு சிவமாக… “தான் சமைத்து சிவ சூரிய நிலை என்னும் உயிராத்ம உயர் ஒளி நிலை பெறுவர்.
 
இங்கே உபதேசிக்கும் நிலை கொண்டு மெய்ஞான முகிழ்விப்பாக சக்திகளை வளர்த்திடும் ஆத்மாக்கள்
1.அந்த மகான்களுடன் தொடர்பு கொண்டு
2.ஈஸ்வரர் நெறி நின்று வளர்வது கண் கூடு.
 
மதங்கள் எனும் போர்வை போர்த்திக் கொண்ட பற்பல தத்துவ விசாரங்களும் படைப்பின் படைப்பு எனும் சூட்சுமத்தைக் கூறத்தான் செய்கின்றன.
 
இருந்தாலும்தவ நெறியில் நிற்காத தன்மையினால் அதனைக் கொள்பவர் இன்றி விட்டேத்தியான வாதங்கள் புரிந்து வேடமிடும் நிலையில்உண்மையின் பொருள் உணர்ந்தார் இல்லை.
 
இறை சக்தியின் முன்பு உரையாடினார் என்றும் உலகக் கோட்பாட்டின் மாய இருள் விலக்க உண்மையின் பொருள் கொணர்ந்தார் என்றும் புர்க்க என அழைக்கப் பெறும் ஓர் வாகனத்தில் பயணம் செய்து ஒளி மண்டலம் கண்டு திரும்பினார் நபி…! என உரைக்கின்ற வேதம் அதனின் சூட்சுமப் பொருள் இந்தத் தியானத்தின் வழி தான் என அறிந்து கொண்டிட்டவர் யார்…?