
துருவ நட்சத்திரம் உருவாக்கும் “ஒளியான அண்டம்”
1.பிரபஞ்சத்தில் உயிரணு தோன்றி பூமியில் மனிதனாக உருவான பின் துருவ
நட்சத்திரம் ஆன நிலை என்பது…
2.அது
அகண்ட அண்டத்தின் நிலைகளைத் தனக்குள்
நுகர்ந்து
3.ஒளிச் சரீரமான ஒளியான அண்டத்தை உருவாக்கும்,
இப்படி…
1.ஒளி அண்டங்கள் ஒன்றுடன் ஒன்று நமது சூரியக் குடும்பத்தில் இருப்பது போல பல பல சூரியக் குடும்பங்களில்
2.எண்ணிலடங்காத சூரியக் குடும்பங்களில் உயிரணு தோன்றி
உணர்வின் ஒளியாக மாறி… அகண்ட அண்டத்தில் சுழன்று கொண்டு தான் உள்ளது.
உயிரணு
தோன்றி இந்த உயிர் நுகர்ந்த உணர்வு கொண்டு உணர்ச்சிகள் கொண்டு நாம் இயங்கினாலும்… அதனதன் வழி கொண்டு சந்தர்ப்பத்தில் வேதனை என்ற உணர்வை நுகர்ந்த பின் வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாகி உடலிலே நரக வேதனையைத் தான் அனுபவிக்க
நேர்கின்றது.
இப்படி
ஒவ்வொரு சரீரத்திலும் நரக வேதனைகளை அனுபவித்து… அதிலிருந்து “தப்பிக்க
வேண்டும் தப்பிக்க வேண்டும்” என்ற உணர்வுகளை வளர்த்து
வளர்த்துத் தான் இன்று நம்மை மனிதனாக வளர்த்துள்ளது உயிர்.
1.மனிதனான பின் இத்தகைய வேதனைகளிலிருந்து தப்ப வேண்டும் என்று
2.அவ்வாறு
தப்பிய அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்தோம் என்றால் இந்த உடலிலே அது வளர்க்கப்பட்டு
3.உடலை விட்டுச் சென்ற பின் வேதனையற்ற உணர்வும்
4.வேதனை உருவாக்கும் அந்த நஞ்சினை ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்று
5.அகண்ட
அண்டத்தில் எங்கும் செல்லும் நிலையும்…
6.எங்கிருந்து எது உருவானாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெற்று ஒளிச் சரீரமாகப் பெறும் தகுதியும் பெறுகின்றது.
அதை
இந்த மனித சரீரத்திலே பெறத் தவறினால் மீண்டும்
நாம் எடுத்துக் கொண்ட விஷத்தின் தன்மை கொண்டு விஷ அணுக்கள் உருவாகி… உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தன்மை கொண்ட உடலாக உருவாக்கிவிடும் நமது உயிர்.
மீண்டும்
நரக வேதனையில் தான் சுழல நேரும்.
இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அருள் மகரிஷிகளின் உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கினால் உடலில் வரக்கூடிய நோய்களையோ
அல்லது வாழ்க்கையில் தொழிலில் வரக்கூடிய சிக்கலையோ அதை நிவர்த்திக்கும் வல்லமை பெறுகின்றோம்.
1.தியானத்தின்
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப்படும் போது
2.நாம்
இந்த வன்மை (வலிமை) பெறுகின்றோம்.
நம்முடன்
வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து
சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்களை விண் செலுத்தும் பொழுது நமது நினைவாற்றல் சப்தரிஷி மண்டலத்துடன் இணைகின்றது.
1.அதன் உணர்வை நாம் எளிதில் பெறும் தன்மையும்
வருகின்றது.
2.இந்த வாழ்க்கையில் வரும் நஞ்சினை வென்றிடும் திறனும் பெறுகின்றது.
3.அதே சமயம் இந்த உடலை விட்டு நாம் சென்றால் எளிதில் அந்த சப்தரிஷி
மண்டலத்தை அடையும் நிலையும் வருகின்றது.