ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 17, 2025

உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்

உபதேசங்களைக் கூர்மையாகக் கேட்டாலே உங்கள் தீமைகள் அகலும்


ஞானிகள் காட்டிய வழியில் உயிரை மதித்து இந்த உண்மையை உணர்ந்து உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்ற துருவ நட்சத்திரமாக இருக்கும் இந்த அருள் மகரிஷிகளின் உணர்வு நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண் கொண்டு கூர்மையாகப் பார்த்து உணர்வின் தன்மை தனக்குள் பதிவாக்கி
2.மீண்டும் கண்ணின் நினைவு கொண்டு விண்ணை நோக்கி ஏகி உயிருடன் ஒன்றி கண்ணின் நினைவைப் புருவ மத்தியிலே ஏற்றி
3.அந்தத் துருவ மகரிஷிகளின்ருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
4.என் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும்
5.எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்
6.அந்த அருள் ஒளி என் உடலில் வளர வேண்டும் என்று எண்ணும் படி செய்தான்.
 
உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றும் மார்க்கத்தை இவ்வாறு காட்டினான் அருள் ஞானி.
 
வாழ்க்கையில் எத்தனையோ கோடி வேதனை சலிப்பு சஞ்சம் என்ற உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிருடன் ஒன்றி அதனுடன் தொடர்பு கொண்டு தன் உடலுக்குள் பெற வேண்டும் என்று வ்வொரு அணுவிலும் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாற்றும்படி செய்தான்…”
 
1.வேதனை உருவாக்கும் உணர்வின் தன்மை இங்கே அடைபட்டு விட்டால் இழுக்கும் சக்தி குறைகின்றது
2.வேதனை உருவாக்கி உயிரிலே பட்டு இந்த எண்ணங்கள் தோற்றமாவதை மாற்றுகின்றது.
 
அதுதான் கடைசி நிலை நரசிம்ம அவதாரம்.
 
ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஒளிச் சரீரம் பெற்ற அவனின் உணர்வை உயிருடன் ஒன்றி நாம் நுகர்ந்து ரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும். ஏனென்றால் அதன் வழி கவர்ந்து தான் மற்ற அணுக்களுக்கு உணவே செல்கின்றது.
 
மகரிஷிகளின் உணர்வை இரத்த நாளங்களில் கலக்கச் செய்து எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்த வேண்டும்.
 
ஏனென்றால் கண் கொண்டு தான் உற்றுப் பார்த்தோம் மற்றவரை. இந்த உணர்வின் பதிவின் தன்மை கொண்டு தான் ஊழ்வினை என்ற பதிவாக்கி இந்த உணர்வின் துணை கொண்டு தான் கவர்ந்து வருகின்றது.
 
1.அப்போது நமக்குள் இருக்கும் ரத்த நாளங்களில் கலந்து அதன் வழி வளர்ந்த அந்த அணுக்களின் தன்மை வட்டமிடுதல் வேண்டும்
2.அருள் மகரிஷிகளின் உணர்வு அங்கே செல்லப்படும் பொழுது ஈர்க்கும் வன்மை குறையப்படும் பொழுது
3.காற்றிலிருந்து ஆன்மாவாக மாற்றுவதை அதைத் தடைப்படுத்துகின்றது.
4.அந்த அருள் ஒளி தீமைகளை அகற்றுகின்றது.
 
கடவுளின் அவதாரம் நரசிம்ம அவதாரம் என்று மடி மீது இரணியனை வைத்து வாசல்படி மீது அமர்ந்து இரணியனை பிளந்தான் என்று சூட்சுமத்தில் நடப்பதைக் காவியமாகப் படைத்து இயற்கையின் உண்மை நிலையை அறிவதற்காக விநாயகர் தத்துவத்தைத் தெளிவாகக் காட்டப்பட்டது.
 
வாழ்க்கையில் சேர்த்த தீமைகள் ஆன்மாவில் வரப்படும் பொழுது அருள் ஒளியை உள் செலுத்தி விட்டால் ஈர்க்கும் வன்மை அந்த அணுக்கள் அடைபடுகின்றது… ஈர்க்கும் வன்மை இழக்கின்றது… அது நீக்கப்படுகின்றது நமது எண்ணங்கள் மாறுகின்றது.
 
நுகர்ந்தால் தான் உணர்வின் இயக்கமாக உடல் இயக்குகின்றது. உணர்வின் தன்மை நம் இரத்த நாளங்களில் கலக்கின்றது. அதன் வழி உணவை எடுத்து அது வளர்கின்றது.
 
இப்பொழுது கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எல்லாம்
1.இத்தருணம் உங்களுக்குள் அரும்பெரும் சக்தி படர்கின்றது.
2.உங்கள் உடலில் இருதயங்களிலோ மற்ற உறுப்புகளிலோ கால் மூட்டுகளிலோ எந்த நோய் இருப்பினும்
3.அருள் உணர்வை நுகர்ந்த பின் அந்த நோயெல்லாம் தணியும் குறையும்.
 
இந்த உபதேசத்தை நுகரப்படும் பொழுது தீமைகளை விளைவிக்கும் அணுக்களில் கவசமிடும் போது அது ஈர்க்கும் சக்தி குறைந்தால் அதனுடைய வலுவை இழக்கும். இந்த உணர்வின் தன்மை பெற்ற பின் நோயின் வலிமை குறையும்..”