ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2025

நாம் எண்ணுவது (சுவாசிப்பது) உடலுக்குள் அணுக்களாகி… அதனின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது…?

நாம் எண்ணுவது (சுவாசிப்பது) உடலுக்குள் அணுக்களாகி… அதனின் செயலாக்கங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது…?


ஒருவன் தவறு செய்கின்றான் என்று உற்றுப் பார்த்துக் கோப்ப்படுகின்றோம். கோபத்தை உண்டாக்கும் அணுவாக உருவாக்கி விட்டால் உடலில் என்ன நடக்கிறது…?
 
கோழிக் குஞ்சு முட்டையை விட்டு வந்த பின் அது கத்துகின்றது… அதற்கு இரை தேடுகின்றது. அந்த உணர்ச்சியைத் தூண்டிய பின் கோழி கூப்பிட்டு இரையைக் கொடுக்கின்றது.
 
இதைப் போல
1.நம் உடலுக்குள் அந்த அணுவின் தன்மை கரு முட்டை நம் இரத்த நாளங்களில் சுழன்று வரும் பொழுது
2.எந்த உறுப்புக்குள் அது தேங்கி விடுகின்றதோ தேங்கிய அணு அதனின்று தன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
3.இந்த ரத்தங்கள் நம் மூளை வரையிலும் போய்வரும்.
4.சிறு மூளை பாகம் சென்ற உடனே இந்த உணர்வுகள் ந்திய பின்
5.ஒருவரை உற்றுப் பார்த்து அந்த அலைகளை முதலில் எப்படி நுர்ந்தோமோ அந்த நினைவு வரும்.
6.அயோக்கியப் பயல்…! இந்த மாதிரித் தவறு செய்தான் பார் என்று…!
7.நம்மை அறியாமலேயே அவன் நினைவு வரும் அந்த அலைகளை நாம் நுகர நேரும்.
8.நுகர்ந்த பின் அந்த அணுத்தன்மை நம் உடலில் பெருகும்.
9.இரத்தங்களில் கலந்த பின் நமக்குள் அந்த அணு இதை உணவாக எடுத்துக் கொள்ளும்.
 
கோழி எப்படித் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுக்கின்றதோ இதை போலத் தான் நமது உயிர் நாம் எண்ணியதைக் கருவாக்கி உருவாக்கி விட்டால் அணுவாகி விட்டால்ந்த உணர்ச்சியைக் கேட்டவுடன் உயிர் எடுத்து அதை உணவாகக் கொடுக்கும்.
 
ஆனால் உயிரிலே படும் பொழுது அவனை எப்படி நாம் கோபமாகப் பேசினோமோ அந்த உணர்வெல்லாம் கலந்து நம் இரத்தங்களிலே கலக்கும்.
1.இரத்தங்களிலே ஓடிக்கொண்டிருப்பதை அணுக்கள் சாப்பிடும்.
2.நம் உறுப்புடன் ஒட்டி இருக்கப்படும் போது தன் குஞ்சுகளைப் பெருக்க ஆரம்பிக்கும் தன் இனத்தைப் பெருக்க ஆரம்பித்து விடுகிறது.
3.தன் இனத்தைப் பெருக்கப் பெருக்க நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட நம்முடைய உறுப்புகள்
4.இரத்தக் கொதிப்பு என்று வரும் பொழுது வீரிய உணர்வாக வரும்.
 
நல்ல அணுக்களில் இது பட்ட பின் புலி எப்படி மற்ற உயிரினங்களைக் கொன்று தன் பசியைத் தீர்த்துக் கொள்கின்றதோ இதைப்போல தசைகளில் இருப்பதைத் தன் பசியைத் தீர்த்துக் கொள்ள அந்த அணுக்கள் விழுங்கத் தொடங்கிவிடுகின்றது.
 
அப்போது தசைகளில் வலியும் வேதனையும் வீக்கமும் அதிகமாக வரத் தொடங்குகிறது. இந்த மங்கள் தோன்றத் தோன்ற இனம் புரியாதபடி நம்மை இயக்கும்.
 
ஏதாவது ஒரு வேலையை செய்வோம் அங்கே ஒருவர் வருவார் அவருடைய செயலைப் பார்த்தபின் இனம் புரியாது கோபப்படுவோம்.
1.அந்த உணர்வு அதைச் சாப்பாடாகக் கேட்டுக் கொண்டே இருக்கும்.
2.இப்படி இந்த உணர்வுகள் நமக்குள் தோன்றி விட்டால் நல்ல ஆணுக்கள் பூராமே செயலிழக்கத் தொடங்கிவிடும்.
 
கோமான உணர்வை எடுக்க எடுக்க உடல் எரிச்சல் கண்ரிச்சல் கால் காந்தல் இதை போன்று அந்த அணுக்கள் பரவும் இடங்களில் எல்லாம் இந்த நிலை ஏற்பட்டு விடுகின்றது.
 
அதே சமயத்தில் மன எரிச்சல்…!
1.நெஞ்சுக்கு முன் அந்தக் கோமான நிலைகள் இங்கே வந்த உடனே இருதய பாகம் மோதி அங்கே நிறுத்தும்.
2.அந்த உணர்வு வரும் பொழுது கடிகாரம் போன்ற அதை இழுத்து வைக்கும்.
3.இழுத்து வைத்துத் தான் உயிருக்குக் கொடுக்கும் அப்பொழுது இருதய பாகங்கள் எல்லாம் வலி எடுக்கத் தொடங்கிவிடும் எரிச்சல் ஏற்படும்.
4.நாம் சுவாசிக்கும் போது நமக்குள் எரிச்சல் என்ற உணர்வே வரும்.
 
இப்படி ஒருவன் தவறாகச் செயல்பட்டதை நாம் நுகர்ந்து பார்க்கப்படும் பொழுது நம் உயிர் அந்தக் கருவாக உருவாக்கி விடுகின்றது.
 
உருவாக்கி விட்டால் நம் கண்கொண்டு பார்த்ததை நமக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாக்கி வைத்திருக்கின்றது.
 
நீங்கள் மருந்து சாப்பிட்டு நோயைத் தணித்தாலும் வயல்களில் களைகள் முளைத்தால் களைகளை நீக்கினாலும் மறுபடியும் களை முளைக்கும். இதைப்போல நமக்குள் அந்தக் கோபத்தின் உணர்வை ஊழ்வினை என் வித்தாக நமக்குள் பதிவாக்கப்படும் பொழுது நம் உடலில் இது பதிவாகின்றது.
 
ரத்தத்தைப் பரிசோதிக்கின்றார்கள். இந்த வாழ்க்கையில் எந்த அளவிற்கு நாம் கோபப்பட்டோமோ ரத்த கொதிப்பிற்குண்டான அணுக்கள் இருக்கின்றது இந்த வாழ்க்கையில் எந்த அளவுக்கு வேதனைப்படுத்தினார்களோ வேதனை உருவாக்கும் அணுக்கள் இருக்கின்றது.
 
ஏனென்றால் கோபம் வரும் பொழுது எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனை என்ற நிலை வரும் அதற்கு சாப்பாடு இங்கே தயாராக இருக்கின்றது.
 
1.இப்படி இது இரண்டும் மோதும் பொழுது இயக்கச் சக்தி மாறிவிட்டால் நமது உமிழ் நீர் கெட்டியாக மாற்றக்கூடிய அணுக்களாக வந்துவிடும்.
2.சாப்பிடுவோம் தண்ணீர் குடித்த பின் பார்த்தால் கொழ… கொழ… என்று ஆகிவிடும்… சளியாகிவிடும்.
3.இந்த அணுக்கள் உருவான பிற்பாடு நுரையீரல் பக்கம் சென்று விட்டால்… அஹ்..அஹ்ஹ்… என்று மூச்சுத் திணறல் வந்துவிடும்.
 
இதையே நாம் சுவாசிக்கும் பொழுது சிரசு பாகம் செல்லும் பொழுது இந்த உணர்ச்சிகளைத் தூண்டும் மூக்கில் தண்ணீராக ஒழுக ஆரம்பிக்கும். இது எல்லாம் எங்கிருந்து வருகின்றது…?
 
நம்முடைய எண்ணத்தால் வருவது தான்…!
 
உயிர் என்ன செய்கின்றது…? நாம் எதை எண்ணுகின்றோமோ சீதாலட்சுமியாக இருப்பதை நுகர்ந்த உடனே உயிரிலே பட்ட பின் சீதாராமா நாராயணன் திரேதா யுகத்தில் சீதாராமனாகத் தோன்றுகின்றான் (உடலுக்குள் எண்ணங்களாகத் தோன்றுகிறது).
1.ஒரு மனித உடலில் விளைந்த உணர்வை நாம் நுகர்ந்தோம் என்றால் இந்த நிலை.
2.இதை எல்லாம் மாற்றியமைக்க வேண்டும் அல்லவா…!