
எல்லோரையும் அருள் வழியில் நலம் பெறச் செய்வதற்குத் தான் விநாயகர் தத்துவம்
நம்
உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றுதல் வேண்டும். எவ்வாறு…?
அந்த
அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற
வேண்டும் ஈஸ்வரா. மகரிஷிகளின் உணர்வுகள் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவு கொண்டு நினைவை விண்ணை நோக்கி
ஏகி
2.மகரிஷிகளின் உணர்வுகளை
உடலுக்குள் செலுத்தி அந்த நினைவலைகளை உள்ளே பரப்ப வேண்டும்.
3.இப்படிப்
பரப்புவோம் என்றால் அந்த உணர்வு வேகமாக உடலில் பரவிவிடும்.
உதாரணமாக
நோயாளியைப் பார்த்த உணர்வுகள்
நமக்குள் இருந்தால் அந்த மகரிஷிகள் உணர்வுகள் வலு ஆனபின் அந்த நோயாளியின் உணர்வைத் தள்ளிவிடும்.
சந்தோஷமாக
இருக்கும் பொழுது மணம் ஜாஸ்தியாக இருக்கும் ஒருவர்
வேதனைப்படும் நிலைகளைச் சொல்லி அதை
நாம் கேட்டால் சந்தோஷமான மனதில் பட்டவுடன்
அப்போது வேதனை தான் தோன்றுகின்றது.
வேதனையாக
இருக்கப்படும் போது சந்தோஷமாக யாராவது சொன்னால் அதைத் தள்ளி விடுகின்றது. ஏனென்றால் விஷத்திற்கு வலு அதிகம். ஆனால்
1.இதையெல்லாம் வென்றவன் மகரிஷி
2.அந்தத் துருவ மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும்
எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள்
பெற வேண்டும் என்று பல முறை சொல்லிவிட்டு
4.எந்த நோயாளியைப் பார்த்தீர்களோ
மகரிஷிகளின் அருள் சக்தியை நீ பெறுவாய்
5.உன் உடல் நோய்கள் சீக்கிரம் நீங்கும் நீ இதன் வழிப்படி மகரிஷிகளை
எண்ணி பார்.
6.அந்தத்
துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும்
படர வேண்டும்
7.எங்கள்
ஜீவான்மா ஜீவணுக்கள் பெற
வேண்டுமென்று சொல்லி அதனை ஏங்கிப் பெறு
8.உன் உடல் நலம் பெறும் நீ நலமாவாய் என்று இந்த
வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.
நீங்கள்
சொன்னதை அவர்கள் பின்பற்றத் தொடங்கினால் அவருடைய எண்ணம்
அங்கே போகின்றது தீமைகளை நீக்க அந்த அருள் உணர்வுகள் அவருக்கு உதவுகிறது.
அதே
சமயத்தில்
1.நமக்குள்
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற்றதனால் தீமையை ஈர்க்கும்
சக்தி குறைந்து
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை
அதிகமாகக் கூட்டிக் கொள்கின்றோம்.
3.அந்தத் தீமையை அப்பொழுது அடக்கி விடுகின்றோம்.
இப்படிச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவத்தை வைத்தார்கள்.
வேதனைப்படுபவர்
உணர்வை நுகர்ந்து விட்டால் என்ன நடக்கின்றது…? உதாரணமாக எலி என்ன செய்கின்றது…? தரையிலே வங்கு போடுகின்றது நல்ல மனம் கொண்டு
வேதனைப்படுவோர் உணர்வை நுகர்ந்து விட்டால் உங்கள் நல்ல மனதை அது வங்கு
போட்டு விடுகின்றது.
ஆனால்
அடுத்த கணம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும் என்று எண்ணினால் இந்த வேதனைப்படும் அந்த மனிதனின் உணர்வை அடக்கி
விடுகின்றது.
வேதனைப்படுவோர்
உணர்வைக் கேட்டபின் நல்ல குணத்தை
அது அடக்குகின்றது. அதற்குத் தான் எலியைப் போட்டது.
ஆகவே
வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டபின் அருள்
மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று எண்ணி அதை அடக்குதல் வேண்டும்.
அதற்குத்தான்
வேம்பையும் அரசையும் போட்டு
1.மனித வாழ்க்கையில்… நீ நல்லவன் “நல்லவனாக இருக்க வேண்டும்”
2.நீ அறிந்து நல்லதைச் செய்தது…
உனக்குள் அந்த நல்லது நிலைத்திருக்க வேண்டும்
3.பிறருடைய தீமை உன்னை ஆட்கொள்ளக்கூடாது… அவன் வழியில்
நீ சென்று விடக்கூடாது.
4.அருள் ஒளி நீ பெற வேண்டும்…
அறியாது வரும் இருளை நீக்கும் சக்தியை நீ அவனுக்குள் ஊட்ட
வேண்டும் என்பதற்குத்தான்
5.விநாயகர் தத்துவத்தில் இவ்வளவு
தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
காலை
துருவ தியானத்தில் மொத்தமாக
நாம் பார்த்தவர்கள் குடும்பம் எல்லாம் நன்றாக
இருக்க வேண்டும்… தொழில் செய்யும் இடங்களில் அந்த நண்பர்கள்
எல்லாம் நலமாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்பம் எல்லாம் நலமாக இருக்க வேண்டும் என்று மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று எல்லோரையும்
நினைத்து இதை எண்ணிப் பழகுதல் வேண்டும்.
1.இதை எண்ணினால் நாமும் நலமடைகின்றோம்… அவர்களும்
நலமடைகின்றார்கள்.
2.எல்லோரையும் அருள் வழியில் நலம்
பெறச் செய்வதற்கு தான் விநாயகர் தத்துவம்.