ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2025

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

 
உதாரணமாக நாம் ஒரு இரும்புக் கம்பியைக் காய்ச்சுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.. அதைக் கையிலே பிடிக்கிறோம் என்றால் அதன் வழி சூடு வந்துவிடும்.
1.அந்தச் சூடு கைக்கு வராதபடி ஒரு துணியைச் சுற்றினால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.
2.மனிதன் தான் அந்தச் சூடு தாக்காதபடி இதைச் செயல்படுத்துகின்றான்.
3.இதே மாதிரி ஒரு வேதனைப்படும் உணர்வு நம்மைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா.
 
காரணம் அந்த வேதனை மீண்டும் நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.
 
பார்க்கிறோம் அல்லவா எத்தனையோ நல்ல பேரை…! எல்லோருடைய கஷ்டத்தையும் கேட்டு அதனால் வேதனைப்படுகின்றார்கள்.
 
எல்லோருக்கும் நன்மை செய்தேனேஎனக்கு இப்படி இருக்கிறதே… கடவுள் என்னைச் சோதிக்கின்றானே என்று கடவுளைத்தான் திட்டுகின்றோமே தவிர ஏதாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடிகின்றதா…?
 
1.ஆனால் இந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றிக் கொள்ள முடியும். அதற்குச் சக்தி தேவை.
2.ஏனென்றால் இது எல்லாம் உங்கள் அனுபவத்தில் இருக்கும்…
3.ஞாபகப்படுத்தும் போது அந்த உணர்ச்சிகள் வரும் அப்பொழுது பழைய நினைவுகள் வருகின்றது
4.அதனுடன் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டு வருகின்றேன்.
5.உங்கள் குணங்களில் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை நீங்கள் பிரித்துப் பார்க்கக் கூடிய நிலை வேண்டும் என்பதற்குத்தான்
6.இதைச் சொல்லி கொண்டு வந்து இணைக்கின்றேன்.
 
அதையும் நினைக்கின்றீர்கள் இதையும் சேர்த்து இணைத்தவுடன் என்ன செய்கின்றது…?
 
வேதனைகளைக் குறைக்கும். அப்பொழுது வேதனையான உமிழ் நீர் மாறுவது பலம் குறைந்து நல்ல சக்திகள் கூட வந்து நீங்கள் சாப்பிடுகின்ற ஆகாரத்தை நல்ல முறையில் ஜீரணித்து இரைப்பையில் வரப்படும் பொழுது நமக்குக் கோளாறு செய்யாது…”
 
அந்த நிலையைத்தான் உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.
 
ஆனால் இப்பொழுது நமது வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வே வரப்படும் பொழுது வரிசையில் வந்து
1.கடைசியில் உடல் உறுப்புகள் குறைந்து உடல் குறைந்து
2.ஆளே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றது.
 
இத்தகைய நிலையில்… உயிர் சென்றவுடன் என்ன ஆகிறது…? விஷத்தை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது இதை மாற்ற வேண்டும் அல்லவா.
 
அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் தீமையை நீக்கக்கூடிய அணுக்களை விளைய வைத்திருக்கின்றார்கள் நாம் குழந்தை பிறக்க ஆசைப்படுகின்றோம். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியின் உடலாக இரண்டு உயிரும் ஒன்றாகக்கூடிய  நிலையை ஆசைப்பட்டார்கள்.
1.அவர்கள் உருவாக்கிய குழந்தைதான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது
2.அந்தக் குழந்தையில் ஒன்றை எடுத்துக் கொண்டால் தான் நமக்குச் சரியாக இருக்கும்
3.அதை ளர்த்தோம் என்றால் நமக்கு ஞானத்தை ஊட்டும்.
 
கஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனம் ஒன்றி அந்த பேரருள் பெற்று பேரொளி என்ற நிலையாக அடைகின்றார்கள்.
 
அந்தச் சக்திகளைத்தான் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.