ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2025

“உயிரான ஈசனுடன் ஒன்றி” அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்

“உயிரான ஈசனுடன் ஒன்றி” அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்


உலகெங்கிலும் கடும் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கா போன்ற பல நாடுகளில் சூறாவளிகள் அதிகமாக உருவாகின்றது. பாதுகாப்பிற்காக லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து… ஊரைக் கடந்தே செல்கிறார்கள். எத்தனையோ நகரங்களில் மக்கள் வாழும் இடங்களை அழித்து விடுகின்றது.
 
ஆக சூறாவளி எங்கிருந்து வருகின்றது…?
 
விஞ்ஞான அறிவால் அணு குண்டுகள் ஹைட்ரஜன் குண்டுகள் செய்யும் போது
1.அதில் கசிவான உணர்வுகளைச் சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது
2.சூரியன் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கும் அதனுடைய உணர்வுகளுக்கும் எதிர்மறையாகும் பொழுது சூறாவளி உருவாகின்றது.
3.இந்த வீரியத் தன்மைகள் கட்டிடங்களுக்குள் ஊடுருவுகின்றது.
4.எவ்வளவு பெரிய காங்கிரீட் ஆக இருந்தாலும் சுழற்றி வளைத்து நொறுக்கி விடுகின்றது.
 
இப்படிப்பட்ட உலக நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
 
பூமிக்குள் இத்தகைய குழம்புகள் அதிகமாகி எங்கே மொத்தமாகச் சேருகின்றதோ அங்கே திடீரென்று இந்த ஆவிகள் வெளியே கிளம்பி நிலநடுக்கமாகிக் கட்டிடங்களையும் மற்றவைகளையும் நொறுக்குகின்றது.
 
நாம் வாழும் பகுதிகளில் மிகக் குறைவு தான். வட இந்தியாவில் கூட அதிகமாக உண்டு. காரணம்
1.நம் நாட்டில் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று
2.தென்னாட்டில் தோன்றிய அந்த அகஸ்தியன் வாழ்ந்த நாட்டில் கூடுமானவரையில் உயர்ந்த சக்திகள் பரவி உள்ளது.
 
பாருங்கள்...! தமிழ்நாட்டிலே பொதுவாகச் சேதங்கள் அதிகமாக ஆவதில்லை. அருள் மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே இருப்பதால் ஓரளவுக்குப் பாதுகாக்கப்படுகின்றது.
1.மீண்டும் அந்த மகரிஷிகளின் அருள்ணங்களை நாம் வலுவாகப் பெருக்கி
2.தமிழ்நாட்டையும் காத்து உலக நிலையை காப்பதற்காக வேண்டி நாம் தியானிக்க வேண்டும்.
 
நான் சொல்வது சாதாரணமானதல்ல…!
 
நாம் அந்த மகரிஷிகளின்ணர்வுகளை எடுத்து இங்கே பரப்பினோம் என்றால் தீமையானணர்வுகளை மாற்றி அமைக்கின்றது.
 
பூமிக்குள்ளே எந்தெந்த இடங்களில் குழம்புகள் அதிகமாகின்றதோ அந்த இடத்தில் வெடிக்கின்றது. ஒரு செகண்டிலே மேலே இருப்பது கீழேயும் கீழே இருப்பது மேலேயும் மாறி எல்லாமே குலுங்கி விடுகின்றது.
 
அணு உலைகள் எங்கெங்கெல்லாம் உருவாக்கி வைத்துள்ளார்களோ அங்கெல்லாம் நிலநடுக்கம் அதிகமாக உண்டு. இங்கேயும் அணு உலைகளை வைத்துள்ளார்கள்.
 
நாம் எல்லாம் சேர்ந்து பிரார்த்தனை செய்து நிலநடுக்கம் இங்கே வராதபடி பாதுகாக்க வேண்டும்.
 
அணு உலைகளை என்று உருவாக்க முற்பட்டார்களோ சூரியனால் அந்தக் கசிவுகள் கவரப்படுகின்றது. மின்னல்கள் வரும் போது ஊடுருவுகின்றது பூமிக்குள் நடு மையம் புகுந்த பின் எந்த இடத்தில் அதிகமாகின்றதோ குழம்பாக மாறுகின்றது ஆவிகள் உருவாகி வெளிப்படுகின்றது வெடிக்கின்றது.
 
மேலே இருப்பது தாங்காது சிறிது கீழே இறங்கி விடுகின்றது. இந்த மாதிரி நிலைகள் இருப்பதால்0 இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும்…?” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
 
நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த உடலுக்குப் பின் என்ன…? பிறவியில்லா நிலை அடைய வேண்டும்…! என்று நாம் தெரிந்து கொண்டோம்.
 
1.எவ்வளவுதான் இந்த உடலை அழகுபடுத்திப் பாதுகாக்க முற்பட்டாலும் கடைசிலே மண்ணிலே தான் இதை விட்டுச் செல்ல வேண்டி வருகின்றது
2.உயிரான ஈசன் இங்கே இருக்கும் வரை தான் எல்லாவற்றையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்… நன்றாக இருக்கின்றோம்.
3.ஈசன் சென்று விட்டால் சிவம் சமாகி விடுகின்றது.
 
உயிரால் தான் உடலாக்குகின்றது சிவம். ஈசன் போய்விட்டால் சமாகி விடுகிறது. பின் அதற்கு ஏன் நாம் இவ்வளவு பாடுபட வேண்டும்…?
 
1.உயிரான ஈசனுடன் ஒன்றி அந்த ஈசனின் உணர்வை நாம் பெருக்குதல் வேண்டும்.
2.ஆகவே அந்த அருள் சக்தி பெற நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்வோம் அதை வலுப்படுத்துவோம் பேரருள் பேரொளியாக நாம் மாறுவோம்.