ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 9, 2025

வான்மீகியின் “பூர்வாங்கம்”

வான்மீகியின் “பூர்வாங்கம்”


எண்ணுகின்ற எண்ணத்தின் அசைவுகளை அறிந்து கொண்டிடும் ஆற்றலாக அதை உணர்த்தி அறிவுறுத்தும் மாமரிஷிகளின் ஒளி காந்தத்துடன் ஒன்றி உண்மையின் சக்தியாய் இக்காலத்தில் பெறுகின்ற நிலையே முக்காலமும் உணரும் நிலை…!”
 
அகால மரணத்தின் முன்னறிவிப்பை
1.மெய் ஞான அறிவால் அறிந்து கொண்டிட
2.காட்சிப் புலனாகும் விழிப்படலங்களின் சூட்சுமம் (கண்ணில் உள்ள பாப்பா)  பற்றி உரைத்திருந்தோம்.
 
மனிதன் தான் வாழ்ந்து வரும் வாழ்க்கையில் உலகோதய தொழில் அறிவு வாழ்வின் ஜீவித செயலுக்கு அவரவர்கள் வழியமைத்துக் கொண்டு செல்லும் அனுபவ உண்மை (அது).
 
1.இன்று வழக்கு நடையில் உரைத்திட்ட நாட்டரசன் கோட்டை
2.அதுவே வான்மீகி மாமகரிஷி ஞானப்பயிர் வளர்க்க வந்திட்ட ஊர்.
 
றிவு அற்ற வில் வேடர் குத்தில் பிறந்தவன் வான்மீகி. வில் அம்பை வைத்து வேட்டையாடுதல் கிழங்கு கள்ளி எடுத்தல்தானியங்கள் பயிரிடுதல் இதுவே முன்பு வாழ்ந்த வனவேடுவ குலத்தின் வித்து,
 
வில்வீரன் என்ற பெயர் நாமத்தில் உலவி தாய்மையின் பேறு கற்பு நெறி காக்கும் இராமாயண மாகாவியத்தைப் படைத்தது.
 
வேடுவ குலத்தின் திருமண விழாவில் முக்கிய பங்கு ஏற்பது வில்லும் அம்பு தான். வில்லின் வித்தைகள் பயிற்சிக்கும் செயலில் வீரத்தை உடலின் வலிமையைக் கொண்டு வெற்றி பெற்றிடத் துடிக்கும் விவேகமற்ற மௌடீக வைராக்கியத்தைக் காட்டிம் முடிக்கத் துடித்த நிலையில்அவன் வில் ஒடிந்ததால் கரியில் அன்று நாணம் மேலிடத் தலை குனிந்தான்,..”
 
தன் வாழ்க்கையில் பங்கேற்கத் தேர்வு செய்த மங்கை வெற்றி வாகை சூடிய மற்றொருவனுக்கு மாலை சூட்டியதால் ஏற்பட்ட மனத்தின் ஊடல்கள் மோகத்தின் வசம் எழுந்த கோமாய் அந்த வித்து அவனுக்குள் (வான்மீகி) வேரூன்றி விளைந்த்து.
 
அஸ்திரத்தில் ஏவப்படும் பொழுது அக்கினியை உருவாக்கிடும் முறையைக் காண இச்சம்பவமே வழி வகுத்தது.
 
1.ஐம்புலன்களையும் ஒன்றாக நிறுத்தி ஐம்புலன் அடக்கம் என்கின்ற நிலை கொண்டு வளர
2.காட்டில் ஒரு சித்தன் மூடனாக உவிய இந்த வேடனிடம் தானாக முன் வந்து
3.இவனின் உயர்வை அன்றே கண்டு ஸ்திரங்கள் ஏவுதலின் நாட்டத்திற்கு வழிகாட்டினான்.
 
தானாக தன் அனுபவத்தில் தென்னம்பாளையினுள் அக்கினியைக் கண்டது…” எத்தகைய ஞானமப்பா…?
 
தென்னம்பாளைப் பஞ்சு
அம்பின் நுனிக் குஞ்சு
பாறையின் மோதல் வேக நெருப்பு
காதையின் வழிகொண்டுகொள் விருப்பு
 
1.தென்னம்பாளையினுள் கிளைத்து ஓடும் காம்புகளை கடின நுனியில் பஞ்சு போல நைத்து
2.ம்பின் நுனியில் கட்டி வில்லில் அதை நாணேற்றி முழு வேகம் கொண்டு எய்
3.காற்றின் உராய்வில் தென்னம்பாளை பற்றி எரியும் சூட்சுமம் அறிந்து கொண்டது ஏகாந்த விளையாட்டிலப்பா.
 
அத்துடன் சிறு நுனியில் வைக்கப்படும் சில பொருள்கள் எரியூட்டும் குணத்தன்மைகள் கொண்டது. எய்யப்படும் வேகத்தில் பாளைப் பஞ்சில் பற்றி இணைக்கப்பட்டு இருக்கும் எரிபொருளும் பற்றி எரிந்து செயல்படுதல் அக்கினி அஸ்திரம் என்று பெயர் சூட்டப்பட்டது.
 
சிற் சில பாளைகள் ஒன்றுடன் ஒன்று மோதப்படும் பொழுது அக்கினிப் பொறிகள் வெளிப்படுதலை அறிந்திட்டதைப் போல் சிற் சில பாறைகளிலும் அதே சூட்சுமத்தைக் கண்டறிந்தவர் வான்மீகி மாமகரிஷி.
 
சகலத்திலும் சகலமாய்க் கலந்து பரவிப் படர்ந்த
1.ஆதி அமில குண சக்திகள் ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்படும் செயலின் நிகழ்வுகள் பிரம்மமாக
2.அந்த மறைபொருள் உறைபொருளாக விளைந்து உருக்கோலம் கொண்டிட்ட பிறகு
3.பூமியே சிவலிங்கமாக சுழன்றோடிக் கொண்டிருக்கும் இயக்க கதியில்
4.ஈர்ப்பின் பாசம் சமைத்திடும் சமைப்பு உள்ளிட்ட நிகழ்வே சக்தியாக ஒலி ஒளி இணைந்து கொண்டிட்ட சிவ சக்தியாக
5.விண்ணுலக சக்திகள் வான் எழுந்து ஈர்க்கும் கரு எதுவோ…” அதை நிறைவாக்
6.தெய்வீக வடிவம் பெற்றிடும் ஜோதியின் உள் குளிர்வு - ”நீல வண்ணமாக
7.தன்னுள் (வான்மீகி) வான்கொண்டு வானில் ஒளி பெற்றிட்ட செயல் போல் அனைவரும் பெற்றிட
8.ஞான முன்னோடியாகக் காட்டும் நிலை ஞானச் செல்வங்களும் பெற்றிட வேண்டுமப்பா.