
நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்
கோபத்தின்
உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது நமது நல்ல அணுக்களுக்குள் அது ஊடுருவி நல்ல
உணர்ச்சிகளை மாற்றி “ஓமுக்குள் ஓ…ம்…!” பிரணவத்தின் தத்துவத்தை அது மாற்றி விடுகின்றது.
இப்படி
மாற்றிக் கொண்ட உணர்வுகளால்…
1.உடலுக்குள் இருக்கும் மற்ற உணர்வுகள் அனைத்தும் இதை
நுகர நேர்ந்தால் இரத்தக் கொதிப்பாக ஊடுருவுகின்றது.
2.அதன் மூலம் நல்ல அணுக்கள் இட்ட மலங்கள் மடிய நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட
நிலையும்
3.கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வுகளும் நம் இரத்தங்களிலே கலந்து
4.இதன் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே ட்ரான்சாக்சன்…! அதாவது
உடலுக்குள் பரவச் செய்யும் உணர்வுகள் தான் அது.
எப்படி
ஒரு ட்ரான்சிஸ்டர் மோதியபின் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை இணைத்து மைக்கிற்கு அனுப்பி
அதன் வழி சப்தங்களை எப்படி நாம் கேட்கின்றோமோ இதைப் போல தான் உணர்வின் ஒலிக்கற்றைகளை
நமக்குள் பரப்பப்படும் பொழுது
1.கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாதபடி ஓங்கிச் சப்தமிடுவதும்
2.சத்தமான பேச்சுகளைப் பேசுவதும் கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்களை நாம் செயல்பட ஆரம்பிக்கின்றோம்.
அப்போது அதைக் கேட்போர் இதைக்
கண்டபின் வெறுக்கும் தன்மை வருகின்றது. வெறுக்கும் தன்மை
அதிகரிக்க அதிகரிக்க கோபத்தின் தன்மை எல்லை கடந்தே செல்லும்.
யார்
மீது வெறுப்பு அதிகமாகின்றதோ அவர்களை நினைத்து நினைத்து கோபத்தின் உணர்வுகள் எல்லை
கடந்து சென்று நமது உடலில் கடுமையான நோயாக உருவாகி விடுகின்றது.
பின்
சிந்திக்கும் நிலைகள் இழந்து… அழுத்தம் அதிகமாகி விட்டால் அதனால்
இரத்த அழுத்தங்கள் அதிகமாகும் பொழுது கண்ணுக்குச் செல்லும் இரத்தத்தின் வழி இந்த உணர்வின்
தன்மை இயக்கம் கண்ணுக்குள் இரத்தம் அதிகரித்து விட்டால் “கண்கள் சிவந்து விடும்…”
சிவந்து
விட்டால் கொடூர உணர்வாகத்தான் தெரிய வரும். சில பேரைப் பார்த்தோம் என்றால் அந்த கோபத்தின் கனலைக் கண்களிலே
கண்டு விடலாம்.
சிவப்பு
நிறமாக அதன் உணர்வுகள் இயக்கும். எதைக் கண்டாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும்
வெறுக்கும் தன்மையாகி… அழிக்கும்
உணர்வாகவே வந்துவிடும்.
1.கோபம் வந்துவிட்டால் தன் பிள்ளையானாலும் அடிக்கும்
உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்துவிட்டால் கண்ணிலே கண்டாலே தட்டியெறியச் செய்யும்… நல்ல பொருள்களை உடைக்கவும் செய்வோம்.
சிந்தனைகள்
குறைந்து புலி மற்றதை இரக்கமற்றுக் கொன்று புசிப்பது போன்று நல்ல உணர்வுகள் தென்பட்டாலே… மகிழ்ச்சியாக யாராவது சிரித்தாலோ… அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு என்ற உணர்வுகளே தோற்றுவிக்கும்.
அதுதான்
நம்மை இயக்கும். இது எல்லாம் காரணம் யார்…?
1.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
2.அந்த
உணர்ச்சிக்கொப்ப அதை இயக்குவது நம் உயிர்.
ஆகவே
இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு
1.அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கும்
சந்தர்ப்பங்களையும்
2.அதை வளர்த்திடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி
உயிர் அதை இயக்கும்படி செய்து
3.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியின் தன்மையாக ஞானிகள் மகரிஷிகளைப் போன்று உருவாக்கி
4.நாம் தெளிந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்திடும்
சக்தி பெறுதல் வேண்டும்.
கோபம்
வரும் பொழுது அதைத் தனக்குள் வளர்த்து விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து அருள் வழியில் அதை மாற்றிக்
கொள்ள வேண்டும்.