ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 2, 2025

“சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்பதே மகோன்னத ஜாலம்

“சப்தரிஷிகளுடன் கலக்கல்” என்பதே மகோன்னத ஜாலம்


இந்திரஜால வித்தை என்று கர்ம சித்துக்கள் ஆரம்ப நிலை ஆயினும் அதனையும் வென்றிட்டவன் சித்தன் நிலையில் சித்துக்கள் பெறுகின்றான்.
 
ஒரு பொருளை உண்டாக்கிக் காட்டுவதும் இருக்கின்ற பொருளை வேறு ஒரு பொருளாகக் காட்டுவதும் அது ஜால நிலையே. அத்தனையும் தத்தம் செய்து கர்ம பல தியாகம் என்று காத்திட்டது வேதாள மகரிஷி கைக் கொண்ட சூட்சமம்,
 
1.ஞானக்கண் திறந்து பிடரிக்கண் பார்வை அறிந்திட்ட சக்தியாக
2.சிவாக்கினி உள்நாக்கின் மேலன்னத்தில் உருவாகி சூட்சும தேகம் அதனுள் மூழ்கி
3.உலகப் பிடிப்பின் அதி ஆவலால் பொசுங்கிட்ட தன்மையால்
4.கைக்கொண்டிடும் தியானத்திலும் உயர்வாகப் பெறுகின்ற நிலையே சித்துக்கள் கைவரத்தக்க நிலை.
 
கர்ம தியாகம் கொள்கின்றவன் மூலக்கறி சமைத்து உண்கின்ற பேரருளின் பேராற்றல் பெறுகின்றான். உணவு சமைத்து உண்ணுகின்ற கறியால் அதனைக் கொண்டு குடிலை (உடலை மட்டும்) அலங்கரித்து வைப்பதால் பலன் என்ன…?
1.அதனை உண்ணுகின்ற முறை அறிந்து
2.உடல் வளர்த்து உயிர் பேணுகின்ற தன்மை உண்டல்லவா…!”
 
ஆத்ம நிலக் கூடமும் உயிர் மூலக்கறி வளர உண்ணுகின்ற முறை உணர்ந்து சமைப்பின் பலனைச் சமைத்திட்ட உட்பொருள் தன்மையின் தொடர் வழி ஈர்த்து உண்ணுகின்ற உணவு சிதாக்கினியைக் காட்டும்.
 
அங்கு உருவாகிடும் ஜாலம் எது தெரியுமா…?
 
1.உயிராத்ம சக்தியினை இணைத்து விழுப்பொருள் என்கின்ற தன்மைக்கு ஊட்டுவித்து
2.சகலத்தையும் ஆட்டுவிக்கின்ற சப்தரிஷிகளுடன் கலக்கல் என்கின்ற சக்தியாகப் பயிர்ப்பித்தல் அதுவே மகோன்னத ஜாலம்…!
 
இது எல்லாம்இன்று புதியனவாக உணர்த்த வந்த நிலை அன்று. அத்திரி மகரிஷியும் அன்று ஊட்டுவித்ததால் பெற்றதே அனிமாது சித்துகளில் ஏழாம் நிலை.
 
ஒரு நிலை தவற விட்டதால் பிறப்பின் சூட்சுமத்திற்கு அதுவே வித்து எனும் நிலை உண்டாயிற்று. இந்த ஏழு நிலைகளுக்கும் சப்தரிஷிகளினால் சப்த மாதாக்கள் என்று பெயர் நாமப்படுத்திட்ட உருவாக்கிட்ட சக்திகள் உண்டு.
1.சகலத்திலும் சகலமாகக் கலந்து அனுபவித்தல் என்ற பேரின்ப நிகழ்ச்சி
2.அதுவே எட்டாம் நிலை…!