ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 16, 2025

தன் நிலை அறிதல் வேண்டும்

தன் நிலை அறிதல் வேண்டும்


வெப்பம் காந்தம் விஷம் இந்த மூன்று நிலை பெறும் பொழுது தான் அது இயக்கச் சக்தி என்று பொருள் வருகிறது.
1.“தனித்து ஒருவன் தான் கடவுள் என்று சொல்வது பிழை சொல்.
2.ஒன்று என்ற நிலை இல்லை.
3.நமக்குள் உயிர் இருந்து அனைத்தையும் உருவாக்கும் ஒருவனாக இருக்கின்றான் உயிர்.
4.ஆனால் ஒருவன் என்று சொல்லும் பொழுது மூன்று நிலை கொண்டு தான் நம்மை இயக்குகின்றது.
 
 நுர்ந்த உணர்வுகள் நமக்குள் பலவாக மாற்றுகின்றது. அது தன்னுடன் இணைத்து அந்த உணர்வின் தன்மை தனக்குள் சக்தியாக மாற்றப்படும் பொழுது பலவும் ஒன்றாக்குகின்றது.
 
அப்படிப்லவும் ஒன்றாக்கி உணர்வினை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஒளியின் தன்மை அடைந்தவன் அவன்.
1.அவன் எண்ணத்தில் அவன் சேர்த்துக் கொண்ட உணர்வுகள்
2.உள் நின்று கடவுளாக நின்று அந்த உணர்வின் தன்மை உருவாக்கியது அதை.
 
ன்றைய உலகம் குறுகிய உலகமாக மனிதனின் சிந்தனையைக் குறுக்கும் உலகத்தில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
 
அதிலிருந்து மீண்டிட அருள் ஒளியின் உணர்வுகளை உங்களுக்குள் சுடர் ஒளியாக மாற்றும் வல்லமை பெற வேண்டும். உபதேசித்த உணர்வினை நுர்ந்து அதனின் அறிவை உங்களுக்குள் பதிவு செய்து கொண்டு நினைவைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
 
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.இன்னொரு பிறவிக்குச் செல்லாமல் இந்த உடலில் ஆறாம் அறிவு இருக்கும் பொழுதே தடுத்துக் கொள்ளுங்கள் தப்பித்து விடுங்கள்.
 
உங்களிடம் இருந்து புகழ் பெறுவதற்காக நான் இதைச் சொல்லவில்லை குரு கொடுத்த அருள் ஒளியினை எனக்குள் சேர்ப்பித்து அதில் விளைந்த உணர்வின் ஞான வித்தை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
 
ஒரு மனிதனுக்குள் வேதனை என்ற உணர்வை விளைய வைத்து வேதனையான சொல்லைச் சொல்லும் பொழுது கேட்டறிந்தால் அந்த வித்து உங்களுக்குள் வேதனையை உருவாக்கும் தீமை செய்யும் உணர்வின் வித்தாக விளைகின்றது.
 
ஆனால் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞான வித்தினை உங்களுக்குள் உணர்த்தப்படும் பொழுது அருள் ஒளியின் சுடராக வாழும் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி இனி பிறவி இல்லாத நிலை அடையச் செய்தல் வேண்டும்.
 
இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலின் உணர்வு கொண்டு நமக்குள் உயிரின் உணர்வு கொண்டு ஒளியின் உணர்வாகச் சொந்தமாக்குவது தான் மனிதனின் ஆறாவது நிலை.
 
1.இந்தச் சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் மீண்டும் தன்னிலை அறிய முடியாத நிலைகள் கொண்டு
2.தன்னைக் காத்திடும் நிலையே வளர்ச்சி வரும் தன் நிலையை அறியும் தன்மை வராது.
 
தன்னிலை என்பது மிருகங்களோ மற்றவைகளோ தன்னிலை அறியும் நிலை இல்லை தன்னைக் காத்துக் கொள்ளும் நிலைகளே வருகின்றது. மற்றொன்று வலிமையான பின் அதனிடம் அடிமையில் சிக்காது தப்பித்து ஓடும் உணர்வுகள் தான் வருகின்றது.
1.ஆனால் வலிமையான அந்த மிருகங்கள் இதனை வென்றே தீரும்
2.அது இதை ரையாக்கியே தீரும்.
3.இரையாகும் போது இது நரக வேதனைப்பட்டு அனுபவித்தே தீர வேண்டி இருக்கும்.
 
இப்படிப் பல கோடி நரக வேதனையில் இருந்து மீண்டு வந்தவர்கள் தான் நாம்… நம்மை அப்படி மனிதனாக உருவாக்கியது நமது உயிர்.
 
1.நமக்குள் உருவாக்கிய ஈசனை மறந்து விட்டு
2.எவனோ செய்வான் என்று அவன் உணர்வை நமக்குள் சேர்த்தால்
3.அவனுக்கு நாம் அடிமை ஆகி அவனுக்கு கீழ் தான் நாம் வர வேண்டுமே தவிர அவர் இச்சைக்கே அடிமையாக முடியும்.
 
ஆனால் அருள் ஒளியின் சுடரை நமக்குள் சேர்த்தால் இருளை அகற்றி மெய்ப்பொருள் காணும் தன்மை உங்களுக்குள் கடவுளாக நின்று உங்களுக்கு வழிகாட்டும் மறந்திட வேண்டாம்…!