
விஞ்ஞான அறிவால் பேரழிவு வரும் இந்த நேரத்தில் “அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது”
“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று பாடலைப் பாடுகின்றோம். இந்த உலகமே விஷத்தன்மையில் சிக்கினாலும்
1.அகஸ்தியன் உணர்வு கலந்த இந்தத் தமிழ் நாட்டில் விஷத்தை அகற்றும் சக்தியாகப் பெறுகின்றோம்.
2.நான் இதைப் பேசுகின்றேன் உங்களைப் பெறச்
செய்கிறேன் என்றால் நான் அல்ல
3.நமது குருநாதர் காட்டிய வழியில் அந்த அகஸ்தியன் உணர்வையும்
4.அகஸ்தியன்
துருவனாகி துருவ மகரியஷியாகித் துருவ நட்சத்திரமான அந்த உணர்வுகளை
நாம் பெருக்கப்படும் பொழுது
5.விஞ்ஞான அறிவால் எத்தகைய பேரழிவுகள் வந்தாலும் “நம்
தமிழ்நாடு காக்கக்கூடிய சக்தியாக வரும்… விஷத்தை வெல்லும்
சக்தியாக வரும்…”
நீங்கள்
இதைச் சாதாரணமாகக் கேட்கிறீர்கள் என்று எண்ண வேண்டாம்…!
அருள்
உணர்வுகளைப் பெருக்கப்பட்டு இருளை
அகற்றும் வல்லமை நீங்கள் பெற வேண்டும் என்பதற்கே… குரு
எனக்குக் கொடுத்த அந்த அருள் உணர்வுகளை நீங்களும் பெருக்கி… அதை நீங்கள் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது
நம்மைக் காக்க நம் உணர்வுகள் பாதுகாப்பாக வரும்.
நியூட்ரான்
என்ற குண்டின் சக்தி அதிகமாகும் பொழுது அது அழுத்தமான நிலையில் மற்றதை
எப்படி விரட்டிச் செல்கின்றதோ இதைப் போல துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெருக்கப்படும் பொழுது
விஷத்தின் தன்மை ஒடுக்கி ஒளியின் தன்மையாக அது
உருவாக்குகின்றது.
1.அந்த உணர்வை நமக்குள் பெருக்கினோம் என்றால் நாளை
வரும் விஞ்ஞானப் பேரழிவிலிருந்து தமிழ்நாடு தப்பும்.
2.பெரிய பெரிய தத்துவ ஞானிகள் இதைத்தான் கூறுகின்றனர்.
3.அகஸ்தியனின்
உணர்வு தான் இதையெல்லாம் வெளிப்படுத்துகின்றது.
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் அகஸ்தியனுடைய
தத்துவங்கள் வரும். ஆனால் முழுமையாக யாரும் அதை விளக்க உரையாகக் கொடுக்கவில்லை. அரசர்களுக்கு உகந்ததாக மட்டுமே மாற்றி விட்டார்கள். உண்மையின்
உணர்வை அறிய முடியாது மறைத்து விட்டார்கள்.
இனி வரக்கூடிய எதிர்காலம் மிகவும் சிக்கலாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவரும் தமிழ்
மண்ணைக் காக்க வேண்டும். அதன் வழி கொண்டு உலகைக் காக்க வேண்டும்.
உலக
மக்களைக் காக்கும் உணர்வு வர வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளும் துருவ தியானத்தை
எடுத்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி இங்கே பரவச் செய்து இதன் வழி கொண்டு ஒவ்வொரு நிலையிலும்… அறியாத இருளை நீக்கும் சக்திகள் பரவி அந்த ஞானிகள் காட்டிய பண்புகள்
“இங்கிருந்து உலகைக் காத்திடும் நிலைகளாக வர
வேண்டும்…”
அன்று ஒரு சமயம் அகஸ்தியன் இந்தப்
பூமியைத் திசை திருப்பினான். அதைக் காவியங்களாகப் படைத்துள்ளார்கள். சிவனுக்கும் பார்வதிக்கும்
திருமணம் ஆகின்றது. அப்போது அனைவரும் அங்கே திரண்டு வரும்
பொழுது பூமி தாங்காது என்பதற்காக அகஸ்தியனை… “நீ தெற்கில் போ…” என்று சிவன் சொன்னார்.
தெற்கிலே
அவன் சென்ற பிற்பாடு… தன்
எண்ணத்தால் இந்த பூமியைக் கவிழும் நிலையில் இருந்து திசை திருப்பினான்...
ஒரு நிலையில் நிலைப்படுத்தினான் அகஸ்தியன்.
விஞ்ஞான
அறிவால் பேரழிவு வரும் இந்த நேரங்களில் அதே அகஸ்தியன் உணர்வு தான் தெற்கிலே வளரப் போகின்றது. அதாவது
உணர்வுகள் மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்
1.அகஸ்தியன் உணர்வைப் பெருக்கி… துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை நாமும் பெருக்கி
2.இந்த
நாட்டைக் காத்திடும் நிலை பெறுதல் வேண்டும்.
3.நாட்டைக் காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்க
முடியும்
4.மற்றவரை காக்க வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்
ஆனால்
நம்மை மட்டும் நம் வீட்டை மட்டும் தனித்துக்
காக்க வேண்டும் என்றால் பிறரின் வெறுப்பின் தன்மையைத்
தான் கவர நேரும்.
பிறர்
காக்கப்பட வேண்டும் என்ற தெளிவான நிலையில் பெற வேண்டும் என்றால் நம்மை நாம் காக்கின்றோம்… வீட்டையும் காக்கின்றோம்… நாட்டையும் காக்கின்றோம்.
இதைப்
போன்று அகஸ்தியன் உணர்வுகளைப் பெருக்கப்படும் பொழுது அவன் வாழ்ந்த வழியில் நாம்
சிந்தித்துச் செயல்படும் தன்மை வரும். ஆகவே துருவ நட்சத்திரத்தின் பேராற்றலை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.
தவறாதீர்கள்… என்னமோ ஏதோ என்று இதை அலட்சியப்படுத்தி
விடாதீர்கள்.