ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 6, 2025

“தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை” நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்

“தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை” நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்


ஒரு சமயம் குருநாதர் எம்மை ஒரு மலை மீது போகச் சொன்னார்.
1.அது அகஸ்தியன் அன்று இருந்த இடம் அவன் நீர் சக்தியைத் தனக்குள் பெற்றவன்.
2.அவன் பாதம் பட்ட இடங்களில் எல்லாம் மேகங்களைக் குவிக்கின்றது உச்சியிலே தண்ணீர் உருவாகின்றது.
 
ஆனால் மலைக்குக் கீழே தண்ணீர் இல்லை. மேலே உருவாகின்றது அங்கே தண்ணீர் உருவாகி ஒரு பக்கம் போகிறது. ஆனால் அடிவாரத்தில் தண்ணீர் இல்லை.
 
அதே சமயத்தில் ஒரு இடத்திலே குருநாதர் என்னை உட்காரும்படி சொல்கின்றார். அந்த இடத்தில் அமர்ந்து சங்கடமாக வெறுப்பாகப் பேசச் சொல்கிறார்.
 
அவன் இப்படிச் செய்கின்றான் இவன் மோசம் செய்கின்றான் இவன் இப்படித் தவறு செய்கின்றான் நீ தீமையான நிலைகளை நினைத்துச் சொல்லிக் கொண்டிரு…! என்று சொன்னார்.
 
சொல்ல ஆரம்பித்ததும் அந்த இடத்திலே மேகங்கள் குவிவது அப்படியே விலகிச் செல்கின்றது… அங்கிருக்கும் ஈரப்பசையே காணாமல் போய் விடுகிறது.
 
1.மனிதனுடைய உணர்வுகளால் மேகக் கூட்டங்கள் எப்படி விலகுகிறது…? மேகத்தை எவ்வாறு கலைக்கின்றது…?
2.னிதரின் இயக்கங்கள் எப்படி இருக்கின்றது…? என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றார்.
 
காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து உண்மைகளை அறிந்துணர்ந்து அதை நீங்களும் அறிய வேண்டும் என்று சொல்கின்றோம். காரணம் விஞ்ஞான உலகம் கடும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
 
கூடுமான வரையிலும்
1.நீங்கள் வாழும் ஒவ்வொரு ஊரிலும் அந்த அருள் உணர்வுகள் படர வேண்டும்
2.மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வுகளைப் பரப்பிப் பழகுதல் வேண்டும்.
3.நீங்கள் எடுத்துக்காட்டாக வளர வேண்டும்.
 
அத்தகைய உணர்வுகள் விளைந்து ஒவ்வொருவருமே அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும்… அவர்கள் குடும்ப நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.
 
உங்கள் உடலும் நன்றாக இருக்கும் குடும்பமும் நன்றாக இருக்கும் தொழிலும் நன்றாக இருக்கும்.
 
1.நாம் வாழும் தெரு ஊர் நாடு எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்
2.தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும்
3.தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய சக்தியாக
4.உயர்ந்த பண்புகளுடன் வளர வேண்டும் என்று நாம் கொண்டு செல்ல வேண்டும்.
 
ஆனால் அதற்காக வேண்டித் தென்ந்தியா வட இந்தியா மற்ற நாடு என்று பிரித்து விடக்கூடாது. நம் நாட்டு மக்கள் எல்லாம் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று படிப்படியாக நாம் கொண்டு செல்ல வேண்டும்.
 
உலகத்தையே காக்க முடியும். தமிழ்நாடு தான் உலகைக் காக்கப் போகின்றது.
1.இங்கே தருமத்திற்கும் நியாயத்திற்கும் செயல்பட்ட பூமி இது… அதர்ம வழிகளில் அதிகமாக இங்கே செயல்படவில்லை.
2.அதர்ம வழிகள் அதிகமாக இல்லாததால் கூடுமானவரை இங்கே மற்றவரைப் பாதுகாக்க கூடிய நிலைகள் வளர்கின்றது.
 
ஒருவர் திட்டினாலும் கூட இரக்கம் ஈகை என்ற பண்புகள் இங்கே அதிகமாக உண்டு. மற்ற இடங்களில் இரக்கம் என்ற நிலை இல்லை.
 
ஆகவே…
1.தென்னாட்டில் தோன்றிய ஞானிகளின் உணர்வுகளை
2.நாம் உலகம் முழுவதற்கும் கொண்டு சென்று பரப்ப வேண்டும்.
3.நம் உடலிலே முதலிலே பெருக்கினால் தான் நம்முடைய உணர்வுகள் இங்கே பரவும்.
 
நாடு நன்றாக இருக்க வேண்டும் என்ற நிலைகளை நாம் செயல்படுத்த வேண்டும். நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
 
கஷ்டம் என்பதைத் தூக்கி எறிந்து விட்டு அருள் ஒளி எனக்குள் படர வேண்டும் ஊர் நன்றாக இருக்க வேண்டும் வீடு நன்றாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வந்தால் அருள் உணர்வுகளை நல்ல முறையில் பெருக்க முடியும்…”
 
1.இதை நாம் ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வர வேண்டும் இந்த வழியை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்
2.ஒவ்வொருவரும் உண்மையின் உணர்வுகளை உணர்ந்து அந்த அருள் ஞானத்தைப் பெருக்கும்படி வேண்டிக் கொள்கின்றேன்.