ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2025

அசம்பாவிதங்களிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்

அசம்பாவிதங்களிலிருந்து நாம் காக்கப்பட வேண்டும்


நாம் எங்கு சென்றாலும் ஆத்ம சக்தி செய்து விட்டுத் தான் வெளியில் செல்தல் வேண்டும். தீமைகள் புகாது தடுக்கும் நிலையாக நம் வாழ்க்கையையே தியானம் ஆக்குதல் வேண்டும்.
 
தியானம் மட்டும் செய்து விட்டு
1.அதற்குப் பின் மற்றதை எல்லாம் பார்த்துப் பதிவாக்கிக் கொண்டே சென்றால் தீமைகள் தான் அதிகமாகும்.
2.தியானத்தின் பலன் முழுமையாகக் கிடைக்காது..
3.அப்போதைக்கு நன்றாக இருக்கும்… உடலுக்குள் மற்ற அணுக்கள் பெருகி விட்டால் நம்மையே அது மாற்றிவிடும்.
4.ஆகவே… வ்வொரு நிமிடமும் வாழ்க்கையையே தியானமாக்கிப் பழகுதல் வேண்டும்.
 
தெளிவாக நாம் கொண்டு வருதல் வேண்டும்.
 
ரோட்டிலே செல்லும் பொழுது முதலில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டு என் சொல் செயல் பார்வை அனைத்தும் புனிதமாக வேண்டும் என்று நினைத்துத் தான் நாம் ரோட்டிலே செல்ல வேண்டும்.
 
ஒரு வாகனமே ஓட்டுகின்றோம் என்றால் என் சொல்லும் செயலும் புனிதம் பெற வேண்டும் என்று நாம் எண்ணிவிட்டுச் செல்தல் வேண்டும்… ஒரு புனிதத் தன்மையாக வரும்.
1.அதன்படி நாம் ரோட்டில் செல்லும் பொழுது நல்ல சிந்தனைகள் வரும்
2.வித்தியாசமான நிலைகள் வந்தால் நம்மை ஒதுங்கிப் போகச் சொல்லும்.
3.அருள் உணர்வுகள் அதிகமாகி விட்டால் நமக்குப் பின்னாடி வாகனத்தில் வந்தாலும் கூட அதையும் ரிமோட் பண்ணி நம்மைக் காக்கும்.
4.நம்முடைய உணர்வுகளை அவர்கள் நுகர்வார்கள் அப்போது தன்னாலேயே விலக்கி விட்டு விடும்.
 
சில விபத்துகள் நடக்கும் பொழுது பார்த்தோம் என்றால் எல்லோரும் அதிலே சிக்கி விடுவார்கள். ஆனால் அங்கிருக்கக்கூடிய ஒரு கைக் குழந்தை எந்தப் பின்னமும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்.
 
1.காரணம் அது பயப்படுவதில்லை விபத்து என்றால் குழந்தை அது பயப்படுமா…? அடிபட்ட பிற்பாடு தான் பயப்படும்.
2.ஆனால் நாம் அடிபடப் போகும் போது பயந்து விடுகின்றோம்.
 
குழந்தையின் உணர்வுகள் ரிமோட் செய்து எந்த விதமான ஆபத்தும் இல்லாதபடி தப்பித்துக் கொள்கிறது. நிறைய விபத்துகளைப் பார்த்தால் அங்கே கைக் குழந்தைகள் மட்டும் தப்பியிருப்பதைப் பார்க்கலாம்.
1.குழந்தையின் உள்ளங்கள் வித்தியாசமான எண்ணங்கள் இல்லாது இருக்கின்றது
2.அந்த உணர்வே அதைப் பாதுகாக்கின்றது.
 
பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள்…! ட்ரெயின் ஒன்று விபத்தானது. அதிலே ஒரு பெட்டியில் உள்ள அனைவரும்ந்து விட்டார்கள். ஆனால் ஒரு குழந்தை மட்டும் அடித்த பின் ஒரு பலகை மீது அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றது சிறிதளவு கூட அதற்குப் பின்னமில்லை.
 
ஒரு சமயம் நான் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ட்ரெயினுக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.
 
ஒரு தாய் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து வருகின்றது. திடீரென்று ட்ரேயினுக்குக் குறுக்கே சென்றுவிட்டது. தாய் சுக்கு நூறு ஆகிவிட்டது.
 
ஆனால் குழந்தை அதனின் சந்தர்ப்பம் தண்டவாளத்திற்கு மத்தியிலே அப்படியே எந்த விதமான பாதிப்பில்லாமல் இருக்கிறது. தண்டவாளத்திலிருந்த கல்லில் கூட அடிபடவில்லை. அந்த அளவுக்குப் பாதுகாப்பாகத் தாயின் கையில் அப்படியே படுத்திருக்கின்றது.
 
நான் கண்ணில் நேரடியாகப் பார்த்த நிகழ்ச்சி.
 
குருநாதர் இதை என்னிடம் சொல்லி…
1.அந்தக் குழந்தையின் உணர்வுகள் அதன் (அடிபடும் என்ற) மீது அச்சமில்லை
2.இந்த சந்தர்ப்பம் எப்படி அது காக்கப்பட்டது…? என்று காட்டுகின்றார்.
 
ஆனால் அதே குழந்தை ஆ…! என்று பயந்திருந்தால் அதனுடைய கதியும் பாதிப்பாகி இருக்கும்.
 
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்வார்கள். அந்தப் பரிசுத்தமான குணமாக இருக்கின்றது. ஆகையினால் அதற்கு அந்த விபத்துகள் கூடுமானவரை வருவதில்லை.
 
ஆகவே நீங்கள் வெளியில எங்கே சென்றாலும் சரி அல்லது அங்கிருந்து வீட்டுக்குத் திரும்ப வந்தாலும் சரி
1.ஆத்ம சுத்தி செய்யும் ஒரு பழக்கத்திற்கு வந்து விட வேண்டும்.
2.அப்போது தான் நம்மை அறியாது நடக்கும் தீமைகளிலிருந்து காக்கப்பட முடியும்.