
ஆத்ம பலம் எனும் “சூடாமணி” பெற்றிடவே உரைக்கின்றோம்
மனிதன்
பெற்றிட வேண்டியது… சிந்தனைத் தெளிவு… பௌருஷம்… மனோதிடம்… உயர்வைக்
கூட்டிக் கொண்டிடும் சித்தன் நிலை ஆகும்.
நன்மை
பெறத்தக்க காரியங்களில் வெற்றி… அறிவின்
சாதுரியம்… அனைத்தும் கொண்டு,
1.”ஆத்ம பலவான் என்ற ஆஞ்சநேயன்” பெற்று வளர்த்துக்
காட்டிய அனுபவ சாரங்களை
2.கொள்கின்றவன் (கடைப்பிடிப்பவன்) ஜெபமாக உணர்ந்து கொண்டிட
3.வாயு புத்திரன் துணை கொண்டு இராமன் “சூடாமணி
பெற்றான்” என்றே மாமகரிஷி மறைபொருள் காட்டியவற்றுள்
4.மனித ஞானம் உயர் ஞான வளர்ப்பின் ஆக்கத்தில்
5.மெய்ஞான விழிப்பால்… மெய் அறிவாம் வாலறிவன் (தெய்வ சக்தி) தன்மையாகச் சுடர்தல் எனும் ஜோதித்துவ
பூரணமாக
6.தன்னைத்தான் வளர்த்துக் கொள்ளுதல் தன் அனுபவ ஞான வளர்ப்பால்… மெய்யின் முழுமை பெற்றிட
7.சூட்சுமப் பொருள்கள் விரிவாக்கம் பெறுகின்றன.
வெட்டன
மறத்தல் (உடனுக்குடன் மாற்ற வேண்டியது)
கோபத்தின் குணங்களே. மீண்டும் மீண்டும் புவி ஈர்ப்பின் பிடிப்பில் உழன்றிடவே மனிதன்
தனக்குத்தானே விரித்துக் கொள்கின்ற “மாய வலையப்பா” அது.
விண்
ஏகும் செயல் சூட்சுமம் காட்டிய வான்மீகி மாமகரிஷி… வாயு புத்திரனாகத் தன்னையே காவியப் படைப்பாக்கி…
ஆஞ்சநேயன் கொண்டிட்ட வலு வீரியச் செயலை விளக்குவதே… ககன வழி மார்க்கம்
உடல் கொண்டு பிறந்த நிலை.
1.இராமனாகிய உய(யி)ர் சக்தி
அளித்திட்டதோ கணையாழியாகக் காட்டப்படும்
2.சூரிய ஜோதியாகத் துலங்கும் ககனமணி (விண்ணில் ஒளிச்
சுடராக மிதக்கும் தன்மை).
இக்கலியின்
மனிதன் கொண்ட பேராவல் நிலையினால் மெய்யைப் பொருள் உரைப்பதிலும் தாமதம் நாம்
சுட்டிக் காட்டிடும் இந்த எளிய தியானத்தின் வழியாக…
1.உயிர் சக்தி வலுக்கூட்டும் செயலில்
2.விண் ஏகும் சூட்சுமம் உள்ளடக்கி
3.ஆத்ம பலம் எனும் “சூடாமணி”
பெற்றிடவே உரைக்கின்றோம்.
ஸ்ரீராம
ஜெயம் உரைக்கும் இடமமெங்கும் உயர்வைக் கொண்டு உயர்வைக் காட்டும் வான்மீகியாரின்
பதிவு செயல் நிலை… “சப்த நாதங்களாக ஈர்ப்பின் வலுக் கூட்டிடுமப்பா…”
ஆஞ்சநேயர்
கொண்ட விஸ்வரூபத்தில் ஜெபத்தின் அளவீடு காட்டிட முடிந்திடுமோ…? எண்ணத்தின் அளவீடு கொண்டு உணர்ந்திடப்பார்.
உணர்வுகள்
மாற்றிக் கொண்டிட்டே… அந்த வினையின் வழி ஏகல்
என்பதில்…
1.இராம காவியத்தில் நாம் கொடியது என உரைத்திடாவிட்டாலும்
2.விளக்கத்தின் பொருள் மோகமும்… கோபமும் குலத்தின்
நாசம் (இராவணன்) என்று போதனையை அறிந்து
கொண்டிடல் வேண்டும்.