
உடல் நலிந்தாலும்… நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்
மனிதனான
பின் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நாம்
எடுத்துப் பழகுதல் வேண்டும்.
அந்தச் சக்திகளை எடுத்து நாம் முன்னோர்களை விண் செலுத்திப்
பழகுதல் வேண்டும். சப்தரிஷி மண்டலங்களுடன் அவர்களை
இணைக்கப்படும் போது அங்கிருந்து உயர்ந்த
சக்திகளை நாம் பெறலாம்.
1.சப்தரிஷி மண்டல உணர்வுகளைக்
கவர்ந்தோம் என்றால் அந்த வலிமையை நாம் பெறுகின்றோம்
2.இதை வளர்க்க வளர்க்க இருளை அகற்றும் நிலையும்
வலிமையான உணர்ச்சிகள் நமக்குள் தோன்றும்
3.தீமை அகற்றும் வல்லமையும் நமக்குள் பெறுகின்றது.
4.இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை
வந்தாலும் “தாங்கும் வலிமை கொண்டு” நல்லதை
வளர்க்கும் சக்தியும் நாம் பெறுகின்றோம்.
அருள்
ஒளி என்ற உணர்வுகள் பெருகுகின்றது
எந்த நிமிடம் உடலை விட்டுச் சென்றாலும்
துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து சப்தரிஷி மண்டலத்தில் பிறவியில்லா நிலை
அடையலாம்.
சூரியன்
ஒரு காலம் அழியலாம். மனிதனுடைய உணர்வுகள் ஒளியான பின் அது அழிவதில்லை. ஏனென்றால் நஞ்சை ஒளியாக
மாற்றும் திறன் பெற்றது துருவ நட்சத்திரம்.
அத்தகைய
திறன் பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரப்படும் போது நமது உடலில் கலந்துள்ள நஞ்சை ஒளியாக மாற்றும் திறன்
பெறுகின்றோம்.
1.நஞ்சை ஒளியாக மாற்றப்படும்
பொழுது
2.நம் உடலில் இப்பொழுது அந்த உணர்வுகள் அதிகமானால்
3.இந்த உடல் நலியத்தான் செய்யும்.
வேதனை
என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது நஞ்சின் தன்மை மாறுகின்றது.
ஆனால்
1.அருள் ஒளி என்ற உணர்வைக்
கூட்டப்படும் பொழுது
2.ஐய்யய்யோ…
நான் தியானம் இருக்கின்றேனே என் உடல் நலிந்து போய்விட்டதே என்று எண்ண
வேண்டியது இல்லை.
ஏனென்றால்
1.விஷத்தின் தன்மை கொண்ட உடலின் தன்மையை மாற்றி அருள் ஒளியைக் கூட்டி இந்த உணர்வு வளர்ந்தால்
2.இந்த
உடலை விட்டுச் சென்றால் ஒளியின் சரீரம் ஆகிறது.
வேதனையை
எடுத்தால் உடல் நலிந்து வேதனையையே மீண்டும்
ஊட்டி மீண்டும் பிறவிக்கு வருகின்றோம் ஆகவே எத்தகைய வேதனைகள்
வந்தாலும் அருள் ஒளி பெற வேண்டும் என்ற உணர்வினைச் சேர்த்தால் நம்மை அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.
1.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலுவைப் பெற்றோமோ அங்கே செல்கின்றோம்
2.நம்முடைய பற்று துருவ நட்சத்திரத்தின் பால் அதிகரித்தல் வேண்டும்.
எப்போது
இருந்தாலும் நாம் இந்த உடலை விட்டுப் பிரியத்தான் வேண்டும். உடலில் வளர்த்த உணர்வு எதுவோ
அந்த நிலைக்குண்டான ஈர்ப்புக்குத் தான் அழைத்துச் செல்லும். உயிருடைய வேலை அது தான்.
ஆகவே நமது வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும்…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றும்
ஒரு பழக்கத்திற்கு வாருங்கள்.