ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2025

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

தீமைகளை நாம் துடைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்… எப்படி…?

 
உதாரணமாக நாம் ஒரு இரும்புக் கம்பியைக் காய்ச்சுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.. அதைக் கையிலே பிடிக்கிறோம் என்றால் அதன் வழி சூடு வந்துவிடும்.
1.அந்தச் சூடு கைக்கு வராதபடி ஒரு துணியைச் சுற்றினால் கொஞ்சம் தாங்கிக் கொள்ளலாம்.
2.மனிதன் தான் அந்தச் சூடு தாக்காதபடி இதைச் செயல்படுத்துகின்றான்.
3.இதே மாதிரி ஒரு வேதனைப்படும் உணர்வு நம்மைப் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் அல்லவா.
 
காரணம் அந்த வேதனை மீண்டும் நம்மைக் கீழே கொண்டு செல்கின்றது.
 
பார்க்கிறோம் அல்லவா எத்தனையோ நல்ல பேரை…! எல்லோருடைய கஷ்டத்தையும் கேட்டு அதனால் வேதனைப்படுகின்றார்கள்.
 
எல்லோருக்கும் நன்மை செய்தேனேஎனக்கு இப்படி இருக்கிறதே… கடவுள் என்னைச் சோதிக்கின்றானே என்று கடவுளைத்தான் திட்டுகின்றோமே தவிர ஏதாவது நம்மால் மாற்றிக் கொள்ள முடிகின்றதா…?
 
1.ஆனால் இந்த ஆறாவது அறிவால் நாம் மாற்றிக் கொள்ள முடியும். அதற்குச் சக்தி தேவை.
2.ஏனென்றால் இது எல்லாம் உங்கள் அனுபவத்தில் இருக்கும்…
3.ஞாபகப்படுத்தும் போது அந்த உணர்ச்சிகள் வரும் அப்பொழுது பழைய நினைவுகள் வருகின்றது
4.அதனுடன் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்துக் கொண்டு வருகின்றேன்.
5.உங்கள் குணங்களில் உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அதை நீங்கள் பிரித்துப் பார்க்கக் கூடிய நிலை வேண்டும் என்பதற்குத்தான்
6.இதைச் சொல்லி கொண்டு வந்து இணைக்கின்றேன்.
 
அதையும் நினைக்கின்றீர்கள் இதையும் சேர்த்து இணைத்தவுடன் என்ன செய்கின்றது…?
 
வேதனைகளைக் குறைக்கும். அப்பொழுது வேதனையான உமிழ் நீர் மாறுவது பலம் குறைந்து நல்ல சக்திகள் கூட வந்து நீங்கள் சாப்பிடுகின்ற ஆகாரத்தை நல்ல முறையில் ஜீரணித்து இரைப்பையில் வரப்படும் பொழுது நமக்குக் கோளாறு செய்யாது…”
 
அந்த நிலையைத்தான் உங்களுக்கு செய்து கொடுக்கின்றோம்.
 
ஆனால் இப்பொழுது நமது வாழ்க்கையில் வேதனை என்ற உணர்வே வரப்படும் பொழுது வரிசையில் வந்து
1.கடைசியில் உடல் உறுப்புகள் குறைந்து உடல் குறைந்து
2.ஆளே அடையாளம் தெரியாமல் சென்று விடுகின்றது.
 
இத்தகைய நிலையில்… உயிர் சென்றவுடன் என்ன ஆகிறது…? விஷத்தை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது இதை மாற்ற வேண்டும் அல்லவா.
 
அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் தீமையை நீக்கக்கூடிய அணுக்களை விளைய வைத்திருக்கின்றார்கள் நாம் குழந்தை பிறக்க ஆசைப்படுகின்றோம். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியின் உடலாக இரண்டு உயிரும் ஒன்றாகக்கூடிய  நிலையை ஆசைப்பட்டார்கள்.
1.அவர்கள் உருவாக்கிய குழந்தைதான் துருவ நட்சத்திரமாக இருக்கின்றது
2.அந்தக் குழந்தையில் ஒன்றை எடுத்துக் கொண்டால் தான் நமக்குச் சரியாக இருக்கும்
3.அதை ளர்த்தோம் என்றால் நமக்கு ஞானத்தை ஊட்டும்.
 
கஸ்தியனும் அவன் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரி போன்று இரு மனம் ஒன்றி அந்த பேரருள் பெற்று பேரொளி என்ற நிலையாக அடைகின்றார்கள்.
 
அந்தச் சக்திகளைத்தான் நாம் பெற்றுப் பழகுதல் வேண்டும்.

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்


நாம் பற்ற வேண்டிய முக்கியமானது எது…? இந்த உடல் சீராக இயங்க வேண்டும். உடல் சீராக இயங்கவில்லை என்றால் என்ன ஆகும்.
 
குருநாதர் இமயமலைக்கு என்னை அழைத்துச் செல்கின்றார் நடந்து போய்க் கொண்டிருக்கின்றேன் மலை மாதிரி தெரிந்தது நடந்து சென்றேன் திடீரென்று திரும்பிப் பார்த்தால் திடுதிடு என்று பனிப் பாறைகள் இடிந்து விழுகின்றது.
 
அதைப் பார்த்தவுடன்… “திரும்ப எப்படிச் செல்லப் போகின்றேன்…?” என்ற பயம் வருகின்றது.
1.பயம் வந்தவுடன் பலவீனமான எண்ணங்கள் வருகின்றது
2.குடும்பத்தில் பையன் என்ன செய்வான்…?
3.நாம் போய் விட்டோம் என்றால் என்ன செய்வார்கள்…? என்ற எண்ணம் வருகின்றது.
4.போய்விட்டால் என்ன செய்வது…? என்ற மனம் வரப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.
 
வெறும் துண்டும் வேஷ்டியும் தான் கட்டி இருக்கின்றேன். அதைத் தவிர வேறு இல்லை.
 
ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி சக்திகளை அணுக்களில் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது குளிர் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பாதை இடிந்து விழுந்தவுடன் என்ன நடக்கின்றது…?
 
பயங்கரமான ஓசையாக வருகின்றது பயம் வராமல் இருக்குமா…? நான் நிற்கும் இடமும் விழுந்து விடுமோ…! என்ற பயம் வருகின்றது. வீட்டின் ஞாபகம் வருகிறது. கிர்ர்என்று இருதயம் இறைய ஆரம்பித்துவிட்டது.
1.அப்புறம் வீட்டைக் கவனிப்பதா…? பையனை காப்பாற்றுவதா…?
2.சொத்துஇந்த உடலையே காக்க முடியவில்லை என்றால் பின் எதை வைத்துச் செய்வது...?
 
குடும்பத்தில் எல்லாம் தைரியமாகச் செய்கின்றோம். அடிக்கடி கோபமும் வேதனையும் அதிகமாகப் பட்டால் வாத நோய் வருகின்றது கை கால் இழுத்து விடுகின்றது நாம் எதைச் செய்ய முடியும்…?
 
பனிப் பாறையில் வைத்து ருத\யம் இறைத்தவுடன் நினைவுகள் மாறுகின்றதுஅப்படி ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
 
ப்பொழுதுதான் குருநாதர் காட்சி கொடுத்து மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற பாடலைப் பாடி வருகின்றார். பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? இப்பொழுது நீ போய்விட்டால் நீ எதை காக்கப் போகின்றாய்…!
 
1.கொஞ்ச நேரத்தில் நீ ஆசைப்பட்டதெல்லாம் சென்றுவிடுமே
2.மின்னலைப் போல மறைவதைப் பாராய் உன் ஆசை எல்லாம் மறைந்து விடுகின்றது.
3.எதிலே மடிந்தாயோ அங்கே தான் செல்வாய்.
4.ஆக நீ எண்ண வேண்டியது எது…?
5.அவர்களுக்கு அந்த அருள் பெற வேண்டும் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அங்கே வலுவாகும்.
 
ஆனால்நான் சொல்லிக் கொடுத்த உயர்ந்த குணங்களை எடுக்கத் தவறினால் நீ எங்கே செல்கின்றாய்…? ஏனென்றால் அந்த இடத்தில் மன உறுதி கொண்டு வருவதற்காக இப்படி அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
 
அனுபவித்துப் பெற்ற அந்த உயர்ந்த சக்திகளை நீங்களும் பெற முடியும். குருநாதரிடம் கஷ்டப்பட்டு அனுபவித்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நிவர்த்திப்பதற்குச் சக்தி கொடுக்கின்றேன். வீட்டிலிருந்தே அதைப் பெற முடியும்..
 
ஆனால் நான் காடு மேடெல்லாம் அலைந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது வீட்டில் இருந்தே அதை நீக்குவதற்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றேன்.
 
கொடுத்தாலும் கூட நானும் தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றேன்
1,எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது என்று
2.இதையே சொல்லிக் கொண்டிருந்தால் எது வரும்…? அதுதான் ரிமோட் பண்ணிக் கொண்டே இருக்கும்.
 
சிக்னல் கொடுக்கின்றார்கள்கரெக்டாக மாற்றிக் கொடுக்கின்றது. அந்த சிக்னலை நிறுத்தி விட்டால் மறுபடியும் சிவப்பு என்றால் சிவப்பைத்தானே கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
1.அப்போது நமக்கு அந்த உணர்வு டேஞ்சரான சோர்வான உணர்வைத் தான் ஊட்டும்.
2.இது எல்லாம் நன்றாகத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
மலை மீது வைத்து எனக்கு அனுபவத்தைக் கொடுத்து அதைத் தெளிவாக்குகின்றார்.
1.எப்படி இருக்கின்றது…?
2.அப்போது எடுக்க வேண்டிய முறை எது…?
3.அவர் கொடுத்த சக்தியை ஏன் எடுக்க முடியாமல் போனது…?
4.ஏன் அந்த மாதிரியானது…? ன்று காண்பிக்கின்றார்.
 
இதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறைகள் வந்தால் நீங்கள் அதை நீங்கள் மாற்றப் பழக வேண்டும் அல்லவா உங்களுக்கு இந்தப் பவரை எடுப்பதற்குச் சக்தியைக் கொடுத்திருக்கின்றோம்.
 
அந்தக் கண் கருமணிகளில் பதிவாகி விடுகின்றது. அதன் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சக்திகளைச் செலுத்தும்படி சொல்லுகின்றோம்.
 
ஆனால்
1.சோர்வான எண்ணங்கள் எடுக்கப்படும் பொழுது
2.அந்தச் சோர்வுக்குத் தக்கவாறு சோர்வடைந்து கொண்டே செல்கின்றோம்.
 
பையனுக்குக் குறைபாடு என்றால் அவனுக்கு நல்ல நிலை வரவேண்டும் எண்ணினால் அவனுக்கும்ற்சாகம் வருகின்றது நமக்கும் தெளிவாகின்றது நன்றாக இருக்கின்றோம்.
 
ஆக நமக்குள் காப்பாற்றப்பட வேண்டியது எது?
1.உங்களுக்கு அந்தப் பவரைக் கொடுக்கின்றோம்.
2.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

March 24, 2025

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்

நல்ல சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி… உயிர் அதை இயக்கும்படி செய்ய வேண்டும்


கோபத்தின் உணர்ச்சிகள் அதிகமாகும் பொழுது நமது நல்ல அணுக்களுக்குள் அது ஊடுருவி நல்ல உணர்ச்சிகளை மாற்றி ஓமுக்குள் ஓம்…!” பிரணவத்தின் தத்துவத்தை அது மாற்றி விடுகின்றது.
 
இப்படி மாற்றிக் கொண்ட உணர்வுகளால்…
1.உடலுக்குள் இருக்கும் மற்ற உணர்வுகள் அனைத்தும் இதை நுகர நேர்ந்தால் இரத்தக் கொதிப்பாக ஊடுருவுகின்றது.
2.அதன் மூலம் நல்ல அணுக்கள் இட்ட மலங்கள் மடிய நேர்ந்தால் விஷத்தன்மை கொண்ட நிலையும்
3.கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் உணர்வுகளும் நம் ரத்தங்களிலே கலந்து
4.இதன் உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது உயிரிலே ட்ரான்சாக்சன்…! அதாவது உடலுக்குள் பரவச் செய்யும் உணர்வுகள் தான் அது.
 
எப்படி ஒரு ட்ரான்சிஸ்டர் மோதியபின் கவர்ந்து அந்த உணர்வுக்கொப்ப ஒலிக்கற்றைகளை இணைத்து மைக்கிற்கு அனுப்பி அதன் வழி சப்தங்களை எப்படி நாம் கேட்கின்றோமோ இதைப் போல தான் உணர்வின் ஒலிக்கற்றைகளை நமக்குள் பரப்பப்படும் பொழுது
1.கோபத்தின் உணர்ச்சிகளை நாமே அடக்க முடியாதபடி ஓங்கிச் சப்தமிடுவதும்
2.சத்தமான பேச்சுகளைப் பேசுவதும் கொடூர உணர்ச்சிகளைத் தூண்டும் செயல்களை நாம் செயல்பட ஆரம்பிக்கின்றோம்.
 
ப்போது அதைக் கேட்போர் இதைக் கண்டபின் வெறுக்கும் தன்மை வருகின்றது. வெறுக்கும் தன்மை அதிகரிக்க அதிகரிக்க கோபத்தின் தன்மை எல்லை கடந்தே செல்லும்.
 
யார் மீது வெறுப்பு அதிகமாகின்றதோ அவர்களை நினைத்து நினைத்து கோபத்தின் உணர்வுகள் எல்லை கடந்து சென்று நமது உடலில் கடுமையான நோயாக உருவாகி விடுகின்றது.
 
பின் சிந்திக்கும் நிலைகள் இழந்து அழுத்தம் அதிகமாகி விட்டால் அதனால் இரத்த அழுத்தங்கள் அதிகமாகும் பொழுது கண்ணுக்குச் செல்லும் இரத்தத்தின் வழி இந்த உணர்வின் தன்மை இயக்கம் கண்ணுக்குள் ரத்தம் அதிகரித்து விட்டால் கண்கள் சிவந்து விடும்…”
 
சிவந்து விட்டால் கொடூர உணர்வாகத்தான் தெரிய வரும். சில பேரைப் பார்த்தோம் என்றால் அந்த கோபத்தின் கனலைக் கண்களிலே கண்டு விடலாம்.
 
சிவப்பு நிறமாக அதன் உணர்வுகள் இயக்கும். எதைக் கண்டாலும் எதைப் பார்த்தாலும் படித்தாலும் வெறுக்கும் தன்மையாகி…ழிக்கும் உணர்வாகவே வந்துவிடும்.
 
1.கோபம் வந்துவிட்டால் தன் பிள்ளையானாலும் அடிக்கும் உணர்ச்சி வந்துவிடும்
2.கோபம் வந்துவிட்டால் கண்ணிலே கண்டாலே தட்டியெறியச் செய்யும்… நல்ல பொருள்களை உடைக்கவும் செய்வோம்.
 
சிந்தனைகள் குறைந்து புலி மற்றதைக்கமற்றுக் கொன்று புசிப்பது போன்று நல்ல உணர்வுகள் தென்பட்டாலே மகிழ்ச்சியாக யாராவது சிரித்தாலோ… அவர்களைப் பார்க்கும் பொழுது வெறுப்பு என்ற உணர்வுகளே தோற்றுவிக்கும்.
 
அதுதான் நம்மை இயக்கும்.து எல்லாம் காரணம் யார்…?
1.சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் தான்…!
2.அந்த உணர்ச்சிக்கொப்ப அதை இயக்குவது நம் உயிர்.
 
ஆகவே இதை எல்லாம் நாம் தெரிந்து கொண்டு
1.அருள் உணர்வின் தன்மையை நமக்குள் பெருக்கும் சந்தர்ப்பங்களையும்
2.அதை வளர்த்திடும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி உயிர் அதை இயக்கும்படி செய்து
3.உயிரோடு ஒன்றும் உணர்வுகளை ஒளியின் தன்மையாக ஞானிகள் மகரிஷிகளைப் போன்று உருவாக்கி
4.நாம் தெளிந்த நிலையில் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தி பெறுதல் வேண்டும்.
 
கோபம் வரும் பொழுது அதைத் தனக்குள் வளர்த்து விடாதபடி உடனே ஆத்ம சுத்தி செய்து அருள் வழியில் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.