நம் சூரியக் குடும்பத்தின் மனித உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் ஜீவகாந்த ஒளித் தன்மையின் ரிஷி சக்தியைக் கொண்டு மண்டலக் கோள்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு பெற்று ஓடுகின்றது.
நாற்பத்தி எட்டுக் கோள்களும் சூரியனை மையமாக வைத்துச் சுழன்று... ஒன்றொன்றின் சுழற்சி வளர்ப்பின் தொடர்பலையில் செயலின் சக்தியைச் செயலாக்கும் தன்மையில்தான் ரிஷி சக்திகளின் செயலே... செயல் கொள்கின்றது.
அந்த ரிஷி சக்திகளின் செயல்... சக்தி பெற மனித உணர்வின் எண்ண ஜீவ அலைத்தொடர் பிம்பமுடன் செயல்பட்டால்தான்... உணர்வின் எண்ணத்தைச் செலுத்தக்கூடிய... அந்த ஜீவகாந்த ஒளியைத் தன் செயலுக்கு உணவாகப் பெற்று இயங்கிட முடியும்.
நம் சூரியக் குடும்பத் தொடரைப் போன்றே பல ஆயிரம் சூரியக் குடும்பங்களும் “எண்ணத்தின் உணர்வைக் கொண்டுதான்” செயல் கொள்கின்றன.
பூமியில் உயிரணுக்களாய் ஜீவன் கொண்ட மனிதனல்லாத உயிரினங்கள் பல வளர்ந்து மடிந்தாலும் எல்லாமே பூமியில் வளர்ந்த இயற்கையில் தன் உணவை... உள்ளதை உண்டு மடிகின்றன.
தன் தேவைக்கொத்த உணவுகளைத் தானே உற்பத்தி செய்து உண்ணக் கூடிய நிலை மனிதனைத் தவிர மற்றெந்த ஜீவராசிகளுக்கும் இல்லை. தன் உடல் அமைப்புக்கு ஒத்த பாதுகாப்புடன் பிறவியில் வளர்ந்த நிலைதொட்டு அத்தொடரின் சுழற்சியுடனே இறந்து விடுகின்றது.
ஆனால் மனிதன் தன் உணர்வின் எண்ணத்தில் உடல் உபாதையை மாற்றி அமைக்கப் பல செயல்களுக்குப் பக்குவத்தைச் செயல்படுத்திக் கொள்கின்றான்.
மனிதச் செயலின் ஞானத்தைக் கொண்டு... இவ் உடல் தேவையின் இன்பத்தைப் பெறப் பல நிலைகளை அறிந்து... அதன் தொடரில் செயலின் வழித் தொடரைச் செயற்கையில் செய்விக்கும் நிலை... “மனிதனுக்கு மட்டும் தான் உண்டு...”
தெய்வ சக்தியை உணரும் பக்குவமும்... செயலும் கொண்டு... அன்றைய சித்தர்கள் தன் ஞானத்தை இயற்கையின் சக்தியில் பல உண்மைகளை இந்த மனிதச் சரீரத்தில் எடுக்கக் கூடிய உயர் ஞானமாகப் பெற்று வளர்த்தார்கள்.
உடல் தேவையின் ஒன்றை மட்டும் குறிக்கோளாக வாழும் வழித் தொடரை...
1.ஆத்மாவின் உண்மை உயர்வை உணர்ந்து
2.ஆத்மாவை வளர்க்கக் கூடிய உயர் சக்தியைப் பெற வேண்டும்.
அதைப் பெற்றால் இவ் உடல் வாழ்க்கையில் பெறக்கூடிய இன்பத்தைக் காட்டிலும் நம் உயிர் ஆத்மாவின் உண்மைச் செயலை நாம் அறியக் கூடிய தன்மையில் ஆத்மாவில் பெறப்படும் இன்பத்தின் சூட்சுமத்தை உணரலாம்.
ஆகவே நம் எண்ணத்தை ரிஷிகளின் தொடர்புடன் செயல்படும் செயல் கொள்ளும் பக்குவத்திற்கு நம் உணர்வின் எண்ணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் இன்றைய சமுதாய உணர்வு... செயற்கையின் பிடியில் உண்மை நிலையை அறியாத நிலையில் உள்ளதனால்
1.ஜீவனுடன் கூடிய பல ஆத்மாக்கள் பல இடங்களில் உடலுடன் சமாதி நிலை கொண்டு
2.மகரிஷிகளின் தொடர்புக்காகத் தன் உணர்வின் ஜீவனை அழியா நிலை கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.
மனிதனுக்குள் உள்ள பகுத்தறியக்கூடிய உணர்வின் எண்ண ஞானத்தை உடலின் செயற்கை வாழ்க்கை இன்பத்திற்கு மட்டும் செயல்படாமல்
1.உயிராத்மாவின் உண்மை அறிந்து சகல மாமகரிஷிகளின் சக்தியை உணர்ந்து
2.இஜ்ஜீவ காந்த சரீரத்திலிருந்தே ஒளிகாந்த நிலையை பெறக்கூடிய பக்குவத்திற்கு
3.மெய் ஞானத்தின் சக்தி நிலையை உணர்ந்து செயல்படல் வேண்டும்.