ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2023

மனிதனுக்கு மட்டும் தான் “சரி… தவறு…” என்று பகுத்தறியும் ஞானம் உண்டு – அதைப் பயன்படுத்துகின்றோமா…!

காட்சி:
நாராயணன் உருவமும் அவர் வீணையை வாசித்துக் கொண்டு நடப்பதுவும் தெரிகின்றது.

விளக்கம்:
மனித உணர்வில் மோதக்கூடிய எண்ணத்திற்கு இரண்டு விதமான “சரியா… தவறா…?” என்ற குணம் ஓடுகின்றது. அதைப் பகுத்தறியக் கூடிய ஒலியைத்தான் நாராயணனாய் நமக்குச் சுட்டிக் காட்டிய தத்துவமே….!

தன் உணர்வின் பொக்கிஷமாய் எடுக்கும் ஒலி மனித ஞானத்திற்குத்தான் உண்டு.

சூரியனும் மற்றக் கோள்களும் செயல்படும் ஓட்டமெல்லாம்… அது அது ஓடக்கூடிய ஓட்டப் பாதையில் எக்கோள்களை எத்தொடரில் சந்திக்கின்றதோ… அதன் இயக்கத் தொடரில் தான் சூரியனானாலும் சந்திரனானாலும் வளர்ந்த எக்கோள்களும் அதனதன் இயற்கை நியதிக்கொப்பச் செயல் கொள்ள முடியும்.

ஆனால் மனித ஞானத்தின் பகுத்தறிவின் எண்ணம் தான்
1.எல்லாவற்றிற்கும் மேல் எண்ணத்தைச் செலுத்தும்
2.பல உணர்வைப் பெறத்தக்க எண்ண ஓட்டச் செயல் கொண்டது.

மனித குணத்தின் உணர்வின் செயலை… ஜீவகாந்த ஒளியை வலுவாக்கும் வளர்ச்சி… மனித உணர்விற்குத்தான் உண்டு.

மனித உணர்வின் எண்ண ஓட்டத்தில்… எண்ணும் வலுத்தன்மை கொண்ட நாம்
1.எண்ணத்தின் வலு பகுத்தறிவை எதில் செலுத்துகின்றோமோ…
2.அதற்கொத்த ஆத்ம வலுவைத்தான் இன்று நாம் பெறும் நியதி.