ஒருவன் தவறு செய்கின்றான் என்றால்
1.நம் கண் அதை எடுத்துக் கொடுக்கின்றது… உயிரிலே படுகின்றது… தவறு செய்கின்றான் என்று சொல்கின்றது.
2.கண்ணின் கருவிழி ருக்மணி அதைப் பதிவாக்குகின்றது (படமாக)
3.கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் அந்த மனித உடலில் இருந்து வருவதை இழுத்து ஆன்மாவாக்குகிறது (நம்மிடம் கொண்டு வருகிறது)
4.உயிரான காந்தம் இழுக்கின்றது.
உதாரணமாக நாடாவிலே (கேசட்) ஒலிகளைப் பதிவு செய்கின்றோம். நாடாவை இயக்கி “ஊசி” பக்கம் போனவுடனே நாடாவில் எது பதிவானதோ அதை இழுத்துப் பேசுகிறது (ஒலி எழுப்புகின்றது).
ஆரம்பத்தில் எல்லாம் இப்படி ஊசியை வைத்து உராய்ந்து தான் பதிவானதை மீண்டும் ஒலியாகக் கொண்டு வந்தார்கள்
1.இப்பொழுது லேசரை வைத்து அது (DRIVE) ஓட ஓட அதில் இருக்கக்கூடிய உணர்வுகளை அதை இழுத்து வெளிப்படுத்துகின்றது.
2.ஆனால் உராய்வதில்லை… நாடா தேய்வதில்லை.
லேசரை வைத்துத் தான் இப்பொழுது இயக்குகின்றார்கள் அந்த ஒலிகள் எதிலே இருக்கிறதோ அதை எடுத்துக் கொடுக்கின்றது
அதே மாதிரித் தான்
1.நாம் சுவாசிப்பதை எல்லாம் நமது உயிர் லேசராக இருந்து அதிலே பாய்ச்சிய உடனே இந்த உணர்வின் ஒலி அலைகளை எழுப்புகின்றது.
2.உடல் முழுவதற்கும் சர்குலேஷன் ஆகின்றது
3.அதனதன் குணத்திற்குப் போன உடனே அவை அவை வீரியமடைகின்றது
4.சுவாசித்ததை (அந்த உணவுகளை) எடுத்து அது நன்றாகச் சாப்பிடுகின்றது.
5.அந்த வழியிலே அது (அந்தந்த அணுக்கள்) தெம்பாக இருக்கின்றது
சொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
தவறு செய்கின்றான் என்று பார்த்த பின் அடுத்து நல்லவை எதை எடுத்தாலும் நம் உடலில் நல்ல அணுக்களுக்கு உணவு கிடைப்பதில்லை. இது மடங்கப்படும் பொழுது இங்கிருந்து இழுக்கும் சக்தி குறைகின்றது
தவறு செய்தவனின் உணர்வுகளை நுகர்ந்து இது அடைப்பட்ட உடனே
1.நல்லதை இழுக்கும் சக்தியோ பேசும் சக்தியோ இழந்து விடுகிறது.
2.பின் அதற்கு எப்படிச் சாப்பாடு கொடுப்பது…?
அதனால் தான்
1.அதைப் பிளந்து நீங்கள் கொடுக்கக்கூடிய சக்தியாக உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்
2.யாம் (ஞானகுரு) வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகள் சதா அந்த அலைகள் உங்களுக்குள் பாய்கின்றது.
கொஞ்சம் உங்கள் நினைவை “மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று விண்ணிலே செலுத்தினீர்கள்…” என்றால்
1.”டக்… என்று இதைப் பிளந்து… அந்த ஞானிகள் உணர்வுகளை அது ஓபன் பண்ணிவிடும்.
2.இது சர்குலேஷன் வரும்பொழுது அந்தத் தீமையான இயக்கங்கள் குறையத் தொடங்கும்
3.உங்களுக்குள் நல்ல நினைவாற்றல் வரும்
நீங்கள் வேண்டுமென்றால் இதைச் செய்து பாருங்கள்.
யாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி காணாமல் போன பணத்தைக் கூட கண்டுபிடிக்க முடியும்… எங்கே வைத்தீர்கள் என்ற சரியான நினைவு வரும்.
1.அந்த இடத்திற்கே உங்களை அழைத்துச் செல்லும்… இங்கே இருக்கின்றது பார் என்று
2.முதலில் தெரியவில்லை… ஆனால் இந்த உணர்வுகள் ஆட்டோமேட்டிக்காக அங்கு இழுத்துச் செல்லும்
உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
ஒரு நண்பரை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் போதும் இந்த நண்பரை இழுத்துக் கொண்டு வரும்.
ஏனென்றால் அவர் செல்லும் பாதையில் இருந்து இந்த உணர்வுகள் அவரை இயக்கி நாம் செல்லும் பாதைக்கு இழுத்துக் கொண்டு வரும்.
இயற்கையிலேயே நண்பர் மீது பற்று அதிகமாக இருந்தால் அடுத்த தெரு பக்கம் அவர் சென்று கொண்டிருந்தாலும் “நண்பரைப் பார்க்க வேண்டும்” என்று திடீரென்று எண்ணம் வந்தது என்றால் அவர் சென்று கொண்டிருக்கும் பாதையில் குறுக்காட்டி நாம் இருக்கும் பக்கம் இழுத்து வரும்
அட.. இப்பொழுதுதான் நான் உன்னை நினைத்தேன்.. நீ வந்து விட்டாயே…! என்று சொல்வோம். நண்பர் மீது இருக்கும் பற்றின் உணர்வுகள் இப்படி இயக்கும்.
இயற்கையிலேயே இந்த நிலை வரும். இதையெல்லாம் நம்மை அறியாமல் இயக்கக் கூடிய சில இயக்கங்கள்.
நாம் அந்த உயர்ந்த சக்திகளைப் பாய்ச்சப்படும் பொழுது அதை நாம் பார்க்க முடியும். இதை வளர்த்துக் கொண்டே வர வேண்டும்.
தீமை செய்யக்கூடியவர்கள் யாராவது நமக்கு அவ்வாறு எண்ணினால் அந்த உணர்வுகள் அவர்கள் உடலில் அது வரும்
1.அவர்கள் உணர்வு நம்மைப் பாதிக்காது.
2.எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும்… தீங்கு செய்ய வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள் என்றால்
3.அவர் உடலைப் பாதிக்கும்.
பாதிக்கும் பொழுது தான் நினைப்பார்கள். இந்த மனிதனை நாம் என்னவெல்லாம் பேசினோம் என்று நிச்சயம் இதை உணர்த்தும்.
1.நாம் பாய்ச்சும் மகரிஷிகளின் நினைவலைகள் இங்கிருந்து அங்கே செல்லும்
2.அப்போது நம் நினைவு அவர்களுக்கு வரும்
3.நாம் தொந்தரவு கொடுத்தோம் அல்லவா என்று. இந்தத் திருப்பம் நிச்சயம் அங்கே வரும்.
4.தீங்கு செய்யும் நிலைகளைத் தடைப்படுத்தும் சக்தியாக வரும்.
இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வரவேண்டும் அருள் வழியில் சீராகச் செல்லக்கூடியதாக நாம் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.