ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 6, 2023

பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்வதால் தான் நம்முடைய மகிழ்ச்சி அடிக்கடி பறிபோகிறது

சாமிக்கு குருநாதர் சக்தி கொடுத்திருக்கின்றார்…! நாம் எங்கே பார்க்கப் போகின்றோம்…? என்று எண்ணினால் யாம் சொல்லக்கூடிய அந்த உயர்ந்த உணர்வுகளைப் பெற முடியாது.

யாம் உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே…
1.என்னமோ அவர் குருநாதரிடம் சக்தி பெற்றார்
2.நாம் என்றைக்கு எதைப் பெறப் போகின்றோம்…? என்று எண்ணி விட்டுவிட்டால்
3.எம்முடைய உபதேசங்கள் உங்களுக்குள் பதிவும் ஆவதில்லை… உதறிவிடுகிறோம் என்று அர்த்தம்.

குருநாதர் எனக்குக் கொடுத்ததை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்… பெற முடியும் என்ற அந்த ஆசையிலே தான் இதைச் சொல்கின்றேன். அதை நீங்கள் சீராகப் பயன்படுத்த வேண்டும்.

தீமைகள் உங்களைத் தாக்குகிறது என்றால் அதை எடுக்கக் கூடாது… “அதைத் தான் உதற வேண்டும்….”

ஏனென்றால் நம்முடைய உடலில் எத்தனையோ விதமான குணங்கள் உண்டு. அந்தந்தக் குணங்கள் வரப்படும் பொழுது அதனால் ஏற்பட்ட அணுக்களும் உண்டு.

நீங்கள் சங்கடப்படவே வேண்டாம். சங்கடப்பட்டதைக் கேட்டு அத்தகைய அணுக்கள் உடலில் விளைந்திருந்தால்
1.குடும்பத்தில் கன்னா…பின்னா… என்று ஒருவர் சங்கடமாகப் பேசிக் கொண்டிருந்தால்
2.அதைக் கேட்ட பின் அவரைப் பார்த்தபின் நம் உடலில் விளைந்த அணுக்கள் அதை உணவாக எடுத்து இங்கே வந்துவிடும்.
3.அறியாமலே நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்தும்… குடும்பத்தில் சங்கடமான சொல்லைச் சொல்ல வைத்துவிடும்.

அந்த நேரத்தில் அணுக்கள் மீண்டும் தன் உணர்வை உணவை எடுக்காதபடி அதைத் தடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் சக்தி கலக்க வேண்டும் என்று பல முறை அதை எண்ண வேண்டும்.

அவ்வாறு எண்ணிவிட்டு மகரிஷிகள் அருள் சக்தி சங்கடப்பட்டவர்கள் பெற வேண்டும்… அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்… அவர்கள் வாழ்க்கையிலே நலம் பெறும் சக்தி உருவாக வேண்டும்… என்று இந்த எண்ணத்தை அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.

இதை எண்ணினால் அவர்களுக்கு அது கிடைக்கும்.
1.ஆனால் அவர்கள் எண்ணவில்லை என்றாலும் அவருடைய சங்கட உணர்வு நமக்குள் விளையாதபடி நாம் மாற்றிக் கொள்கின்றோம்.
2.இது எல்லாம் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும் அடிக்கடி நான் இதை சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

ஏனென்றால் நாம் எண்ணியது எதுவோ அதை உருவாக்குவது தான் உயிருடைய வேலை.
1.எண்ணியதைத் தான் வாழ்க்கையில் வளர்க்க முடியுமே தவிர
2.ஒருவருடைய நிலைகளை நாம் பிரதிபலன் எதிர்பார்த்து எதுவும் செய்யக்கூடாது.

ஆனால் அந்தப் “பிரதிபலன்… எதிர்பார்ப்பு…” எதுவாக இருக்க வேண்டும்…?

நாம் பார்த்த குடும்பம் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அனைத்தும் நலம் பெற வேண்டும் அவர்கள் மகிழ்ச்சி பெற வேண்டும் இந்த குடும்பம் பேரானந்தம் பெற வேண்டும் நாம் எண்ணி அதை அவர்களுக்குப் பாய்ச்சும் போது
1.அதன் வழி அவர்கள் வாழ்க்கையில் செயல்பட்டு அங்கே நல்லதனால்
2.அதைக் கண்டு நாம் மகிழ வேண்டும் அதைத் தான் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

மற்றவர்கள் சந்தோஷப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டும். “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்ற நல்ல சொல்லைச் சொல்ல வேண்டும். குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷப்பட வேண்டும் என்று அதை “நம்முடைய எதிர்பார்ப்பாக” வளர்க்க வேண்டும்.

1.அந்த எதிர்பார்ப்பு நல்ல உணர்வின் அணுக்களாக நமக்குள் உருவாக்கும்…
2.அத்தகைய அணுக்களாக உடலில் விளையும் தீமைகள் நமக்குள் புகாது தடுக்கச் செய்யும்

ஆனால் பற்றை வேறு பக்கம் வைத்து. எதிர்பார்ப்பை அதிலே வைத்தோம் என்றால் என்ன ஆகும்…?

ஒருவர் மீது நமக்குப் பற்று அதிகமாக இருந்தால் அவர் என்ன தப்பு செய்தாலும் “சரி” என்று சொல்வோம்

அதே சமயத்தில் பிடிக்காதவர்களாக இருந்து என்னதான் நல்லதைச் செய்தாலும் உடனே “குறை கூறும் நிலைகள் தான்” நமக்குள் வரும். அவர்களைப் பார்த்த உடனே இந்த மாதிரி எண்ணங்கள் தான் வரும்.

இதைப் போன்ற நிலையில் இருந்து அந்த விஷத்தை ஒடுக்கும் ஆற்றலை நாம் பெற வேண்டும்
1.ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று
2.நமக்குள் அந்தத் தீமைகள் வளராது தடுத்தல் வேண்டும்.