ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 25, 2023

பக்கத்தில் இருந்து புத்தி சொன்னால் அது ஏறாது… ஆத்மார்த்தமாக அருள் உணர்வைப் பாய்ச்சினால் தான் அது ஏறும்

குடும்பங்களில் சிக்கல் வரும்…? எப்படி…? சில நேரங்களில் சிலர் பிடிவாதமாக இருப்பார்கள். அது அதிகமானால் நாம் அதை நுகர்ந்தால் நமக்குள்ளும் வந்துவிடும்

1.அதனால் பகைமை தான் வரும்
2.வெறுப்பு தான் வளரும்…!

அதை மாற்றுவதற்கு என்ன வழி…?

வெறுப்பு உணர்ச்சிகள் வரும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டும்.

பிடிவாதமாக இருப்பவருக்கெல்லாம் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல்கள் பெற வேண்டும் என்று
1.நம் மனதில் வலிமை பெற வேண்டும்
2.இப்படி வலிமை பெற்றால் “அவர்கள் உணர்வு நம்மை இயக்காது..” (இது முக்கியமானது)

அதாவது நாம் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை…! அவர்கள் உணர்வு அதைக் கேட்க விடாது தடுக்கின்றது என்றால் “அந்த உணர்வு” நமக்குள் வந்து நம்மை இயக்காது தடைப்படுத்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால்… அவருடைய உணர்வுகள் “எல்லை கடந்து செல்லப்படும் பொழுது…” சிந்திக்கும் ஆற்றல் அங்கே வரும்.

அவர்கள் திருந்த வேண்டும்… அவர்கள் தெளிந்து வாழ வேண்டும்…! என்ற உணர்வை நாம் வளர்த்துக் கொண்டு அந்த உணர்வின் வலுவை நாம் ஏற்றுக் கொண்டால்
1.நாம் சொன்னதை அவர் கேட்காத நிலை சென்றாலும் கூட அங்கே அவர்களை சிந்திக்கும்படி செய்யும்
2.அப்பொழுது நாம் எடுத்த உணர்வு அவரை திருத்தி வாழ வழி வகுக்கும்.

இல்லை என்றால் பெரிய நியாயஸ்தர் மாதிரி அவர்களுக்கு அடிக்கடி நாம் புத்திமதி சொன்னால் விஷத்திலே பாலைப் போட்டது போன்று தான் ஆகும். அந்த விஷம் என்ற நிலையில் என்னதான் நாம் சொன்னாலும். நல்ல உணர்வுகளை எடுக்காது
1.எதிர் உணர்வு…
2.அவர் உடலுக்குள்ளும் “எதிர் நிலை” வரப்படும் பொழுது அதை உணர்வார்கள்.

இல்லையென்றால் அந்த விஷத்தின் தன்மை குடும்பமே பரவும் எல்லோருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் இதைப் பேசப் பேச விஷத்தன்மைகள் எல்லோருக்குள்ளும் பரவி நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்தையும் அந்த விஷம் மாற்றிவிடும்.

இதைப் போன்ற நிலைகள் வரும் போதெல்லாம் நாம் ஆத்ம சுத்தி செய்து அவர்கள் வெறுப்பான செயல்களைச் செய்தாலும் கூட அவர்கள் திருந்தி வாழ வேண்டும் தெரிந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் செலுத்த வேண்டும்.

இப்படி…
1.தூரத்தில் இருந்து செலுத்தப்படும் பொழுது தான் அது வரும்
2.சமாதானப்படுத்திப் பக்கத்தில் எடுத்து வைத்துக் கொண்டு சொன்னால் அந்த விஷம் தான் வேலை செய்யும்
3.நாம் சொல்லும் இந்த சமாதானம் அவர்களுக்குள் ஏறாது.

அந்த உணர்வுகள் தன்னாலே அந்த உணர்வின் இயக்கத்தை மாற்றவில்லை என்றால் கோடி பேர் வந்தாலும் திருத்த முடியாது.
1.அவர்கள் தெரிந்திட வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
2.ஆனால் பகைமையாக மாற்ற கூடாது.

ஒவ்வொரு குடும்பத்திலும் இது நடந்து கொண்டேதான் இருக்கின்றது..!

தியானம் செய்ய வேண்டும் என்று பெண்கள் வெளியில் சென்றால் ஆண்கள் நீங்கள் ஏன் தியானம் செய்கிறீர்கள் என்பார்கள். அதே சமயத்தில் ஆண்கள் தியானத்திற்குச் சென்றால் பெண்கள் அதைச் செய்யக்கூடாது என்பார்கள்.

இதைப் போன்று அவரவர்கள் உணர்வுக்கொப்ப மனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் நல்ல நிலைகள் செல்லாது தடை வந்து கொண்டே தான் இருக்கும்.

இது போன்ற காலங்களில் எல்லாம் “மன உறுதி கொண்டு” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் பெற வேண்டும் என்று
1.எல்லா அணுக்களுக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அனுப்பி தீமைகள் புகாது தடுத்து
2.எந்தத் தீமையையும் ஈர்க்காதபடி நாம் தடைப்படுத்த வேண்டும்

இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்…!