ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 4, 2023

நமக்குக் கிடைத்த “நல்லதைப் பற்றி” அடிக்கடி எண்ணுகிறோமா…? “கெட்டதைப் பற்றி” அதிக நேரம் எண்ணுகிறோமா…!

வாழ்க்கையில் எத்தனையோ அழுக்குகளை (தீமைகளையும் கஷ்டங்களையும்) பார்க்கின்றோம்… வருகிறது. “அது வந்து கொண்டே இருக்கும்…”

வீட்டையும் உடலையும் உடையையும் சமையல் செய்வதையும் மீண்டும் மீண்டும் தூய்மைப்படுத்துகின்றோம் அல்லவா. அது போல் அதை நாம் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
1.அதற்குத் தான் கடுமையான ஆயுதமாக ஆத்ம சுத்தியைக் கொடுத்துள்ளோம்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்க எடுக்க உங்கள் பற்று துருவ நட்சத்திரத்துடனே இணைகின்றது... சப்தரிஷி மண்டலங்களுடன் இணைகின்றது
3.பற்று துருவ நட்சத்திரத்தின் மீது வரப்படும் பொழுது பூமியில் பற்றற்றுப் போகின்றது.

இதை எல்லாம் நாம் செய்து பழக வேண்டும். ஏனென்றால் இப்படிச் சென்றவர்கள் தான் சப்தரிஷி மண்டலத்தில் உள்ளார்கள்.

இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை இந்த உடலை வைத்து நாம் நிரந்தரமான சொந்தத்தை உருவாக்க வேண்டும். பிறவி இல்லா நிலை என்னும் அந்தச் சொந்தத்தை நாம் கொண்டாட வேண்டும்.

பகைமை அகற்றும் அருள் உணர்வுகளைச் சேர்த்து விட்டால் என்றென்றும் நமக்கு அது உறுதுணையாக இருக்கும்.

1.விண்ணிலிருந்து வரும் நஞ்சினை அகற்றி அதை ஒளியாக மாற்றிடும் திறன்
2.இந்த உடலை வைத்துத் தான் நாம் அதை மாற்றிக் கொண்டு வர வேண்டும்.

இன்றைய செயல் நாளைய சரீரம்… நேற்றைய செயல் இன்றைய சரீரம். ஒவ்வொன்றும் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்பத்தான் தீமைகள் அகற்றிடும் உணர்வாக… நல்லதையே வளர்த்து நல்லதையே எண்ணிப் பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வந்துள்ளோம்.

இதை எதற்காகச் சொல்கிறொம் என்றால்
1,இந்தக் காற்று மண்டலம் ஒரு சாக்கடையாக இருக்கின்றது
2.இதற்குள் அருள் ஞானிகள் உணர்வுகள் மிதந்து கொண்டிருக்கின்றது
3.அதை வலு கொண்டு நமக்குள் எடுத்து வாழ்க்கையில் வரும் தீமையைப் பிளக்க வேண்டும்
4.தீமையான உடலைப் பிளக்கும் சக்தி பெற வேண்டும்

உடலை விட்டுப் பிரிந்து சென்றால் தீமையைப் பிளந்து தீமையைப் பிளந்திடும் அருள் சக்தி கொண்டு பிறவி இல்லா நிலை அடைய உதவும். ஒவ்வொருவரும் இதைப் பெறும்படி வேண்டிக் கொள்கின்றேன்.

ஆகவே யாம் (ஞானகுரு) கொடுத்த சக்தியை விரயமாக்காதபடி செயல்படுத்த வேண்டும் டிவி ரேடியோ அலைகளை ஒலி/ஒளிபரப்பு செய்கின்றார்கள்.

அந்தந்த ஸ்டேஷனைத் திருப்பி வைத்தால் அது வேலை செய்கிறது. இது போன்று நாம் தொழில் வியாபாரத்தில் எத்தனையோ பதிவுகளை நமக்குள் வளர்த்து வைத்திருக்கின்றோம்

அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் கொடுக்கல் வாங்கலில்…
1.சரியானபடி நமக்குப் பணம் கொடுத்தவர்களைப் பற்றி நினைப்பு வராது
2.பணத்தைத் திரும்பத் தராமல் இழுத்தடித்தவருடைய நினைவு தான் அதிகம் வரும்
3.பாவிப் பயல் இந்த மாதிரிச் செய்தான்… என்னை ஏமாற்றுகின்றான்… என்ற “அந்த ஸ்டேஷனைத்தான் நாம் அடிக்கடி திருப்பி வைப்போம்…”

இதற்கு தகுந்தாற் போல் நம் பக்கத்து வீட்டுக்காரர்கள் எதாவது செய்தால் அவர்கள் மீது நினைவு வரும். சொந்த பந்தங்கள் மீது ஏதாவது குறைபாடுகள் இருந்தால்… அவர்கள் நல்லது செய்திருந்தாலும் கூட குறைபாடுகளைத் தான் எண்ணிக் கொண்டிருப்போம்.

இதுவே வரிசையில் வந்து கொண்டிருக்கும்.

உதாரணமாக ஏதாவது குறைகளைப் பற்றி மட்டும் சிறிது பேசிப் பாருங்கள்...
1.அந்தக் குறை... இந்தக் குறை... என்று எல்லாக் குறையும் வரிசையில் வரும்… நல்லது நினைக்கவே வராது
2.குறையைப் பேசிப் பேசி... “என்ன உலகம் போ...!” என்று கடைசியில் இப்படித்தான் பேசுவோம்
3.இந்த உணர்வின் இயக்க ஓட்டங்கள் இப்படித்தான் வரும்.

நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது பாருங்கள். ஒருவரை மோசமானவன்... மிகவும் மோசமானவன்...! என்று சொல்லிப் பாருங்கள். யாரிடம் சொன்னோமோ நம் சொன்னதைக் கேட்ட பின் அடுத்து அவரும் இதே போன்று மோசம் என்று சொல்ல ஆரம்பிப்பார்.

கடைசியில் “எல்லாவற்றையுமே மோசம்...” என்று சொல்ல ஆரம்பிப்போம். இது வரிசையில் வரும்... இந்த உணர்வுகளின் தொடர்வரிசை இப்படித்தான் வரும்.

இப்படி வரும் போது
1.உடனடியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து
2.நம் உயிரிடம் வேண்டி அவனிடம் சொல்லி அந்தத் தீமைகளை நீக்கிப் பழக வேண்டும்.

ஏனென்றால் நம்மை உருவாக்கியது... உருவாக்கிக் கொண்டிருப்பது அவன் தான். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.