ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 30, 2023

“உயிரைப் போன்றே ஒளியாக மாற வேண்டும்” என்று விரும்புபவர்களுக்கு…!

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று நாம் ஆசைப்பட வேண்டும்.

“தினம் தினம்” நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறச் செய்வதை “ஒரு தலையாயக் கடமையாக நாம் வைத்துக் கொள்ள வேண்டும்…”

1.உடலுக்கு வேண்டிய உணவை எப்படி அவ்வப்போது உட்கொள்கின்றோமோ
2.அதைப் போன்று நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவ அணுக்களுக்கு
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறச் செய்ய வேண்டும்.

27 நட்சத்திரங்களும் புவியின் ஈர்ப்பிற்குள் அதனதன் அலைகள் கவரப்படும் போது மின்னலாகப் பாய்கின்றது. சில நட்சத்திரங்களின் அலைகள் எந்தப் பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ மண்ணுடன் கலந்து அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கொப்ப வைரங்களாக விளைகின்றது.

காற்றில் இருப்பதைப் புவி ஈர்ப்பின் தன்மை கொண்டு கவர்ந்து வைரங்களாக அது விளைகின்றது.

அது போன்றே துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க
2.உயிரைப் போன்றே ஜீவணுவாகி… (ஒளியான) உயிரணுவாக மாறிவிடும்.

கோடிக்கணக்கான ஜீவணுக்கள் நம் உடலில் இருப்பதை உயிரைப் போன்ற உயிரணுக்களாக…
1.ஒளியான அணுக்களாக மாற்றும்போது ஓர் ஒளியின் உடலாகவும்
2.எத்தகைய விஷத்தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் நம் உயிர் பெறுகின்றது.

இதை நாம் அறிந்து கொள்தல் வேண்டும்.

நட்சத்திரங்களுடைய அலைகள் பூமிக்குள் கவரப்பட்டு அது மண்ணுக்குள் கருவுற்று வைரங்களாக விளைந்த பின் அது வெடித்துத் தனித் தன்மையாக வெளி வந்துவிடும்.

இதைப் போன்று தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் உடலில் இருக்கக்கூடிய ஜீவணுக்களுக்கு உணவாகக் கொடுத்தபின்… நாளுக்கு நாள் அது விளைந்து வெளிப்படும் பொழுது… அறிவின் வளர்ச்சி… அறிந்திடும் வளர்ச்சியாக இங்கே வருகின்றது. அதாவது…
1.ஒரு வெளிச்சத்தைக் கண்டபின் பொருள் தெரிவது போன்று
2.நமது ஜீவணுக்களின் துணை கொண்டு கண்ணின் வளர்ச்சி கொண்டு
3.அதன் உணர்வின் அறிவை அறிந்திடும் ஞானமாக வளர்கின்றது.

நட்சத்திரங்களின் துகள்கள் மின்னலாக மாறி பூமிக்குள் பட்ட பின் சிறுகச் சிறுக வைரமாக விளையப்படும் பொழுது ஒளியின் உடலாக அது பெறுகின்றது… நட்சத்திரங்கள் மின்னுவது போன்று…!

நமது உயிரும் மின்னணு போன்று தான் இயங்கிக் கொண்டே உள்ளது. அந்த உயிரின் இயக்கத்தைக் கொண்டு உடலில் உள்ள ஜீவணுக்களும் இயங்குகின்றது.

மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி ஆவதை அதற்குண்டான இணைப்புகளைக் கொடுத்து நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறோம். நமக்கு வேண்டிய உபகரணங்களை அந்த மின்சாரத்தால் (மின் அணுக்களால்) இயக்கி அதன் வழி அனைத்துப் பயன்பாடுகளையும் பெறுகின்றோம்.

அது போல் நம் உயிரும் சூரியனின் தொடர்பு கொண்டு தான் இயங்குகின்றது. ஒவ்வொரு ஊரிலும் சப்ஸ்டேஷனை (EB SUB-STATION) எப்படி நாம் வைத்திருக்கிறோமோ அதைப் போன்று நம் உயிரும் அந்த நிலை பெறுகின்றது.

அதாவது…
1.சூரியனின் துணை கொண்டு அந்த மின் கதிர்கள்
2.உயிர் வழி நம் உடல் அணுக்களை எல்லாம் இயக்குகின்றது.

இருப்பினும்… இது அனைத்தையும் அறிந்திடும் தன்மை கொண்டு வாழ்க்கையில் வரும் விஷத்தை எல்லாம் மனித உடலில் இருந்து வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற்றவன் “அகஸ்தியன்...”

அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி கணவன் மனைவி இருவரும் ஒரு மனமும் ஒரு மனமாகி… அருள் மணம் பெற்று… உயிரைப் போன்றே உயிர் அணுக்களை வளர்த்து… ஒளியின் உடலாக இருக்கும் அந்தத் “துருவ நட்சத்திரம்…” விஷத்தை ஒளியாக மாற்றிடும் தன்மை பெற்றது.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது அதனுடைய துகள்கள் பூமியிலே பட்டால் அதன் இனத்தின் தன்மை கொண்ட விஷங்கள் தனக்குள் வளர்ந்து வைரங்களாக விளைகிறது.

அந்த வைரத்தைத் தட்டி நாம் சாப்பிட்டால் மனிதனை உடனடியாகச் சுருட்டி விடும்… அவ்வளவு கடுமையான விஷம்…! ஆனாலும் அந்த விஷத்தின் உணர்வை ஒளியாக நாம் காண முடிகின்றது… வெளிச்சமாகத் தெரிகின்றது.

1.இன்றைக்கும்… விஷம் தான் உலகை இயக்குகின்றது
2.சூரியனும் விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பமாகி இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது
3.நமது உயிருக்குள்ளும் விஷத்தின் தாக்குதலாகி அதனால் துடிப்பின் தன்மை ஏற்பட்டு இயங்கிக் கொண்டுள்ளது
4.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தன்மை கலந்திருப்பதால் தான் அது இயக்க அணுக்களாகவும் ஜீவ அணுக்களாகவும் மாறிக் கொண்டுள்ளது

இதை எல்லாம் நாம் அறிதல் வேண்டும்.

உதாரணமாக
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எளிதில் யாரும் கவர முடியாது
2.குரு துணை இல்லாது அதை எடுப்பது மிகவும் கடினம்,

ஆனால்
1.அத்தகைய கடும் விஷத்தையும் தாங்கிக் கொள்ளக்கூடிய குருவை (ஈஸ்வரபட்டர்) நாம் பெற்றுள்ளோம்
2.விஷத்தை ஒளியாக மாற்றிக் கொள்ளும் பருவத்தை நமது குருநாதர் ஏற்படுத்தி உள்ளார்.
3.அதைத்தான்… அந்தக் கடும் விஷத்தையும் ஒளியாக மாற்றும் திறன் உங்களுக்கும் பெறச் செய்து கொண்டிருக்கிறோம் (ஞானகுரு)

ஒவ்வொரு நாளும் நாம் நுகரும் துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் உயிரின் முகப்பில் ஈர்க்கப்பட்டு உடல் முழுவதும் எப்படிப் படர்கிறதோ இதே போல்
1.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய (அணுக்கள்) அந்த ஜீவணுக்களின் முகப்பின் இயக்கத்தில்
2.அதன் துணை கொண்டு இந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கத்தை ஈர்க்கச் செய்கின்றோம்.

குருநாதர் எனக்கு எப்படி அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாரோ அதே போல் உங்களில் இயக்கச் செய்யும் போது “நமது குருநாதராக” ஆகின்றார்.

ஏனென்றால் அவர் வழியில் நாம் தொடரப்படும் பொழுது “அதனுடைய தொடர்வரிசை” வருகின்றது குரு வழியில் இதைப் பெற்றால் ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.