ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 29, 2023

தொழில் செய்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது

தொழிலில் நஷ்டமானால் “நஷ்டம் ஆகிவிட்டது…” என்று எண்ணத்தை விடுத்துவிட்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் ஈரத்த நாளங்களிலே அது கலக்க வேண்டும் எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று சிறிது நேரம் வலுவாக்க வேண்டும்.

அந்த நஷ்டத்தால் ஏற்பட்ட வேதனையை துருவ நட்சத்திரத்தின் சக்தியைன் எடுத்து அப்புறப்படுத்திய பின்
1.நமக்குச் சிந்திக்கும் திறன் வருகின்றது
2.அடுத்து எப்படி அதை சமாளிக்க வேண்டும் என்ற ஞானமும் வருகின்றது
3.அந்த ஞானத்தின் வழி கஷ்டத்தை நிவர்த்திக்கும் சக்தி நமக்குள் வருகின்றது.

நஷ்டம் வருகிறது என்றால் இவ்வாறு செய்யாதபடி நம் நண்பர்களிடத்தில் இதைச் சொன்னாலோ அவரும் திரும்ப அந்த வேதனைப்படும்படி தான் சொல்வார்.

அந்த வேதனையை மீண்டும் சொன்ன பிற்பாடு
1.அடுத்து அவர் ஏதாவது நமக்கு உதவி செய்ய வேண்டும் என்றாலும்
2.பணம் கொடுத்தால் திரும்ப வருமா…! என்று சந்தேகப்பட்டு “என்னிடம் இப்பொழுது பணம் இல்லை…” என்று சொல்லிவிடுவார்

காரணம்… அவரை பாதுகாத்துக் கொள்ளத்தான் அவ்வாறு செய்வார். அந்தச் சமயத்தில் நம்முடைய சிந்தனைகள் (கஷ்டம் என்று சொன்னது) நமக்கு நாமே தண்டனை கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

இதைப் போன்ற பழக்கங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும் நம்முடைய சொல்…
1.கஷ்டங்களைச் சொல்லாதபடி இந்தக் காரியங்கள் இப்படி நடக்க வேண்டும் என்று கேட்டுப் பழக வேண்டும்
2.அப்பொழுது நமக்கு உதவி செய்யும் பண்புகளை அங்கே உருவாக்கும்

உங்கள் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

சில பேர் “தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் எண்ணி… இந்த மாதிரி ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு… எனக்குப் பணம் கொடுங்கள்…!” என்று கேட்டபின் அவருக்குக் கொடுத்தால் அடுத்து அவரிடம் திரும்ப வாங்க முடியாத நிலை ஆகிவிடும்.

நம் உடலின் ஈர்ப்பிற்குள் வட்டத்தில் இருந்த இந்த உணர்வுகள் தான்
1.அந்த (நமது) உணர்வே நம் உடலுக்குள் எதிரியாக மாறி எதிரிகளை உருவாக்கிக் கொண்டு
2.நமக்கு ஏற்படும் நன்மைகளை வரவிடாதபடி தடுக்கும்

இதைப் போன்ற உணர்வுகளிலிருந்தெல்லாம் தப்புவதற்கு ஆத்ம சுத்தியை நீங்கள் அவசியம் கடைப்பிடித்துப் பழக வேண்டும். காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ அவரவர்கள் வசதியைப் பொறுத்து எடுத்து வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.

தொழில் நஷ்டம்…! என்று சொல்வதைக் காட்டிலும் அந்த அருள் சக்தியைப் பெற்று வளர்த்துக் கொண்ட பின் அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற ஞானமும் சிந்திக்கும் ஆற்றலும் வரும்.

நம்மிடம் பொருள் வாங்கியவர் அதற்குண்டான பணம் வர வேண்டும் என்றாலும்
1.அவர்களுக்கும் அந்த வருமானம் வர வேண்டும் என்று நாம் எண்ணினால்
2.நமக்குள்ளும் அந்தத் தொந்தரவு வருவதில்லை… நாம் எண்ணும்போது அவர்களுக்கும் நல்ல நிலை ஏற்படும்.

ஆனால் கொடுத்தேனே… சமயத்தில் திரும்பக் கொடுக்கவில்லையே…! என்று வேதனைப்பட்டால் இந்த வேதனை அவருக்குள்ளும் பாய்ந்து அவருடைய சிந்தனையைக் குறைக்கச் செய்து… அவருடைய வரவும் குறையும்… அதனால் நமக்கு வர வேண்டிய பணமும் தடைப்படும்.

இதை எல்லாம் அனுபவத்தில் தெரிந்து கொள்ளலாம்

ஆகவே வாடிக்கையாளர்கள் எல்லோரும் நல்ல நிலைகள் பெற வேண்டும்… பணத்தைத் திரும்ப கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று நாம் தியானித்தால் அவர்கள் வளர்ச்சி பெறுகின்றனர்… “நம் பணம் தேடி வரும்…”

உதாரணமாக கடன் கொடுத்தவர்களில் கொஞ்சம் “போக்கிரித்தனம்” செய்பவர்களாக இருந்தால்
1.அவன் கேட்டால் கொடுக்கவில்லை என்றால் உதைப்பான் என்று தெரிந்தால் பணம் அவர்களுக்கு முதலில் தேடிப் போகும்
2.ஆனால் நீங்கள் இரக்கம் ஈகை என்று இருந்தால் உங்களிடம் “சொல்லிக் கொள்ளலாம்” என்று வரும்.

அவர்களுக்குப் பணம் போகும்… உங்களுக்குச் சங்கடம் தான் வரும். பார் இவ்வளவு தூரம் செய்தேன் கேட்டவுடனே அவனுக்குக் கொடுக்கின்றான் நமக்குக் கொடுக்கவில்லையே…! என்று மீண்டும் வேதனை தான் வரும்.

ஆகவே பணம் தராதவரைப் பற்றி அந்த வேதனையை நாம் அதிகமாக எடுக்க எடுக்க அவருக்குத் தப்பி வந்தாலும் கூட மீண்டும் கடன் கொடுக்க முடியாத நிலை ஆகிவிடும். அவரும் இருப்பதைத் தட்டி பறித்துச் சென்று விடுவார். அடுத்து நம் காசைக் கூடப் பெற முடியாத நிலை ஆகிவிடும்.

இதை நீங்கள் இப்போது புரிந்து கொண்டீர்கள் அல்லவா…!

ஆகவே ஆத்ம சுத்தி செய்து அவர்களுக்கும் பணம் (வருமானம்) வர வேண்டும்… எல்லோருக்கும் பணத்தைத் திரும்பக் கொடுக்கக்கூடிய திறன் பெற வேண்டும் என்று எண்ணுங்கள். இப்படிச் செய்யச் செய்ய…
1.உங்களுக்கு மன உறுதி கிடைக்கின்றது
2.தொழிலும் மன சங்கடம் இல்லாதபடி நடத்த முடிகின்றது
3.அதற்கு வேண்டிய வரவு வரும்
4.மனம் வலிமை பெறும்போது உங்களைத் தேடி அந்தக் காசு வரக்கூடிய சந்தர்ப்பமும் வரும்.