எப்படி ஒவ்வொரு கோளத்தின் சந்திப்பினால் கால மாற்றங்கள் இப்பூமியின் பருவ காலம் பெறுகின்றதோ அதைப் போன்று இச்சரீரமும் பெறுகின்றது.
பூமியின் பருவ காலத்தில் சில அதிர்வு நிலைகளால் கடல் பொங்குவது... சூறாவளி... காற்று வீசுவது... எரிமலை வெடிப்பது... பூகம்பம் வருவது...! இத்தன்மை போன்று மனித உடலின் தன்மைக்கும் ஏற்படுகின்றது.
கால மாற்றத்தில் பிற மண்டலங்களின் சந்திப்பில் பூமி ஈர்க்கும் அலையின் தன்மையில் அதிர்வு ஏற்படுகின்றது. அதைப் போன்றே....
1.இம்மனித ஜீவ சரீரத்தில் எண்ணத்தின் உணர்வுகள் ஏற்காத் தன்மை மோதும் பொழுது
2.அதிர்வு நிலைகளை இச்சரீர இயக்கமும் பெறுகின்றது.
இந்தப் பூமியில் எந்த நிலை கொண்டெல்லாம் கால மாற்ற சீதொஷ்ண நிலை மாறுபடுகின்றதோ அதற்கொப்ப இந்த உடல் பிம்பச் செயல்களில் “உணர்வுகள் மாறும் போது..”
1.இச்சரீர ஆரோக்கியத் தன்மையிலும்
2.எண்ணத்தைச் செயல்படுத்தும் ஞான வழியிலும்... பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உடனே மனிதன் நான் எண்ணியது ஓன்று... நடப்பது ஒன்றாக உள்ளது... “எல்லாம் விதியின் செயல்...!” என்று எண்ணி விடுகின்றான்.
எண்ணத்தின் வாழ்க்கைத் தொடரில் செயல் கொள்ளும் ஞானம்... ஓர் மாற்று நிலைக்குச் செயல்படும் பொழுது... உணர்வின் உந்தலால் உடலையே பாதிக்காத தன்மைக்குத் தன் ஞானத்தைக் கூட்டி... மதியைக் கூட்டி வென்று
1.சம உணர்வின் சாந்த குணமுடன்
2.இச்சரீர இயக்கத்தின் அணு சக்திகளை வீரியமாக்கி
3.உயிராத்மாவை ஒளிரச் செய்தல் வேண்டும்
மணலை அதி உஷ்ணமாக்கிக் கண்ணாடி செய்து தன் பிம்பத்தையும் எதிர்படும் எதனையும் அக்கண்ணாடியில நாம் பார்க்க முடிகின்றது.
அதைப் போன்று இந்த உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் சம உணர்வுபடுத்தும் செயலில் விண்ணிலிருந்து வரும் மின் காந்த ஒளி அலையை எடுத்து உணர்வின் எண்ணத்தால் வீரிய சக்தியாக உடலிலே வளர்த்திட வேண்டும்.
1.அத்தகைய உயிராத்மாவின் சமைப்பினால்...
2.மனிதன் “ஞான திருஷ்டி” என்ற சகல சித்து நிலையையும் பெற முடியும்.