ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2022

வாழ்நாள் முழுதும் உடலைக் காக்க முயற்சிப்பதற்குப் பதில் தன் உயிராத்மாவைக் காக்க வேண்டும் - ஈஸ்வரபட்டர்

 

இன்று விஞ்ஞானத்தில் மருத்துவத்துறையிலும் மற்ற தொழிலிலும் அணுக் கதிர்கள் செயல்படுத்தக் கூடிய நிலைக்கும் ஜீவ காந்த சரீரத்தின் வளர்ச்சியில் இச்சரீர செயலுக்கும் உயிர் அணுக்களின் செயல் எப்படிச் செயல் கொள்கிறது...?

மருத்துவ விஞ்ஞானத்தின் மூலமாக... மனித உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு... அதாவது நோயின் தன்மை அறிய உடலிலிருந்து வெளிப்படும் சிறு நீர் மலம் கபம் இவற்றையும் உதிரத்தையும் எடுத்துப் பரிசோதனைக்கு உட்படுத்த சில கால கட்டத்தில் அதிலுள்ள உயிரணுக்கள் பிரியா நிலையில் ஆராய்ந்து அதனுடைய தன்மையை அறிகின்றார்கள்.

உடலிலிருந்து வெளிப்பட்டு... “சில மணி நேரங்களுக்குள் அதைப் பரிசோதனைப்படுத்தினால் தான்...” அதிலுள்ள உயிரணுக்களின் தன்மையைக் காண முடிகின்றது.

செயலுடன் கூடிய ஜீவ ஓட்டத்தில் உயிர் கொண்ட உயிரணுக்கள்...
1.ஜீவ ஓட்டம் அற்றுப் பிரியும் பொழுது... ஈர்ப்பின் ஓட்ட நிலை இல்லாமல்
2.அந்த உயிரணு பிரிந்து காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றதல்லவா...?
3.அதைப் போன்று தான் இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்தாலும்
4.இஜ்ஜீவ ஓட்டப் பிடிப்பு மாறியவுடன் காற்று மண்டலத்தில்
5.உயிரும் இந்த உடல் அணுக்கள் யாவையும் சுழலும் நிலை ஏற்படுகின்றது.

இதனுடைய தொடரிலிருந்து... உடலில் ஏற்படக்கூடிய சில வகை வியாதிகளுக்கு விஞ்ஞான மருத்துவ முறையில் மின் கதிரியங்களைச் செலுத்தி...
1.வளர முடியாத சில அணுக்களை வளர்க்க...
2.அதற்குகந்த மருந்தைச் செலுத்தி... அதற்குகந்த வீரியத்தைத் தர (உயிரணு வளர)
3.கதிரியக்க முறை விஞ்ஞான மருத்துவத்தில் மனிதன் முன்னேறி இருக்கின்றான்.

தன் ஞானத்தால் இந்த உடலில் வளரும் உயிரணுக்களுக்கு அடுத்த நிலை பெறக்கூடிய நிலையை... “வீரிய மருத்துவத்திலும்... மற்ற பல செயலிலும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய விஞ்ஞானம்...
1.தன் ஞானத்தைக் கொண்டு மனிதன் இன்று பறக்கும் நிலைக்கும்
2.எண்ணியதைச் செயலாக்கும் உயர் தெய்வ நிலைக்குச் செயலாக்கி இருக்கலாம்.