ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2022

ஞானக்கண் என்ற நம்முடைய கவன ஈர்ப்பு நரம்பு - ஈஸ்வரபட்டர்

 

நாம் மேல் நோக்கிப் பார்த்து எடுக்கின்ற சமமான உணர்வு கொண்டு வளர்க்கப்படும் எண்ணத்தின் உணர்வைப் புருவ மத்தியில் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நான்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று எண்ணி எடுக்க வேண்டும்.

அத்தகைய நுண்ணிய அலைகளைச் சுவாசித்து எடுக்கும் பொழுது நம் எண்ணங்கள் அனைத்தும் ரிஷிகளின் எண்ணமுடன் கலக்கின்றது.

ஆக… சப்தரிஷிகளினால் இன்று இப்பூமியில்… எப்பூமியிலிருந்து தான் வளர்ந்து வலுக்கூட்டி… இன்றும் தன் வளர்ப்பின் வளர்ப்பாக மனித எண்ணத்தின் பகுத்தறிவை வழி நடத்துகின்றனரோ… அவர்களின் எண்ணமுடன் நம் எண்ணத்தை செலுத்தி… அனுதினமும் தியானித்து அந்தச் சக்திகளை நாம் ஈர்க்க வேண்டும்.

அத்தகைய தியான ஒளி ஈர்ப்பினால்
1.இச்சரீரத்தை இயக்கவல்ல ஆத்மாவில்…
2.அன்று சித்தர்கள் காட்டிய ஞானக்கண் என்ற கவன நரம்பின் பொட்டுத் தன்மையின் மூலம்
3.நாம் எடுக்கும் சுவாசத்தால் எந்த ரிஷிகளின் அலையை எடுக்கின்றோமோ
4,அவ்வலையைச் சிறு மூளைக்குச் செலுத்தி
5.ஆத்மாவின் செயலுக்கு வலுத் தருகின்ற புருவத்தின் நடு மையத்தில் பொட்டில்
6.கவன நரம்பு செயல்படுகின்ற “பருப்பு போன்று… சிறு அளவில் செயல்படுகின்ற கருவி…”
7.இப்பூமியின் சமைப்புக்கு முன் நாம் எடுக்கின்ற நேரடி ஈர்ப்பால்
8.அதற்குகந்த எண்ணத்தின் வளர்ச்சியின் வலுவை அந்தக் காந்த நுண் அலைகள் மூலம் பெற முடியும்.

இயல்பாக… நம் கண்ணின் ஒளியில் எதிரில் காணும் பொருள்களை எல்லாம் சூரியனின் ஒளியோ மற்ற ஒளிகளோ உள்ள வெளிச்சத்தில் தான் கண் பார்த்துப் படம் எடுக்கின்றது.

ஆனால் இக்கவன நரம்பில் பொட்டின் பதிவு பெறும் காந்த நுண் அலையின் வளர்ச்சி கொண்ட வலுத் தன்மையினால் விழியை மூடிக் கொண்டே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தும் நிலைகளை
1.இருட்டிற்குள் எப்படி வெளிச்சத்தைக் காட்டி அதிலுள்ள உண்மைகளை இவ்விழி படமெடுத்து அறியும் இன்றைய நிலையை
2.வலுப்படுத்தப்பட்ட ரிஷிகளின் ஒளியிலிருந்து எடுக்கப்பட்ட காந்த நுண் அலைகள் கொண்டு
3.இச்சரீரத்தில் வளருகின்ற பல கோடி அணுக்களின் வீரியத் தன்மை உணர்வையும்
4.இப்பொட்டில் பதிவாக்கப்பட்ட ஒளித் தன்மை வளர்ச்சியினால்
5.விழியை மூடிக் கொண்டே பிரகாசத் தன்மையில் நாம் காணலாம்.

இதன் வலு வளர வளர… நாமிருக்கும் இடத்திலிருந்தே எண்ணத்தின் உணர்வைச் செலுத்தி மண்டலத்தின் உருத்தன்மையும்… உருப்பெறும் மாற்றுத் தன்மைகளையும் அறிய முடியும்.

நடக்க இருக்கும் நிலைகளையும் முன் கூட்டியே அறிந்திட முடியும்…!