ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2022

உடலிலும் மனதிலும் வலியோ வேதனையோ வந்தால் எப்படி மாற்றுவது…?

 

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீங்கள் பெற அந்தப் பயிற்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன் (ஞானகுரு).

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று அடிக்கடி ஏங்கித் தியானிக்க வேண்டும்.

நம் எண்ணத்தில் தெரிந்து கொண்ட உணர்வுகளுக்கு எல்லாம்… நம் உடல் உறுப்புகளில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும் கண்ணின் நினைவைச் செலுத்தி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
2.கல்லீரல் மண்ணீரல் சிறுகுடல் பெருங்குடல் தசை மண்டலம் தோல் மண்டலம் இதயம் நுரையீரல் போன்ற உறுப்புகளுக்கு
3.அருள் சக்திகளை நாம் செலுத்திப் பழகுதல் வேண்டும்

இது போன்ற ஒரு பழக்கத்திற்கு முதலில் வந்து விட்டால் அடுத்து இதற்கு முன் நாம் சேர்த்துக் கொண்ட உணர்வுகளை எளிதில் தூய்மைப்படுத்திவிடலாம்.

ஏனென்றால் நாம் சுவாசித்த உணர்வுகள் அனைத்தும்
1.இரத்தத்தின் வழி சென்று மற்ற உறுப்புகளில் அந்தக் கரு முட்டை அடைகிறது.
2.அங்கே தேங்கி விஷத்தன்மை கொண்ட அணுக்களாக அங்கே உருவாகத் தொடங்கும்.

அத்தகைய அணுக்கள் உருவானால் அந்த உறுப்புகளில் வேதனையோ அல்லது வலியின் தன்மையோ அல்லது மடிந்து போகும் தன்மையோ வரும்.

காரணம் விஷத் தன்மை கொண்ட அணுக்கள் உருவானால் நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அது பலவீனம் அடைந்து அங்கே வலியும் வேதனையும் வரும்.

வேதனை என்றாலே நஞ்சு. வேதனை என்ற உணர்வை வளர்த்து விட்டால் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்திற்கும் விஷமான நிலைகளாகப் பாய்ச்சப்பட்டு அதில் எத்தகைய உணர்வோ அதற்குத் தக்க இந்த உடலை விட்டு உயிர் செல்லப்படும் பொழுது மாற்று உடலை உருவாக்கும்… மனிதனல்லாத உடலைத்தான் உருவாக்கும்.

நாம் நினைக்கின்றோம்…
1.எப்படியோ காசைப் போட்டு இப்படிப் போட்டுத் தப்பித்துக் கொள்ளலாம்… உறுப்புகளை மாற்றித் தப்பித்துக் கொள்ளலாம் என்று...!
2.ஆக… சிறிது நாள் வாழலாம்… பின் நாம் எங்கே செல்கிறோம்…? என்று சொல்ல முடியாது

ஆகவே அருள் ஞானிகள் உணர்வை நாம் பெற்று இனி வரக்கூடிய காலங்களில் அசுர குணங்களை அகற்றிடும் சக்தியாக நாம் வளர்த்துப் பழகுதல் வேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெற்று அந்த அகஸ்தியனின் உணர்வைப் பெற்று அந்த உணர்வுகள் உலகமெங்கும் பரவ வேண்டும் உலக மக்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணித் தியானிக்க வேண்டும்.

1.எந்த அளவிற்கு உலக மக்கள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோமோ
2.அந்த அளவிற்கு நமக்குள் அது வளர்ச்சி அடையும்.