ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 2, 2022

மனித உயிராத்மா பெற வேண்டிய “வீரியத் தன்மை” எது…? - ஈஸ்வரபட்டர்

 

கரடு முரடான காடுகளில் புல் பூண்டே இல்லாத இடத்திலும் மழை நீர் பட்டவுடன் பூமி எடுத்த அந்தந்த இடங்களின் அமில நிலைக்கொப்ப ஜீவ வளர்ச்சி புல் பூண்டுகள் வளருகின்றன.

வளர்ந்தாலும் நீர்ச்சத்துக்குகந்த அமிலத் தன்மை கொண்டு காற்றின் உராய்வு வளர்ச்சிக் காலம் முற்றிய பிறகு அதன் நிலை மீண்டும் மக்கி விடுகின்றது.

அதன் நிலை மக்கினாலும்...
1.அவ்வமிலக்கூறு ஜீவன் பெற்று மக்கிய தன்மை
2.எவ்வுணர்வு கொண்டு ஜீவ வித்து பிறந்து வளர்ச்சியுற்று மாற்றம் கொண்டதோ
3.அம்முலாமுடன் கூடிய உயிரணு காற்று மண்டலத் தொடர்ச்சியில்
4.தனக்குகந்த அமில உயிர் வித்தாய்ச் சுழற்சி பெற்று
5.மீண்டும் தன் பிறப்பிற்கு ஏற்ற கால அமிலத் தொடர்புடன் பிறிதொரு வீரிய வளர்ச்சிக்கு வருகின்றது

ஒன்று உயிர் பெற்று... கரைந்து... மீண்டும் ஜீவிதம் பெற்று... மாறி... மாறி... வரும் தொடர்பின் வீரியத்தால்... செயல் நிலை கூடுகின்றது.

அதைப் போன்று மனித சரீரப் பிம்பத்தில் எல்லா நிலைகளையும் அறிந்து... சொல்லாற்றிச் செயலாற்றும் உயர் வளர்ச்சியை... உணர்வின் எண்ணத்தைக் கொண்டு... மனித உயிர் ஆத்மாவை வீரிய நிலைப்படுத்த “இரண்டு நிலை மார்க்கங்கள் உண்டு...!”

மனித எண்ணத்தின் உணர்வை எதில் வீரியத் தன்மை காட்டுகின்றோமோ அதனுடைய வளர்ச்சியின் வேகம் நிச்சயம் வளருகின்றது.

வழி 1: (தெய்வீகம்)
வளரும் வேகத்தை... தெய்வமான உயர்வு நிலைக்கு உணர்வின் எண்ணத்தில் ஏற்படக்கூடிய குணநிலைக்கொப்ப நற்குணத்தின் சமைப்பாய்ச் சரீர பிம்பத்தையே வளர்த்துக் கொள்ளலாம்.

அந்த உயர் ஞானத்தின் வழியில்
1.இப்பூமியின் பிடிப்பிலிருந்து விடுபடும் நிலையாக
2.விண்ணிலிருந்து வரும் உயர் காந்த மின் சக்திகளை
3.சரீர பிம்பத்தின் எண்ண உணர்விற்கு வீரிய உரமாய் செலுத்தி
4.அதில் வளரும் வளர்ச்சியின் பலனாகத் தெய்வ நிலை பெற்ற
5.இறைத்தன்மை கொண்ட வளர்ப்பின் வளர்ப்பான ஒளி நிலை பெறலாம்.

வழி 2: (மீண்டும் பிறவி)
உணர்வின் எண்ணத்தை வீரியத்தன்மையில் செலுத்தினாலும்... “அறியாமல் செய்யும் மாற்றுத் தன்மையில் சிக்கும் நிலையினால்” எவ்வொலி கொண்டு எண்ணம் பிறந்து உணர்வின் செயல் வெளிப்படுகின்றதோ... அதற்குகந்த ஒலி வட்டத்தில் சிக்க நேரலாம்.

அதே ஒலி நிலைக்கொப்ப
1.பூமியின் பிடிப்பில் ஜீவனற்ற வலு நிலை வளர்த்த உயிர் ஆத்மாக்களின் ஒலி ஈர்ப்பும் (ஆவி உலக ஆன்மாக்கள்)
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலியுடன் செலுத்தப்படும் உணர்வு வட்டத்தில் சிக்கிய தன்மையினால்
3.எண்ணத்தினால் எவ்வீரியத் தன்மை கொண்ட செயல் உணர்வில் மனிதன் செல்கின்றானோ
4.அவ்வீரிய முலாமும் காற்றலையின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள ஒத்த நிலையும் கூடி இத்தொடர்பு வலுப் பெறுகின்றது.

இப்படி... மனிதன் செய்யும் எச்செயலாய் இருந்தாலும்... உணர்வின் நிலைக்கொப்ப வீரியத் தன்மை... இஜ்ஜீவ காந்த சரீரத்தில் செலுத்தும் எண்ண நிலைக்கொப்ப... அச்செயலின் வளர்ச்சி வளர்ந்து கொண்டே இருக்கும்.

மாந்திரீக மார்க்கமும்... பக்தி மார்க்கமும்... வாழ்க்கைச் செயல் தொழில் எம்மார்க்கமாயினும்... ஜீவ ஆத்மாவின் உணர்வின் எண்ண நிலைக்கொப்ப அதற்குகந்த வலுத் தன்மையினால் மீண்டும் மீண்டும் வலுவாக்கினால் “இன்றைய உலக நிலை போல் தான் இருந்திடும்...!”

அதனால்... பல மோதலில் பல கோடி ஆண்டுகளாய் வளர்ச்சியுற்று...
1.எண்ணத்தின் உணர்வைக் கொண்டு வளர்ந்து வந்த உயர் ஞான வாழ்க்கையை
2.உயர் சக்தியின் தெய்வ நிலை பெறும் வழித்தொடரை உண்மையின் வழி அறியாமல்
3.வர இருக்கும் பூமியின் மாற்றத்திற்கொப்ப இச்சரீரத்தை அடகு வைக்கும் நிலை தான் முடிவாகும்.

இதிலிருந்து மீண்டு மனித நிலை உயர வேண்டுமானால்... தன்னைத் தான் உணர்ந்து... தான் பெற்ற இம்மகத்துவமான உயர் ஞானத்தை அறியவல்ல எண்ணத்தின் உணர்வை...
1.நற்குண வழியில் செலுத்திடல் வேண்டும்
2.இறை நிலை பெற்ற ரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்

தன்னுள் உள்ள உயர் ஆத்ம உயிர் இறை சக்தியின் துணை கொண்டு
1.மகரிஷிகளின் சக்திகளை வளர்த்துத் தன் ஞானத்தின் உயர்வைக் கொண்டு...
2.சலிப்பு சோர்வு சங்கடம் போன்ற நிலைகளையும்
3.வாழ்க்கையில் மோதும் எத்தகைய மாற்றுத் தன்மைகளையும்
4.தன் உணர்வின் எண்ணத்தைப் பாதிக்காத வண்ணம்...
5.சாந்தமான வீரத்தைக் கொண்டு மாற்றி அமைக்க வேண்டும்.வ்