ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 3, 2022

இன்னல் எது என்றே அறியாதவராக ஒரு பித்தனைப் போன்று வாழ்ந்தவர் தான் நம் குருநாதர்

 

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அவர் வாழ்க்கையில் ஒரு பித்தனைப் போன்று
1.இன்னல் என்ற நிலையை அவர் அறியாது
2.இன்னல் எது…? என்றே அறியாத நிலைகள் கொண்டு
3.இன்னல் என்ற நிலையை அவருக்குள் அறியாத நிலையிலே
4.இன்னலைப் போக்கிடும் ஒளியின் சுடராக அவருக்குள் விளைய வைத்து
5.விண்ணின் ஆற்றலை அவருக்குள் ஒளியின் சுடராக மாற்றி
6.ஒளியின் சுடராகப் பெறும் நிலையை அவர் பித்தனாக இருந்து எனக்குள் (ஞானகுரு) ஆழப் பதியச் செய்தார்
7.அருள் ஞான வித்தை வளர்க்கும் முறையையும் வகுத்துக் கொடுத்தார்.

விண்ணின் ஆற்றல் மிக்க நிலையை மகரிஷிகளால் வளர்க்கப்பட்ட அருள் ஞான வித்துக்களை
1.அதை நமக்குள் எவ்வாறு பருகிட வேண்டும்…?
2.அதை நமக்குள் எவ்வாறு வளர்த்திடல் வேண்டும்…?
3.அதை நமக்குள் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்…? என்று உணர்த்தி
4.அந்த ஞான வித்தை எல்லோரும் வளர்க்க வேண்டும் என்றும்
5.அதன் மூலம் அருள் ஞானப் பசியை எல்லோருக்கும் போக்க வேண்டும் என்றும்
6.அதை எனக்குள் உருப் பெறச் செய்து உணர்த்திக் காட்டினார்.

அதை எல்லாம் நான் (ஞானகுரு) அவர் நினைவு கொண்டு... அவருடைய துணை கொண்டு தான் அறிய முடிந்தது… வளர்க்க முடிந்தது.

காரணம்... ஒவ்வொரு மகான்களும் மகரிஷிகளும் தனக்குள் வளர்த்துக் கொண்ட அருள் உணர்வுகள் தன் இன மக்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எல்லோரும் மகிழ்ந்திட வேண்டும் என்றும் தனக்குள் விளைய வைத்த அந்த உயர்ந்த உணர்வுகளை ஞான வித்துக்களாக நமக்குள் பதியச் செய்தார்கள்.

ஆனால் காலத்தால் அந்த அருள் ஞானியின் வித்துக்களை அது முளைக்காது தடைப்படுத்தி விட்டோம்.. விரயமாக்கி விட்டோம்.
1.அருள் ஞான வித்துக்கள் அனைத்தும் முளைக்காது சென்ற அந்தக் காரணத்தால்
2.அருள் ஞானிகள் உணர்வுகள் தேங்கி அதற்குண்டான ஊட்டச்சத்து இல்லாது போய்விட்டது.

அப்படிப்பட்ட இந்த நேரத்தில் மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளாற்றலால் அதனைப் பெறும் பாக்கியமாக அமைந்தது.

ஆகவே குரு கொடுத்த அந்த அருள் ஞான சக்தியின் துணை கொண்டு
1.எண்ணத்தால் அதை நமக்குள் வளர்த்திடுவோம்
2.இருளை நீக்கிப் பொருள் காணும் நிலையாக நமக்குள் வளர்த்திடுவோம்.
3.அருள் ஞானப் பசியைப் போக்கிடுவோம்.
4.அருள் ஞானிகளுடன் ஒன்றிடுவோம்.

அந்த மகரிஷிகள் விளைய வைத்த அந்த அருள் ஞான வித்தை நாம் பருகுவோம்... அது நமக்குள் பெருக வேண்டும்… நாம் பெருக்கிட வேண்டும். அதன் மூலம் எல்லோருடைய அருள் ஞானப் பசியையும் போக்கிட வேண்டும்.