ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 10, 2022

மனிதச் செயலின் வீரியம் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்டு விட்டது - ஈஸ்வரபட்டர்

 

விஞ்ஞானத்தில் இன்று வரையிலும் இப்பூமியில் ஒலி அலைகளையும் ஒளிக் காட்சிகளையும் காற்றலையில் கலக்கவிட்டுப் பதிவு செய்கின்றார்கள்.

மேலும் இப்பூமிக்கும் மற்றக் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிய... விஷமான அமிலத்தை (CHEMICALS) உலோகத்தில் செலுத்திப் பிற மண்டலங்களிலிருந்து இப்பூமியின் தொடர்பிற்கு வலுவாக்க... வளர்ச்சியுறும் உண்மை நிலை அறிய... விஞ்ஞான சாதனைகளைச் செயல்படுத்தவும்... மனிதனின் எண்ண உணர்வு செயல் கொள்கின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் மனித சரீர ஜெனிப்பில் சாதாரண வாழ்க்கை நிலையில் ஆயுட்காலம் அதது எடுக்கும் தன்மை கொண்டு எப்படியும் சராசரி அறுபதோ எழுபதோ எண்பதோ ஆண்டுகள் தான் இருக்கப் போகின்றது.

விஞ்ஞானத்தால்... பிற மண்டலங்களுக்குச் செல்லவும் அங்குள்ள உண்மை நிலையறியவும் கருவிகளின் நிலையால்
1.இன்றைய கருவியின் செயற்கைக்கு மின் காந்த அலையை
2.இயற்கையில் மனிதனின் உணர்வு எண்ணத்தை வளர்க்கவல்ல உயர்காந்த நுண்ணிய மின் அணுக்களை
3.விஞ்ஞானிகள் செலுத்தும் செயல் சாதனைக்கு அனுப்பப்படும் செயற்கைக் கோள்களினால் கிடைக்கப் பெற முடியாது...!

இன்று மனிதனால் பெறப்பட்டு வளரும் உயர் காந்த மின் அலையின் செயல்... இக்கோள்களில் (SATELLITES) செலுத்தப்பட்டு செயற்கையில் ஒலி பரப்பப்படும் தொலைக்காட்சிகளில் ஒளிப் படங்கள் வண்ண ஒளிப் படங்கள் ஒலி அலை வானொலிப் பெட்டி தொலைபேசி மற்றும் பல மின் ஒளிச் சாதனங்களுக்காகப் பிரித்து எடுக்கின்றனர்.

இவ்வாறு மின் காந்த அலைகளைப் பிரிப்பதினால் மனித எண்ண உணர்விற்கு நேரடியாகக் கிடைக்கப் பெற வேண்டிய... உயர் ஞான எண்ணத்தை அறியவல்ல... தன்னைத்தான் உணர்ந்து செயல்படச் செய்யும் இயற்கையான சக்திகளைப் பெற முடியாத நிலை உருவாகி விட்டது.

தனக்குள் உள்ள இறை சக்தியை.. எண்ணத்தின் உணர்வால் வலுவாக்கி வளரும் ஜீவித சரீரத்தை “இச்செயற்கை அலைகள்... சூழ்ந்து விட்டது...!

ஜீவ சரீரத்தில் ஜீவ சரீரமுடன் மனிதனுக்கு மனிதன் பேசப்படும் உறவு படுத்திக்கொள்ளும் உணர்வின் செயல் வளர்ப்பிற்கு...
1.வானொலியில் கேட்கப்படும் ஒலி அலைக்கும்
2.தொலைக் காட்சியில் காணும் ஒளி அலைக்கும்
3.இச்சரீரத்தின் உணர்வைச் செலுத்தும்பொழுது
4.அதே உணர்வைத்தான் இச்சரீரம் எடுக்க முடியும்.

செடிக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைத் தனக்குச் சத்தாக எடுத்து வளருகின்றது. அதுவே காய்ச்சிய நீரை... ஆற வைத்து ஊற்றினாலும் அச்செடிக்கு வேண்டிய ஜீவ சக்தி கிடைக்காது. அதனால் அத்தாவரம் வளர்வதில்லை.

அதைப் போன்று இச்சரீர உணர்விற்கு செயற்கை மின் காந்த ஒலியைக் கேட்கும் உணர்வினால் இச்சரீர ஜீவ ஆத்மாவானது...
1.தன் உயர்வு நிலைக்குத் தேவையான எண்ணத்தின் உணர்வு எடுக்கும் கவன நரம்பின் பொட்டின் பதிவிற்கு
2.உயர் காந்த மின் ஜீவ அலை உணர்வை எடுக்கவல்ல வளர்ச்சி நிலை குன்றி விட்டது.

ஏனென்றால் எண்ணத்தின் உணர்வுகள் எவ்வலையை எடுக்கின்றதோ அதே நிலையைத்தான் இச்சரீர நிலையில் வளர்க்கும் நிலை உள்ளது.

இன்றைய மனித உணர்வின் எண்ணங்களே... செயற்கை அலையை அதிகமாகக் கேட்டு... பார்த்து... பழக்கப்படுத்தி வளர்த்துக் கொண்ட வலுவினால்... எதனையும் உணரும் பக்குவம் மாறி... இவ்வாத்மாவையே செயற்கை அலையுடன் செயல்படுத்தும் முறைக்கு மாறி விட்டது.

ஆகவே..
1.இவ்வாத்மாவை இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு அடகு வைக்கும் வாழ்க்கையையும்...
2.தன்னைத்தான் உணராமல் பித்தனாக வாழும் மனிதச் செயல்களையும்...
3.தன் ஆறாவது அறிவின் துணை கொண்டு மாற்றி ரிஷிகள் காட்டிய மெய்யை வளர்க்க வேண்டும்.

இப்பூமியின் மண் வளங்கள் அது எடுக்கும் அலை ஒன்று. அதே மண் வளத்தின் தொடர்பில் வளரும் தாவரம்... தன் உணவை எடுத்து வளர்ந்து பலன் தருகிறது. ஆனால் எண்ணமில்லாத உணர்வு... செயலுடன் அது வளருகின்றது.

மிருகத்தின் நிலையோ... தனக்கு வேண்டிய உணவைத் தேடவும் புசிக்கவும் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் உறங்கவும் தன் உணர்வின் இச்சையில் தேவையை அறிந்து கொள்ளவும் தன் ஐந்தறிவைக் கொண்டு வாழ்கிறது.. வளர்கிறது.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இக்குறுகிய நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் பெருக்கத்தால் தன்னைத் தானே உணராத நிலைக்குச் சென்று செயற்கையின் பிடிப்பிலேயே சிக்குண்டு விட்டான்.

1.செயற்கை ஒலி அலைகளையும் தொலைக்காட்சி ஒளி அலைகளையும்
2.தன் எண்ணத்தின் உணர்வில் பதியவிடும் அலையினால்
3.மனிதனுக்குக் கிடைத்துள்ள ஆறறிவு பொக்கிஷமான பகுத்தறியும் உயர் ஞானத்தையே
4.தவற விடும் நிலைக்கு இன்று கொண்டு வந்து விட்டார்கள்.

இது தான் இன்றைய உண்மை நிலை...!