சாதாரணமாக ஒரு பானையில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டோமானால சில நாட்களில் அந்நீர் வழுவழுப்புத் தன்மை கூடி பாசி பிடிக்கின்றது.
“அவ்வழுவழுப்பு நிலை” ஏற்பட்ட பிறகுதான் அடுத்த வளர்ச்சி நிலை ஒவ்வொன்றிலுமே வளருகின்றது. “பிசின்” போன்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் அதன் ஜீவத்தன்மை முதிர்வு நிலை கொள்கின்றது.
அதுவே ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி காய்ச்சும் பொழுது அப்பாத்திரத்திற்கு அடியில் மண் போன்று படிவங்கள் வெள்ளையாகப் படிந்து விடுகின்றது.
இதைப் போன்று...
1.மனித உணர்வில் எடுக்கப்படும் அலைத் தொடர்பின் உணர்வு
2.சரீரம் சமைக்கும் நிலை கொண்டு ஆத்ம அலையின் “படிவமாகி விடுகின்றது...”
ஆத்மாவின் வண்ணத் தன்மை கொண்டு பிரகாச நிலை ஒளி சக்திகளை இச்சரீர சமைப்பினால் மனிதன் பெற்றானானால் மனித சக்தியில் சித்து நிலை பெற முடியும்.
மகரிஷிகளின் உயர் காந்த அலையை...
1.உணர்வின் எண்ணம் கொண்டு “விழி கொண்டு ஒளி பார்த்து இச்சரீரத்தின் உணர்வில் எடுக்கும் ஜெப முறையினால்...”
2.மனித உணர்வின் சஞ்சலமற்ற சம உணர்வு வளர்ச்சியின் தியானத்தின் முறை அறிந்து...
3.தன்னைத்தான் தான் உணரக்கூடிய வழி அறிந்தானானால்...
4.தன் வாழ்க்கை செயலில் அமைதியையும் தன் ஆத்மாவின் உயர்வின் வழியையும் ஒவ்வொருவரும் பெறலாம்.
நம் தேவைக்குகந்த நெல்லைப் பயிரிடுகின்றோம். நிலத்தை உழுது பருவம் பார்த்துப் பயிரிட்டு அதற்குகந்த பாதுகாப்பு எல்லாம் செய்கின்றோம். பின் அதனுடைய பலனை நாம் கண்டு நெல்லை அறுத்து பக்குவமாய் சேமிக்கவும் முற்படுகின்றோம்.
ஆனால் அதை நாம் எடுத்துச் சேர்ப்பதற்குள் பெரிய மழை வந்தால் எல்லாம் அழிகின்றது. அதைப் போன்று...
1.தியானத்தின் மூலம் பல பக்குவமான முறைகளை இச்சரீரத்தில் வளர்த்துப் பலன் பெறும் பக்குவத்தில்
2.உணர்வில் மோதும் பலமான மாற்றத்தினால் பல நாள் செயலின் பலனை இழந்துவிடும் நிலை போன்று
3.சரீர உணர்வால் எண்ணத்தில் பலமாக மோதும் எதிர்ப்பைத் தாங்காமல்
4.தவறிவிடும் நிலை உணர்வின் எண்ணத்தில் மோதுவது உண்டு.
ஆகவே... நெல்லை அறுக்கின்றோம் என்றால் அந்த நேரத்தில் மழை வருகிறது என்றால் அதற்குண்டான வேகத்தைச் செலுத்திப் பெற்ற பலனைப் பாதுகாக்கத் துரிதம் கொள்கின்றோம் அல்லவா...!
அது போன்று... நம் வழி முறையில் நல்லொழுக்கத் தொடரில் வளர்த்த வலுவை...
1.எதிர்ப்படும் மோதலிலிருந்து பாதுகாக்கும் துரிதமாக
2.எண்ணத்தின் துரிதத்தைத் தீயவைகளுடன் மோதாமல்
3.நல்லதைப் பாதுகாக்கும் உணர்வு ஜெபமாகத்தான் நாம் செயல்படுத்த வேண்டும்...!
தன்னைத்தான் தான் உணரும் பக்குவத்திற்கு...!