ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2019

ஆமையைப் போட்டுக் “கூர்மை அவதாரம்” என்று ஞானிகள் காட்டியதன் உட்பொருள் என்ன...?


உதாரணமாக ஆமையை ஒரு நரி விழுங்க வருகின்றது. அப்பொழுது ஆமையின் கருவிழி ருக்மணி அந்த நரியை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்குகின்றது.

அதே சமயத்தில் இந்த ஆமையை நரி விழுங்க எண்ணும் உணர்வுகள் நரியிடமிருந்து வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி அதை கவர்ந்து எடுத்து வைத்துக் கொள்கிறது. இது சீதா – சுவை.

ஆமை நரியை உற்றுப் பார்க்கும் பொழுது கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா... சூரியன் எடுத்து வைத்துக் கொண்ட அந்த நரியின் உணர்வை நுகரும் பொழுது ஆமையின் உயிரிலே உராயச் செய்கின்றது. உயிரிலே பட்ட பின் நரி உன்னை விழுங்கப் போகின்றது என்ற உண்மையை (சத்தியத்தை) உணர்த்துகின்றது.

ஏனென்றால்
1.உயிரிலே உராயும் பொழுது சீதா...! அந்த உணர்வின் எண்ணங்களாக வருகின்றது.
2.ஹரி கிருஷ்ணா...! ஹரி இராமா...! ஹரி என்றால் சூரியன்.
3.நமக்குள் பதிவாக்கும் உணர்வு “ஹரி ராமா” - அந்தச் சூரியனின் நிலைகள் கொண்டு எண்ணங்களாக அது எப்படித் தோன்றுகிறது என்ற
4.உண்மையின் நிலையைத் தெளிவாகக் கூறுகிறது நமது சாஸ்திரங்கள்.
5.இதில் எதுவும் தப்பில்லை.

ஆமை கூர்மையாக நரியை உற்றுப் பார்த்த பின் நரியின் உணர்வைத் தனக்குள் பதிவாக்குகின்றது. கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் சத்தியபாமா அதை இழுத்து
1.“நரி உன்னை விழுங்க எண்ணுகிறது...!” என்ற நிலையை உணர்த்திய பின்
2.அந்த உணர்வைக் கண்ட பின் பார்த்தசாரதி...! ஆமை அங்கிருந்து நகர்ந்து செல்கிறது.
3.,நரியிடம் சிக்காதபடி ஆமை தன் தலையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது.

இருந்தாலும் நரி... இது தன் இரைக்கு உகந்தது...! என்று பார்க்கின்றது. “பார்த்தசாரதி...! ஆமையை விடுவேனா என்று துரத்துகிறது... நரியின் கண்கள்.

இது உன் உணவுக்கு உகந்தது... என்று காட்டுகின்றது நரியின் கண்களின் காந்தப் புலன் சத்தியபாமா. ஆக கருவிழி பதிவாக்கிய பின் அதன் செயலாக்கங்களாக இயங்குகின்றது. இது பார்த்தசாரதி.

இவ்வாறு இயக்கினாலும் அதன் வரிசையில் எப்படி இயங்குகிறது என்ற நிலையைத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

நரி போய்விட்டதா இல்லையா...! என்று அடிக்கடி ஆமை அந்த நரியைப் பார்த்துப் பார்த்துத் தன் உடலுக்குள் நரியின் உணர்வுகள் வலுவாகின்றது.

அப்பொழுது அர்ச்சுனனுக்குக் கண்ணன் உபதேசிக்கின்றான்.

நரியைப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள் ஆமைக்குள் வரும் பொழுது அதனின்று தப்பிக்கும் உணர்ச்சிகளை ஊட்டுகின்றது. அந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றது.

இந்த உணர்வுகள் அதற்குள் வளர வளர சிரசை உள்ளுக்குள் இழுத்துக் கொள்கிறது. இருந்தாலும் ஆமை தான் இரை தேடப் போக முடியாத நிலை ஆகின்றது. ஆமைக்கு உணவு இல்லை.

அப்பொழுது அந்த நரியையே எண்ணி இது மரணமடையப்படும் பொழுது
1.எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அந்த உணர்வின் தன்மை வந்த பின்
2.ஆமையின் உயிரும் அதனுடன் சேர்த்த அணுக்களும் எந்த நரியின் உணர்வை இதற்குள் சேர்த்ததோ இந்த உடலின் தன்மை வலு பெறுகின்றது
3.நரியின் உடலுக்குள் ஆமையின் உயிரான்மா செல்கிறது.

அது தான் அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் சென்றான்...!

இந்தக் கண் எதைக் கூர்மையாகப் பார்த்ததோ இந்தக் கண்ணின் தன்மை கொண்டு அது பதிவானது. அந்த உணர்வின் தன்மை கொண்டு நரியின் உடலுக்குள் செல்கிறது.

அது தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய். அதனின் உணர்வை வலுவாக்கப்படும் பொழுது அதன் நிலைக்கே அது அழைத்துச் செல்கிறது என்பதனைக் காட்டி எதைக் கூர்மையாகப் பார்த்ததோ அர்ச்சுனனுக்குக் கண்ணன் சாரதியாகச் செல்கின்றான்...! என்று உணர்த்துகின்றனர்.

அப்பொழுது கண்ணன் சொல்கிறான்.
1.அந்த வியூகத்தைத் தகர்த்து (நரியின் வியூகம்) அதனுள் சென்று நீ அதுவாகு
2.ஆக இந்த உடலை (ஆமையின் உடல்) இழக்கின்றாய். அதன் உணர்வை இதற்குள் வளர்க்கின்றாய்.
3.அதனுள் (நரிக்குள்) சென்று நீ அதுவாகும் பொழுது அது உன்னை அரவணைக்கும்.
4.ஆகவே ஒளியும் இடத்தைக் கண்ணன் இப்படிக் காட்டுகின்றான்...! என்று மிக மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

காரணம்... கண்ணன் துகிலை உறிகின்றான்...! கண்ணனின்  செயலாக்கங்களை உயிரிலே கண்ட பின் நன்மை தீமை என்ற உணர்வுகளைப் பிளந்து காட்டுகின்றது நமக்குள்.

அதனால் தான் கண்ணன் துகிலை உறிகின்றான்...! என்று இப்படி ஒவ்வொன்றுக்கும் காரணப் பெயர்களை வைத்துத் தெளிவாக்குகின்றார்கள் ஞானியர்கள்.

நாம் என்ன நினைக்கின்றோம்...! கண்ணன் பெண்கள் குளிக்கும் பொழுது அவர்கள் உடைகளைத் தூக்கிக் கொண்டு சென்றான்...! வேடிக்கை பார்த்தான்...! என்று இப்படித்தான் சொல்கிறோம்.

ஏனென்றால் இதெல்லாம் ஒரு உணர்வுக்குள் மறைந்த உட்பொருளைப் பிளந்து
1.அந்த உணர்வின் சக்தி எதுவாக இயக்குகிறது என்றும்
2.தான் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்ட பின்
3.அந்த இரண்டு உணர்வுகளையும் சேர்ந்த பின் உண்மையின் இயக்கத்தை அது எப்படிப் பிரித்துக் காட்டுகிறது...? என்று
4.காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர் சாஸ்திரங்களில்...!

ஆமையின் உயிர் நரியின் உடலுக்குள் சென்று நரியின் ரூபமாக மாறுகின்றது. கண் கூர்மையாகப் பார்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு உடலை மாற்றுகின்றது. அது தான் கூர்மை அவதாரம்...! என்பது.