ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 1, 2019

மனித ஆற்றலின் “மகோன்னத செயல்பாடு” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பஞ்ச பூத அமிலத் தத்துவம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் “ஜீவன் என்ற உயிராத்ம சக்தி” மூல சக்தியாக வளர்ச்சி பெற்றுப் “பேரருள்” சக்தியில் கலந்திட வேண்டும்.

பேரருள் சக்தியாக ஆகிட சிவ சக்தி கலப்பாகச் சக்திகளை ஈர்த்துச் செயல் கொண்டிருக்கும் பூமியின் தொடர்பில்
1.ஜீவன் கொண்டே நாம் சகல சக்திகளையும் ஈர்த்து
2.மெய் ஞான சக்தியின் வளர்ப்பாக வளர்ச்சிப்படுத்திக் கொள்ள முடியும்.

சூட்சமமாக ஈர்ப்பின் தொடரில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் பூமியைப் போலவே
1.நாமும் நம் எண்ண வலுக் கொண்ட சுவாச ஈர்ப்பினால்
2.நம் சரீரத்திலேயே அனைத்துச் சக்திகளும் பெற்று
3.மனதின் திறன் என்ற “வைப்பாற்றல்” பெற்றிடலாம்.
(வைப்பாற்றல் என்றால் நாம் எண்ணிய நேரத்தில் எண்ணியபடி செயல்படுத்தும் தன்மை)

உயிரான்ம சக்தியைச் சூழ்ந்திருக்கும் பஞ்ச பூத சரீர சக்தி... ஓர் முகமாகச் சேமித்துக் கொண்டிடும் சக்தியே “மனோ சக்தி...!”

சரீர பிம்பத்தில் ஐந்து இடங்களில் பரவிக் கிடக்கும் அந்தச் சக்திகளை ஆற்றல்மிகு ஓர்மித்த வழி வகைகளின் செயலே நாம் காட்டும் இந்தத் தியானத்தின் மூலமாகச் சித்திக்கும்.

பஞ்ச பூதங்களை - “நமசிவாய” (சிவமயம்) தத்துவமாகக் காட்டப்பட்டதின் செயலையே மாற்று நிலைக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

1.அந்தச் செயலை நீக்கிவிட்டு
2.பஞ்ச பூத ஆற்றல் சக்தியை வீரத்தில் விளைந்த சாந்தமாக உயிர் சக்திக்குள் கலந்து
3.”ஈஸ்வர ஜோதி” என்ற சுயப்பிரகாச ஜோதியாக நிலையைப் பெற்றிடலாம்.