ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 3, 2019

“பாலைச் சூட்சமம்” - பேரின்ப இரகசிய ஆனந்த நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


வெயிலின் கடுமை நிறைந்திருக்கும் பாலையில் பூமியில் சூட்சம ஈர்ப்பின் கதி சுழலில் அந்த இடத்து நிலைத் தொடர்கள் ஈர்ப்பின் நிலைப்பில் நீர் சக்தி மறைந்துவிடும் என்பது இயற்கையே...!

ஆனாலும் பாலையின் கதியிலும் நீர் உள்ளே மறைந்திருக்கும் செயல் (சூட்சமம்) என்பது
1.வெயிலின் வெப்பத்தன்மை எவ்வளவு தான் கடுமை ஆனாலும்
2.பாலை நீர்த் தன்மை குளிர்ந்திருக்கும் செயலே “பாலைச் சூட்சமம்...!”

கோடையின் வெப்பத்தால் நீர் நிலையில் மேலே இருக்கும் நீர் வெம்மையுற்றாலும் அதன் உட்புற நீர் குளிர்மையாகத் தான் இருக்கும். அப்படி அந்த நீர் ஓரளவு குளிர்ந்திருக்கும் தன்மை போல் சரீர கதியிலும் உண்டு.

“பாலைச் சூட்சமம்” போல் வாழும் நீர் சக்தியின் தொடரே...! நம் உயிரான்ம சக்தி சூட்சம சரீர கதியில் உடலில் வாழும் தத்துவம்...! என்பதன் கருத்தை ஊன்றி... உணர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1.தத்துவத்தில் “வினோதம்...!” என்பதெல்லாம்... - சூட்சம கதித் தொடர் என்பதில்
2.வெப்பம் என்று பாலைவனம் உஷ்ணம் தகிக்கும் தன்மை போல் சரீரமும் உணர்கின்றது.

வெப்பம் போல் ததித்துறும் செயல் உயிர் ஆன்ம இயக்கத்தில்  சரீரத்தில் இருக்கும் அத்தனை உயிரணுக்களுக்கும் அதன் அதன் எண்ண ஓட்ட கதிக்குட்பட்டு வாழும் செயல் நிலைத் தொடரில்... சரீர கதிக்கு உண்டாக்கப்படும் வினைச் செயல்களால்
1.எந்த உயிரணுக்களின் எண்ண நிலை தாக்கப்படுகிறதோ
2.அந்தந்த உயிரணுக்களின் எண்ண அமில நிலைத் தொடர்பால்
3.உணர்வின் உந்துதல்களின் வழி பெறப்படும் நிலையே சரீர அவஸ்தை என்னும் உடல் துன்பம்.

எந்தெந்த இடங்கள் தாக்கப்படுகின்றதோ... அந்த இடத்திலுள்ள உயிரணுக்கள் அதனின் எண்ணம் வேதனையாக வெளிப்பட்டு... சரீரம் முழுவதற்கும் அந்த எண்ணம் “தொடர் போல் வியாபித்து...” ஒன்றுடன் ஒன்று அனைத்து உயிரணுக்களின் கதிக்கும் வேதனையை அனுபவிக்கும் செயலாக அமைந்து... “உயிர் ஆன்ம சக்திக்கே பாதிப்பு நிலை ஏற்படுகின்றது...”

ஆக நீரின் உட் தன்மை கோடையிலும் இயல்போடிருப்பதைப் போல் யாம் சொல்லும் தியானத்தின் வழி சூட்சம சக்திகளை எடுக்கும் நிலையில் உயிரானது ஆன்ம வடிவ சூட்சம ஜோதியில் வாழும் தன்மையாகச் செயல் கொள்ளும் திறனை அறிதல் வேண்டும்.

ஆகவே சரீர உயிரணுக்கள் அனைத்தும் ஒளி காந்த சக்தி பெற்று உயிர் ஆன்மத் தொடரில் ஒன்றி வாழும் தொடர் எண்ணங்கள் வருதல் வேண்டும்.
1.கண்ணன் வேய்குழலின் இன்னிசையில் பசுக்கள் எல்லாம் மயங்கின...! என்ற தத்துவச் செயலாக
2.நம் சரீர உயிரணுக்களை மயக்குறும் நாதமாக்க
3.உயிர் ஆன்ம சக்தி (நாம்) செயல்பட வேண்டும்.

ஆத்ம சுடர் ரசமணியாக்கும் வான்மீகியார் தொடர் கொண்டு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் செயலபடும் நிலையை அனைத்து உயிரான்மாக்களும் பெறவேண்டும்.

மூல சுக்கிரன் தொடர்பு கொண்டு தனக்குள் அதைப் பெறப் பெற கண்ணன் இசைக்கும் இசையாகும் உயிர் சக்தி...
1.சரீர கதியில் அனைத்து உயிரணுக்களையும் தன் பால் ஈர்த்து
2.ஜோதித்துவத்தில் மூழ்க வைக்கும்.

அந்தப் பேரின்ப இரகசிய ஆனந்த நிலை என்பது என்ன...?

உயிரணுக்களை எண்ண மேய்ச்சலுக்கு விடும் பொழுது உணர்வுகள் ஒன்றி ஒடுங்கும் செயல் சரீரச் செயலில் தாக்கப்படும் வேதனையை அனுபவிக்காத தன்மை கொண்டு
1.உயிரில் ஆனந்த அமுதைப் பருகி
2.தன் வழியில் எண்ணச் செயல் விடுத்து அந்தப் பேரின்ப ரசம் பருகும்.
3.அந்தச் சூட்சம கதியைத்தான் ஈஸ்வரபட்டனாகிய யான் உணர்த்தி வருகின்றேன்.

பாலையாகச் சுடும் வினைச் செயலில் வாடையாகக் குளிர்ந்திருக்கும் எண்ண நினைவில் அச்சம் விலகிடும் பூரணத்துவத்தை ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.

தீவினைப் பயன் நீக்கும் செயலுக்கு எந்த ஒரு உயிரணுக்களும் சரீரம் தொட்டு வேதனயுறாமல்
1.உயிரான்மா காக்கப்படுவதைப் போல் காக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து
2.சூட்சம உடல் வாழும் “தவ வாழ்வை” மேற்கொள்ள வேண்டும்.