உயிரணுவாகத் தோன்றி பல உடல்கள் பெற்று மனித
உடல் பெறுவதை முதல் காண்டமாக ஞானிகள் காட்டியுள்ளார்கள்.
மனிதனாகப் பிறந்த பின் அடுத்துப் பல உணர்வுகள்
எடுத்து அறுபது வயது ஆகும் பொழுது அது இரண்டாவது காண்டம்.
1.இரண்டாவது காண்டத்திற்குள் நாம் எடுத்து
நுகர்ந்து கொண்ட உணர்வுகள் மாற்றம்...!
2.ஆக இரண்டு காண்டங்கள் கவர்வதே மனிதனுக்கு
மிகவும் சிரமம்.
3.இடைப்பட்ட நேரங்களில் (அறுபது வருடத்தில்)
நுகர்ந்த உணர்வுகள் எவ்வாறு மாறுகிறது..? என்ற இந்த நிலையைக் காவியங்களில் உணர்த்துகின்றனர்.
இராமாயணத்தில் பத்தாவது நிலை அடையும் தகுதி
பெற்ற தசரதன்
1.தனக்குள் எடுத்துக் கொண்ட ஆசை தன் மகனுக்குக்
பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்பினாலும்
2.அந்த நல்லவனுக்குச் (இராமனுக்கு) செயல்படுத்த
முடியவில்லை என்று வேதனை உணர்வுகள் ஆன பின் அவன் மடிகின்றான்.
இதை எல்லாம் மனிதன் தெளிந்து... அறிந்துணர்ந்து
எப்படி வாழ வேண்டும்...? என்பதற்காகத்தான் காவியப் படைப்புகளை இப்படிக் கொடுத்துள்ளார்கள்.
ஏனென்றால் விஞ்ஞான உலகில் மாற்றங்கள் ஏற்படும்
அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அருள் வாழ்க்கை வாழ்ந்திட
வேண்டும்.
அகஸ்தியனும் அவன் மனைவியும் இரண்டறக் கலந்து
மனதைக் குவித்து இரு மனமும் ஒரு மனமாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து (இராமலிங்கமாக)
அகண்ட அண்டத்தில் வரும் நஞ்சினை வென்று உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றித் துருவ
நட்சத்திரமாக ஆனார்கள்.
நம் சூரியனே அழிந்தாலும் துருவ நட்சத்திரம்
அகண்ட அண்டத்தில் என்றுமே அழியாது வாழும் சக்தி பெறுகின்றது
இயற்கையின் உண்மையின் இயக்கங்கள் எவ்வாறு
உருவானது என்ற நிலையை உணர்ந்து... தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி... ஒளியின்
சரீமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக
இருக்கும் அதனின்று வெளிப்படும் உணர்வை நாம் நுகர்ந்து நமக்குள் உருவாக்குதல் வேண்டும்.
அதாவது மூன்றாவது காண்டமாக…
1.அந்த அருள் மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து
2.உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால் அடுத்துப் பிறவியில்லா நிலையை அடைய
வேண்டும் என்று
3.ஞானிகள் தெளிவாக மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.