ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2019

சைவம் அசைவம் பற்றிய தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்


1.தாவர இனம் சைவம்.
2.நாம் உணவாக உண்பது அணுவாக ஆவது அசைவம்.
3.செடி இருந்த இடத்தில் இருந்து தன் சக்தியை எடுத்துக் கவர்வது சைவம்.
4.ஆனால் அந்த செடியின் சத்தை நுகர்ந்து அந்தச் செடி இருக்கும் பக்கம் தன்மை நகர்ந்து சென்று அதை உணவாக எடுத்து செல்லும். உயிரினங்கள் அசைவம்
5.இருந்த இடத்தில் உணவாக உட்கொண்டால் சைவம்.
6.நகர்ந்து சென்று அதை உணவாக உட்கொண்டால் அசைவம் என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் நம் உணவுக்காக மற்ற அசைவத்தைச் சாப்பிடுகிறோம். ஆட்டைச் சாப்பிடுகிறோம். ஆடு விஷத்தின் தன்மை கொண்டு உடலாக ஆனது.

அதை நாம் சாப்பிட்டு உடலில் சேர்ந்தால் என்ன செய்யும் என்று நினைக்கிறீர்கள்...! அந்த அணுக்கள் எல்லாம் நம் உடலாக உருவாகிறது. அப்போது ஆட்டுக் கறியையே தான் மீண்டும் கேட்கத் தோன்றும்.

அந்த ஆட்டு கறி மேல் ஞாபகம் அதிகமான பின் அதனின் விஷத் தன்மை நமக்குள் கூடி மனித உணர்வுகள் இங்கே குறைய ஆரம்பிக்கின்றது.  
1.குறைந்த பின் சாகப் போகும் போது ஆட்டுக் கறி மீது தான் ஞாபகம் வரும்.
2.ஆக எதை விரும்பிச் சாப்பிட்டோமோ அந்த ஞாபகம் வரும்.

உயிர் பிரியச் சிரமப்படுகிறது என்றால் பெரியவர்கள் என்ன சொல்வார்கள்...? கறியை நிறையச் சாப்பிட்டிருக்கின்றார். இரண்டை வேக வைத்துக் கொடுங்கள். சீக்கிரமே உயிர் போகும்...! என்று சொல்வார்கள்.

அந்த நினைவுடன் உயிர் வெளியில் போனால் அப்புறம் நேராக ஆட்டின் உடலுக்குள் தான் போகும். அந்த உடலுக்குள் போய் நம்மை  ஆடாகப் பிறக்கச் செய்யும்.

இன்றைக்கு மனிதனாக இருந்து ஆட்டை ருசித்துச் சாப்பிட்டால் நாளைக்கு ஆடாகி மே...மே...! என்று கத்த வேண்டியது தான்.

ஆனால் உங்களை நான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. சாப்பிட்டால் உயிர் உங்களை இப்படித் தான் மாற்றும். ஒன்றை விழுங்கி வருவது தான் அசைவம்.

1.ஆக மொத்தம் நமக்குள் சைவமாக இருக்கக்கூடியதை
2.நாம் உணவாக அணுவாக உருவாக்குதல் வேண்டும்.
3.சைவத்துக்கு போய்விடுவோமா... செடி கொடிக்குப் போவோம் என்று நினைக்காதீர்கள். அப்படிப் போக முடியாது.

சில சாமியார்கள் என்ன சொல்வார்கள். நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன். நான் செடிகளில் விளைந்ததையும் காய் கனிகளையும் பச்சையாகத்தான் சாப்பிடுகிறேன்.

இந்த நிலைகளில் நான் பரிசுத்தமாக இருக்கின்றேன்...! என்று பச்சையாகச் சாப்பிட்டால் என்ன செய்யும்...? அந்தச் செடி கொடியில் இருக்கின்ற மணமே (வாசனை) இவர்கள் உடலிலும் ஆன்மாவிலும் உயிரிலும் சேரும்.

அதில் உள்ள உணர்வின் தன்மை பெற்ற பின் இந்த உயிர் வெளியிலே சென்ற பின் அந்தச் செடி கொடிகளுக்குத் தான் செல்லும்.
1.நான் வேக வைத்ததைச் சாப்பிட மாட்டேன் என்று சொன்னால்
2.செடி கொடிகளுக்குள் சென்று புழுவாகவோ பூச்சியாகவோ தான் பிறக்க வேண்டும்.

மாமிசத்தை வேக வைத்து எடுத்தாலும் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகும் போது அசைவத்தை உணவாக உட்கொள்ளும். மீண்டும் மிருக இனங்களுக்குள் தான் செல்வோம்.

ஆகையால் இத்தகைய நிலையில் இருந்து நாம் விடுபட வேண்டும். மனிதனான பின் வேக வைத்து மாற்றி அருள் ஒளியை நீங்கள் கூட்டிக் கொண்டால் வேகா நிலை பெறலாம்.

அருள் ஒளியின் உணர்வாகச் சுடராக நமக்குள் மாற்றப்படும் போது நாம் வேகா நிலை பெறுகின்றோம்.
1.அதாவது போகாப்புனல்
2.இன்னொரு சரீரத்திற்குள் போவதில்லை...!