ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 9, 2019

அகஸ்தியன் கண்டுணர்ந்த நட்சத்திரங்களின் ஆற்றல்கள்


இரண்டு நட்சத்திரங்களிலிருந்து வெளி வரும் சக்திகள் (துகள்கள்) சந்தர்ப்பத்தால் ஒன்றுடன் ஒன்று மோதினால் “மின்னலாக” மாறுகின்றது.

அந்த மின்னல் புவியின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது ஒரு மரத்தில் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். எந்த நட்சத்திரமோ அதனைச் சேர்ந்த இனமாக அந்த மரம் இருந்தால் விழுந்தால் இந்த மரத்தை அப்படியே பொசுக்கிவிடும். ஆனால் பக்கத்தில் இருக்கும் மரத்தை (வேறு இனம்) ஒன்றும் செய்யாது.

ஏனென்றால் தன் இனத்தை எடுத்துப் பூமிக்குள் ஊடுருவுகின்றது. அது பூமிக்குள் சென்ற பின் வெப்பங்கள் அதிகமாகி அது கொதிகலனாகிறது.

நாளடைவில் சேமித்துச் சேமித்து உஷ்ணம் அதிகமான பின் நிலநடுக்கமாகி ஆவித் தன்மை (GAS) உண்டாகி அந்த வாயுக்கள் அனைத்தும் அப்படியே வெடிக்கின்றது.

வெடித்த பகுதி அப்படியே கீழே இறங்குகிறது. அந்தப் பகுதியில் மட்டும் தான் நிலநடுக்கம் வருகின்றது. உள்ளே சென்ற பின் அடங்கி விடுகின்றது.

ஆனால் நட்சத்திரத்தின் மின்னணுக்களின் நிலைகள் அதாவது மின்னல் கடலில் படும் பொழுது என்ன ஆகின்றது...?
1.அது உப்பு நீர்...!
2.மின்னல் பூமிக்குள் ஊடுருவாதபடி கடலில் பட்டபின் மணலாக மாறுகின்றது
3.நட்சத்திரங்களின் உணர்வின் சக்தி பட்ட பின் அது யுரேனியமாக மாறுகின்றது.

எந்தெந்தப் பகுதி எந்தெந்த நட்சத்திரங்களின் சக்திகள் படர்கின்றதோ அதனின் வலுவிற்குத் தகுந்த மாதிரி யுரேனியங்கள்  எத்தனையோ விதமான நிலைகள் உருவாகின்றது. விஞ்ஞானத்தில் அதற்குப் பல பெயர்களை வைத்து அழைக்கின்றார்கள்.

அப்படி மாறியதை விஞ்ஞானி பிரித்து எடுத்து என்ன செய்கின்றான்…? அணுவைப் பிளக்கின்றான். அந்தக் கதிரியக்கப் பொறிகளை அடக்குகின்றான்.
1.கடல் நீரில் உள்ள ஹைட்ரஜனின் துணை கொண்டு
2.அதனின் அழுத்தத்தைக் கொண்டு வெடிக்காதபடி பாதுகாக்கின்றான்.

ஹைட்ரஜன் என்று இருந்தாலும் அதனின் அடர்த்தியின் தன்மைகள் ஒளிக் கதிர்களைச் சேர்த்து மீண்டும் அந்த ஹைட்ரஜனை வெடிக்கச் செய்வார்கள்.

ஏனென்றால் சனிக்கோளிலிருந்து வரக்கூடிய நிலைகள் ஒவ்வொரு அணுக்களிலும் (எல்லாவற்றிலும்)  கலந்திருக்கும். அதே சனிக் கோளிலிருந்து தான் வடிக்கப்பட்டுக் கடலாக (நீராக) மாறுகின்றது.

இந்த உணர்வின் தன்மை கொண்டு ஹைட்ரஜன் வரப்படும் பொழுது இதனின் நிலைகள் வான்வீதியில் வெடித்த பின் தன் இனத்தின் தன்மை ஜீவ சக்தியை இழக்கச் செய்கிறது.

இங்கே வரும் மற்ற தாவர இனச் சக்திகளுக்குச் செல்வதும் அதற்குள் இருக்கும் கதிரியக்கப் பொறிகளும் வெகு தொலைவில் பரவப்பட்டு அந்த ஜீவ சக்தியையே எடுக்கச் செய்வது அந்த ஹைட்ரஜனின் வேலைகள். விஞ்ஞான அறிவால் இதை எல்லாம் கண்டு கொண்டுள்ளார்கள்.
1.நான் (ஞானகுரு) மூன்றாம் வகுப்பு முழுமையாகப் படிக்காதவன் இதைச் சொல்கிறேன்.
2.இதை நீங்களும் பார்க்க முடியும்... தன்னம்பிக்கை வேண்டும்.

இந்த இயற்கையின் உணர்வுகளை ஒரு கம்ப்யூட்டர் மூலமாக மனிதன் (விஞ்ஞானி) தனக்குள் கண்டுணர்ந்து பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உள்ள அதிர்வின் ஒலிகளைக் கண்டு அதனின் இயக்கப் பொறிகளைப் படமாக வரைகின்றான் - அந்த உருவத்தையே.

1.ஏனென்றால் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற உணர்வுகள் பாயப்படும் பொழுது
2.உணர்வுகள் எப்படி இயங்குகிறது..? என்ற நிலையைத் தெளிவாகக் காணுகின்றான் விஞ்ஞானி.

அதைப் போல் தான் அன்று மெய் ஞானியான அகஸ்தியன் உணர்வின் இயக்கத்தின் தன்மையை அணுவின் ஆற்றலைப் பிளந்து அதனின் தூண்டுதலைப் பார்த்தான்.

எண்ணத்தின் தன்மை கொண்டு அது எப்படி உருவாகிறது...? என்ற நிலையை அவனால் கண்டுணர்ந்தது தான் வான இயல் புவியியல் உயிரியல் எல்லாமே...!

1.அவனுக்குப் பின் வான்மீகி கண்டான்.. பின் வியாசகன் கண்டான்.
2.அகஸ்தியனால் உருவாக்கப்பட்ட நிலைகளை அந்த உண்மையின் உண்ர்வை எடுத்து அவர்கள் வளர்த்துக் கொண்டனர்.
3.இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியை எடுத்துத் துருவ நட்சத்திரமாக ஆன அந்த உணர்வுகளைத் தான்
4.இப்பொழுது உங்களுக்குள் சிறுகச் சிறுக ஊட்டிக் கொண்டு வருகின்றோம்.

அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அகஸ்தியனைப் போன்ற மெய் ஞானியாக உருவாக முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்...!