ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 31, 2016

நம் எண்ணம் நம்மை எப்படி ஏமாற்றுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் - நடந்த நிகழ்ச்சி (அனுபவம்)

நான் (ஞானகுரு) சித்தான புதிதில் இது நடந்த சம்பவம். ஒரு கவுண்டர் சிலோனில் போய் கிறிஸ்து மதத்தில் சேர்ந்தவர். அவர் இங்கே பழனிக்கு வந்துவிட்டார்.

அப்பொழுது நான் இந்த ஆசனப் பயிற்சிகளை எல்லாம் செய்வேன். அவருக்கு ஒரு நோய் இருந்தது. அந்த ஆசனப் பயிற்சி மூலம் அவர் உடலிலுள்ள நோய்கள் நீங்கியது. அதிலிருந்து அவருக்கும் எமக்கும் பழக்கம்.

சித்தான புதிதில் இங்கே நம்மை அறியாமலேயே சில அற்புதங்கள் நடக்கின்றது. இங்கே வந்தவுடனே இதை அவர் உற்றுப் பார்த்தார். வயிற்று வலியோ மற்ற நோய்களோ இதுவெல்லாம் நீங்குகின்றது.

சர்ச்சுக்கு எதிர்புறம்தான் அவருடைய சொந்தக்காரரின் கடையில் தான் நான் சைக்கிள் கடை வைத்திருந்தேன். ஆகையினாலே அவர் வந்து என்னைச் சந்திக்க வருவார். அடிக்கடி பார்ப்பார்.

இருந்தாலும் அவர் இங்கே நடக்கக்கூடிய அற்புதங்களைப் பார்த்தாலும், "இயேசு செய்கின்ற மாதிரி நீங்கள் செய்கிறீர்களே.." என்று கூறுவார் இவர். இருந்தாலும் உங்களுக்கும் நமக்கும் ஒத்து வந்துவிட்டது.

நீங்கள் கடவுளே இல்லை என்ற நிலைகளும் நீங்கள் பொதுப்படையாகச் சொல்கிறீர்கள். அதனால் நான் உங்களை நான் பற்றிக் கொள்கிறேன் என்றார்.

சரி என்று நான் சொன்னேன்.

அவருக்கு வேண்டிய சொந்தக்காரர் ஒருவர் வாத நோயால் ரொம்ப அவதிப்பட்டு கேரளாவில் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் வைத்துப் பார்த்தார்கள்.

இருப்பினும் அங்கே அவருக்கு ரொம்ப மோசமாகி கண்கள் எல்லாம் நின்றுவிட்டது இனி பிழைக்க மாட்டார் என்று தூக்கிக் கொண்டு போகச் சொல்லிவிட்டனர்.

இந்த விவரம் தெரிந்தபின் இவர் என்ன செய்தார்? இந்தச் சாமியிடம் கொண்டு வந்தோம் என்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று இங்கே அழைத்து வந்துவிட்டார்.

அவர் கண்கள் ஓட்டமே நின்றுவிட்டது. மூச்சும் சரியாக வரவில்லை. இந்த நிலையில் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தவுடனே கொஞ்ச நேரம் குருநாதர் சொன்ன முறைப்படி சில எண்ணங்களை அவர்பால் பாய்ச்சினேன். அப்போது கண்களில் அசைவு தெரிந்தது.

எப்படி?

இங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் செல்கின்றனர். ஊமைகள் பேசுகின்றனர், வருபவர்களுக்கெல்லாம் அது நடக்கின்றது, இது நடக்கின்றது என்று இப்பொழுது விளம்பரம் பண்ணுகின்றார்கள் அல்லவா.

அந்த மாதிரி யாம் சித்தான புதிதில் சில அற்புதங்களை குருநாதர் திடீர் என்று ஏற்படுத்தப்பட்டதனால் அவரை இங்கே கொண்டு வருகிறார்கள்.

அப்பொழுது நான் ஒரு ரூமில் இருந்து கொண்டு அவரை வேறொரு ரூமில் போட்டுப் பூட்டிவிட்டு குருநாதர் சொன்ன வழி முறைப்படி செய்தேன்.

அவர் எழுந்து பூட்டிய கதவைத் தட்டி “என்னை ஏண்டா மூடிவிட்டீர்கள்..,? என்று கேட்கிறார். அப்பொழுது எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டார். 

அதாவது முதலில் ஜீவன் வந்தது. அப்புறம் சிறுகச் சிறுக கை கால்கள் எல்லாம் இயங்க ஆரம்பித்தது. அது ஒரு மாதத்தில் நன்றாகி எல்லாம் செய்யத் தொடங்கிவிட்டார்.

உடல் நன்றாக ஆனவுடன் எங்கள் வீட்டுக்கு நீங்கள் சாப்பாட்டுக்கு வர வேண்டும் என்று கூறி எம்மை அழைத்துச் செல்கிறார். இது நடந்த நிகழ்ச்சி.

அங்கே மானூர் என்ற கிராமத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். சாப்பாட்டில் அவர்கள் வீட்டில் வெண்டைக்காய்க் குழம்பு வைத்துவிட்டார்கள். வெண்டைக்காய் பொறியலும் வைத்துவிட்டார்கள்.

இவரோ கிறிஸ்தவர், அப்பொழுது என்ன செய்துவிட்டார்..,? எங்கள் குலத்துக்கு இந்த வெண்டைக்காய் ஆகாதுங்க என்றார்.

நான் உடனே அவரிடம் கேட்டேன். நீங்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டு உங்கள் குலத்துக்கு ஆகாது என்றால் என்ன இது? முறையில்லையே.., என்றேன்.

இல்லைங்க.., அது எங்கள் பரம்பரையில் வெண்டைக்காயை நாங்கள் சாப்பிட்டால் நிச்சயம் எங்களுக்கு அப்பொழுதே வயிற்றுக்குச் சேராது, பேதி ஆகிவிடும் என்றார் அவர்.

அது என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு இரண்டு தலைமுறையாகப் போய் விட்டேன் என்று சொல்கிறீர்கள். அப்புறம் ஏன் இதை விடமாட்டேன் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.

அது எங்களுக்குத் தெரியாது. வெண்டைக்காய் சாப்பிட்டால் எங்கள் குலத்திற்கு ஆகாது. இப்பொழுது வேண்டுமென்றால் பாருங்கள். முகர்ந்து வாடையைப் பார்த்தால் பேதி ஆகிவிடும்.

வெண்டைக்காயைக் கொடுங்கள், முகர்ந்து பார்த்தால் எனக்கு பேதி ஆகும். என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று சொன்னால் நான் முகர்ந்து பார்க்கிறேன் என்கிறார் அவர்.

அந்த உணர்வு அவருக்குள் பதிவாகி இருக்கின்றது. அதனால் அவர் எழுந்து போய்விட்டார். சாப்பிடவே இல்லை.

அப்புறம் சிறிது சாப்பிடுங்கள் என்று சொன்னேன்.

இந்த வாடை பட்டாலே எனக்கு பேதிக்குப் போகும் என்றார். அடுத்தாற்போல் இப்பொழுது எனக்கு வயிற்றைக் கலக்கின்றது, நான் வெளியே போகிறேன் என்று சொன்னார். அதே மாதிரி போகவும் செய்தார்.

நான் இனி சாப்பாடே சாப்பிட முடியாது. எங்கள் குலத்தில் யாருக்கும் இந்த வெண்டைக்காய் வாசனை ஆகாது என்று சொல்லிவிட்டார்.

நான் சரி என்று சொல்லி விட்டுவிட்டேன். அப்புறம் நான் என்ன செய்தேன்.

மறுநாள் இன்னொருத்தர் வீட்டில் வெண்டைக்காயை ரொம்ப நைஸா ஆட்டச் சொன்னேன். வெண்டைக்காய் ரூபம் இல்லாதபடி கடலைப் பருப்பு இதெல்லாம் போட்டு நன்றாக அரைத்து வடையாகச் சுடச் சொன்னேன்.

அந்த வடையச் சுட்டு அவருக்குக் கொடுக்கச் சொன்னோம். பார்த்தோம் என்றால் அந்த வடையை நிறையச் சாப்பிட்டார். “ஜோராக இருக்கின்றது” என்று சொல்லிக் கொண்டு 10 வடையைச் சாப்பிட்டார்.

பத்து வடையைச் சாப்பிட்டு முடித்தவுடனே அப்புறம் நான் கேட்டேன். வெண்டைக்காய் உங்களுக்கு ஆகாது இல்லையா.., என்றேன்.

ஆமாம்.., ஆகாது.., என்று அவர் கூறினார்.

நீங்கள் சாப்பிட்ட வடையில் என்ன இருக்கின்றது என்று தெரியுமா? என்று கேட்டேன்.

நீங்கள் பொய் சொல்கிறீர்கள். வெண்டைக்காய் கொஞ்சம் ஒரு துளி உள்ளுக்குள் போனாலே எனக்குப் பேதிக்கு வரும். எனக்குத் தெரியும் என்றார்.

அதைத்தான் இப்போது நீங்கள் நன்றாக சாப்பிட்டீர்கள் என்று நான் சொன்னேன்.

எனக்கு என்ன அறிவு இல்லை என்று நினைக்கின்றீர்களா? என்றார் அவர். அறிவில்லை என்றாலும்கூட வெண்டைக்காயை நான் கொஞ்சம் போல சாப்பிட்டாலும் உடனே எனக்குத் தெரியும்.

வெண்டைக்காய் போட்டிருக்கின்றதா இல்லையா என்று நான் உடனே சொல்லிவிடுவேன் என்றார்.

அப்படியா..,? சரி.., என்று சொல்லிவிட்டு வெண்டைக்காயை அவர்கள் வடையாக எப்படிச் செய்தார்கள்? பாருங்கள்.., என்று மறுபடி அதைச் செய்யச் சொல்லிக் காண்பித்தேன்.

அதே மாதிரி வடையைச் செய்த பின் அந்த வடையை அவரிடம் கொடுத்து சாப்பிடுங்கள். என்ன ருசி இருக்கின்றது..,? என்று சொல்லுங்கள் என்றேன்.

அவ்வளவுதான்..,, எனக்குப் பேதி ஆகியிருக்க வேண்டும். ஆனால் அதை நான் சாப்பிட்டேனே என்ற இந்த எண்ணம் அவருக்கு ஜாஸ்தி வந்துவிட்டது. அடுத்து அவருக்கு பேதிக்கு ஆனது அளவே கிடையாது.

உங்களிடம் வந்ததற்கு நான் இறந்து போய்விடுவேன் போலிருக்கின்றது என்றார் அவர்.

 அப்புறம் நான் அவருக்கு ஆசிர்வாதம் செய்து சரி செய்தேன். நீங்கள் மதம் மாறிச் சென்றீர்கள். உங்கள் குலம் இப்படி வந்துவிட்டது என்று விளக்கத்தைச் சொன்னேன்.

இதெல்லாம் அரசர் காலங்களில் அரசன் எதற்காக வைத்தான்? நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  

உதாரணமாக ஆந்திராவில் இருந்து ஒரு அரசன் கீழ் போர் செய்ய வருகிறோம். பரம்பரையாக இங்கே வரப்படும்போது “தன் இனம் தன் குலம்” தெரியாது. அதற்காக வேண்டி அவர்கள் முக்கியமான காய்கறிகளை விலக்கி வைத்திருப்பார்கள்.

தன் நாட்டிற்கு அவர்கள் போனாலும் அல்லது எங்கே சென்றாலும் சாப்பிடும் போது அந்தப் பந்தியில் வைக்கும்போது இது என் குலத்துக்கு ஆகாது என்று ஒதுக்கி வைப்பார்கள்.

அப்பொழுது தன் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்வதற்காக அன்று மறைமுகமாக அரச காலங்களில் ஏற்படுத்தியது இது.

 இவர் கிறிஸ்தவராக மாறிப் போனாலும் இவருக்குள் இந்த உணர்வு பதிவு செய்தது என்ன செய்கின்றது? முதலில் வடையைச் சாப்பிடும் போது அவர் வெண்டைக்காயை நினைக்கவில்லை, பேதி ஆகவில்லை.

ஆனால், அந்த நினைவின் பதிவு வருகின்றது. வந்தபின் என்ன சொல்கிறார்? எண்ணத்தில் பதிவு செய்ததை அவர் நுகர்ந்து உள்ளுக்குள் போனவுடனே “வெண்டைக்காய் வேண்டாம்..,” என்ற சொல் வருகிறது.

ஆகவே, எது நமக்குள் பதிவோ அதனின் இயக்கமாகத்தான் நாம் செயல்படுவோம். நாம் நுகரும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது.

உள் நின்று இயக்கும் சக்தி உயிர் கடவுள். எந்த உணர்வை நுகர்கின்றோமோ அது நமக்குள் நின்று தெய்வமாக அந்த குணத்தின் செயலாக நம்மை இயக்கும்.

நாம் இயங்குகின்றோமா? மற்றொன்று நம்மை இயக்குகின்றதா? என்று இதையெல்லாம் நம் வாழ்க்கையில் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் அவசியம்.

நாம் நுகரும் உணர்வு நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது? நமது வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்பதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அனுபவப்பூர்வமாக உணர்த்திய மூலக்கூறுகளை நீங்களும் அறிந்து குரு காட்டிய அருள் வழியில் என்றுமே நீங்கள் வாழ்ந்திடல் வேண்டும். எமது அருளாசிகள்.

May 30, 2016

தியான வழியில் உள்ளவர்கள் சிலரின் செயல்கள்

இப்பொழுது யாம் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.

இவ்வளவு தூரம் தியான வழியில் இருக்கின்றீர்கள் அல்லவா..., கேட்டுப் பாருங்கள்.

கோவிலுக்குச் சென்று தேங்காய் பழத்தை வைத்து அதை அர்ச்சனை செய்து சாமியைப் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று செய்வார்கள்.

ஆனால், கோவிலுக்குள் சென்று அந்தத் தெய்வீகக் குணத்தை நாங்கள் பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் தெய்வீகக் குணம் பெறவேண்டும். அவர்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுபவர்கள் யாராவது ஒருவரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தியான வழியில் தான் இருக்கின்றார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், வழி நடத்தி யார் வருகின்றார்கள்?

நானும்.., தியானம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். என்னமோ..., இன்னும் குருநாதர் என்னைச் சோதித்துக் கொண்டு இருக்கின்றார். பக்தி மார்க்கத்தில் இருந்த மாதிரித்தான் எண்ணுகின்றார்கள்.

நாம் நுகர்வதுதான் இந்த உணர்வுகள் நம்மைச் செயல்படுத்துகின்றது என்று பல முறை சொல்கிறேன். “சாமி செய்வார்..,” என்று எண்ணினால் நான் என்ன செய்ய முடியும்?

சமையல் செய்து நல்ல முறையில் கொடுக்கின்றேன்.

“பார்த்தவுடன் என்னால் முடியவில்லை.., என்னால்..., சாப்பிட முடியவில்லை” என்று சொல்லிக் கொண்டு சாப்பிடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

நீங்கள் இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லிச் “சக்தியைக்” கொடுக்கின்றோம். நாம் நுகர்ந்ததை உயிர் இப்படித்தான் இயக்குகின்றது என்ற உண்மையைத் தெரியப்படுத்துகின்றோம்.

ஏனென்றால், சித்திரை. நமக்குள் நடக்கக்கூடிய சிறு சிறு சம்பவங்களில் அந்தத் தீமையான நிலைகளை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துத் துடைத்துப் பழகிக் கொள்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரம் எப்படி ஆனது? இந்த உயிர் தான் அப்படி ஒளி ஆனது.

அகத்தின் உணர்வுகளைத் தெரிந்தவன் தான் அந்த அகஸ்தியன். நாம் நுகரும் உணர்வுகள், நமக்குள் இருக்கக்கூடிய குணங்கள் எப்படி இயக்குகின்றது என்பதை எல்லாம் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்தியனின் உணர்வின் தன்மை கொண்டுதான் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டேயுள்ளோம்.

தீமைகளை வென்ற நஞ்சை ஒளியாக மாற்றிய அந்த அகஸ்தியன் அருளாற்றல்களைத்தான் உங்களுக்குள் திரும்பத் திரும்ப ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்குவது போல் பதிவாக்கிக் கொண்டேயுள்ளோம்.

நீங்கள் உங்களுக்குள் இதைப் பதிவாக்கினாலே போதுமானது. தீமை வரும் பொழுது தீமையை நீக்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி எடுத்தால் தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

மகிழ்ச்சி தன்னாலே வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். உங்களை நீங்கள் நம்புங்கள்.

May 29, 2016

பிரதோஷம் – தீமை செய்யும் உணர்வுகளை எல்லோரிடமிருந்து அகற்றச் செய்யும் இடமே ஆலயம்

சகஜ வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் நாம் பழக்கத்தில் பிறருடைய தீமைகளைக் கேட்டறியும்போது அது நமக்குள் தோஷமாக மாறுகின்றது. பல தீமைகளைச் செய்கின்றது.

அதை மாற்றுவதற்காக நாம் ஆலயத்திற்குச் சென்று காலை நான்கிலிருந்து ஆறுக்குள் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். என்றுன் எண்ணுதல் வேண்டும்.

அதே சமயத்தில் தன் கணவனுக்கு மனைவி கிடைக்க வேண்டும் என்றும் மனைவி கணவனுக்கு கிடைக்க வேண்டும் என்று இருவரும் சொல்லிவிட்டு இந்த ஆலயம் வருவோர் அவர்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர் ஜீவான்மாக்கள் பெற்று அவர் வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட வேண்டும்.

அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெறவேண்டும் வளம் பெறவேண்டும். அவர் வாழ்க்கையில் வளமாக இருக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும் அவர்கள் பெறவேண்டும். மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று ஒவ்வொருவரும் ஆலயத்தில் எண்ணுதல் வேண்டும்.

ஆகவே, இவ்வாறு நான் உங்களைச் சொல்கின்றேன். நீங்கள் என்னைச் சொல்லுகின்றீர்கள். அப்பொழுது என்ன செய்கின்றது?

இருவருடைய உணர்வுகள் நாம் பரிவால் பண்பால் கேட்டறிந்தாலும் நமக்குள் பதிவான நிலைகளை இதை அந்தத் தீமையென்ற உணர்வை நாம் நினைவை இழக்கின்றோம்.

காலை நான்கில் இருந்து ஆறுக்குள் இவ்வாறு இதை நினைத்தால் ஆறு மணிக்கெல்லாம் சூரியன் உதயமாகின்றது. தீமைகளை இழுக்கும் சக்தியை நாம் இழந்ததால் நமக்குள் இருக்கும் தீமையான உணர்வினை சூரியன் அழைத்துச் சென்று விடுகின்றது.

புவியின் ஈர்ப்பு வட்டத்தில் மற்ற தாவர இனங்கள் பூமியில் பதிந்துள்ளது. பூமியில் அந்த தாவர இனங்களின் சத்து படர்ந்துள்ளது. தாவர இனத்தில் விளைந்த வித்தை எடுத்து அந்த வித்தினை மீண்டும் பூமியில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பைக்கொண்டு அது பூமியில் பரவியுள்ள தன் இனச் சத்தை எடுத்து செடிகள் வளருகின்றது.

இதைப் போன்றுதான் இந்தத் தீமையான உணர்வுகள், தீய அணுக்கள் வளராமல் தடுக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? ஆக அந்த தீமைக்கு உணவு எங்கிருந்து கிடைக்கின்றது.

பிற மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து வைப்பதை நாம் எண்ணத்தால் உணர்ச்சியில் உந்தும் போது அதன் உணர்வுகள் கண்வழி இருந்து கவர்ந்து நமக்கு முன் ஆன்மாவாக மாற்றுகின்றது.

ஆன்மாவிலிருந்து நாம் சுவாசிக்கும் போது உயிரில் இயக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து இரத்தத்தின் வழி அந்த அணுக்களுக்கு அது உணவைக் கொடுக்கின்றது.

துன்பப்படுவோர் ஒருவரை உற்றுப் பார்த்தால் அதே உணர்வு செவி வழி பட்டபின் கண் வழி நுகர்ந்து அந்த உணர்வை உயிர்வழி நுகர்ந்தால் உயிரிலே பட்டபின் நாமும் வேதனைப்படுகின்றோம்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டுமா? வேண்டாமா..,? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

பிற தீமையான உணர்வுகளை அந்தப் பிரதோஷங்களை நாம் நீக்க வேண்டுமென்றால் நமது உணர்வுகள் அனைத்தும் அந்த அருள் ஒளிபெற வேண்டும் என்றும் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று நாம் கூட்டமைப்பாகச் செயல்படுத்த வேண்டும்.

கூட்டமைப்பாகச் செயல்படுத்தும் போது, இந்த ஆலயம் வருவோரெல்லாம் சொல்லும்போது எல்லோருடைய செவிகளில் விழுகின்றது. உயர்ந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையக் கண்கள் கவருகின்றது. எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வைப் பரப்புகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நுகரச் செய்கின்றது. நமக்குள் வரும் தோஷத்தை நீக்குகின்றது.

நான் உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொல்லும் போது உங்களுக்குள் இந்த உணர்வின் தன்மை செவிகளில் படுகின்றது. நான் எதை எண்ணி எதனுடய நிலைகளில் சொல்கின்றோமோ உங்கள் கண்ணின் நினைவுகள் அங்கே செல்லுகின்றது.

அந்த உணர்வின் தன்மை நுகரப்படும்போது உடலில் உள்ள துன்பங்களைப் போக்கும் அணுக்கள் உங்களுக்குள் விளைகின்றது.

பிரதோஷத்தைக் காசைக் கொடுத்துக் கழிக்க முடியாது

நாம் பல கோடிச் சரீரங்களிலில் துன்பங்களை நீக்கி நீக்கி இன்று துன்பத்தை நீக்கிடும் சக்தி பெற்ற மனித உடலில் இதனைச் செயல்படுத்தத் தவறினால் மனிதன் அல்லாத உருவை உருவாக்கி விட்டால் பல காலம் இங்கே உழல வேண்டும்.

ஆகவே நல்ல நினைவில் இருக்கும் பொழுதே தீமையை நீக்கிடும் நிலையை இப்போதே இழுக்கும்போது இதனைச் செயல்படுத்தி நமக்குள் அந்த அருள்வழி என்ற நிலைகளை அது ஓங்கிச் செயல்படுத்தப்பட வேண்டும்.

அது நம் உடலுக்குள் தீமைகளை அதர்வண என்று அடக்கி ஆக உணர்வின் தன்மை அந்த வித்தாக ஒளியின் சரீரமாக உருவாகும் அணுக்களை நமக்குள் ஆகும் யஜூர்.

இதனின் உணர்வின் தன்மை நமக்குள் விளைந்தால் அது தன் உணவுக்காக ஏங்கும். உயிரின் தன்மை உடலைவிட்டு இது செல்லும்போது எதன் உணர்வின் தன்மையை எடுத்தோமோ அங்கே செல்லும்.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிர் கவர்ந்ததோ இந்த அணுக்கள் அந்த உணர்வின் தன்மை அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்று அதன் உணர்வை எடுத்து இந்த உடலில் வந்த நஞ்சினைக் கருக்கிவிட்டு உன்னத ஒளியாக மாற்றும் நிலை.

அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருப்பதுதான் சப்தரிஷி மண்டலம். ஆகவே  ஞானிகள் காட்டிய அருள்வழியில் நாம் இதைப் பெறுதல் வேண்டும்.

நம் ஆலயங்களிலெல்லாம் நல்ல உயர்ந்த பண்புகளைப் காட்டப்பட்டுள்ளது. அங்கே பிரதோஷங்களை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

காலை நான்கு மணிக்கெல்லாம் சிவன் ஆலயத்தில் போய் நின்று ஈஸ்வரா என்று நம் உயிரை வேண்டி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று பல முறை சொல்ல வேண்டும்.

தன் மனைவிக்கும் அது பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்கும் பெறவேண்டும் என்றும் இரு உணர்வுகளையும் ஒன்றாக்க வேண்டும்.

ஒன்றாக்கிய பின் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும். அவர்கள் குடும்பம் முழுவதும் அது படர வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப வினைகள் தீய வினைகள் நீங்க வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் பேரருள் பெறவேண்டும். இருள் நீக்கி பெரும் அருள் பெறக்கூடிய அந்த சக்தி பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் பெறவேண்டும் என்றால் பிறருடைய தோஷம் நமக்குள் வராது எண்ணுகின்றோம்.

ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலைகளைச் சொல்ல வேண்டும். நாம் சொல்லும் உணர்வுகள் அங்கே படர்கின்றது. அந்த மனிதனுக்கு முன்னால் இருக்கின்றது. அதை அவன் நுகர்ந்தால் நந்தீஸ்வரன்.

அது பிறருக்கு நல்லதாக வேண்டும் என்று இந்த அருள் ஒளி பெற்று எனக்குள் நந்தீஸ்வரன் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை செல்லப்படும்போது உங்கள் உடலான நிலைகள் நீங்கள் எண்ணப்படும்போது நீங்கள் அதே மாதிரி எண்ணி சுவாசித்த உணர்வுகள் அந்த நந்தீஸ்வரனாக மாறுகின்றது.

நமக்குள் பிறர்ப்பட்ட துன்பத்தின் நிலையை நமக்குள் வளராது அந்த தோஷத்தை மாற்றுகின்றது. இதுதான் ஆலயங்களின் பண்பு.

காசு கொடுத்து விலைக்கு வாங்கி அவன் காப்பாற்றுவான் என்றால் அவன் இங்கு இல்லை. அது கல். நினைவுபடுத்தும் நிலை பெற்றது. நினைவுச் சின்னமே அது.

இந்தத் தெய்வ குணத்தை நீ பெற்றால் அதன் உணர்வை நுகர்ந்தால் அது துவைதம். அதாவது மனித உடல் ரிக். துருவ நட்சத்திரம் ரிக். அதிலிருந்து வரக்கூடிய மணம் சாம இசை.

ரிக் என்று நிலைகளில் வரப்படும்போது இங்கு துவைதம் என்பது உடல் உருவம். ஆலயங்களில் காவியமாகப் படைத்து, அந்த உருவத்தை காட்டி குணத்தைச் சித்தரித்துக் காவியமாகப் படைத்து இந்த உணர்வை நீ எடுத்தால் அந்த தெய்வமாக நீ ஆகின்றாய்.

அந்த உணர்வுகள் உனக்குள் வந்து அந்தத் தெய்வச் செயலாக உருவாக்கும் என்ற நிலையை நினைவுப்படுத்துவதற்காகத் தான் அங்கே சிலையை உருவமாக வைத்துள்ளார்கள்.

நாம் ஆலயங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஆலயத்தை மதித்து நடக்க வேண்டும். அது கல் என்று விட்டுவிடக்கூடாது.

நமக்குள் நல்ல உணர்வை ஊட்டும் நினைவுச் சின்னம் அது. அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

தெய்வ நிலைகள் நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷியின் அருள் உணர்வு நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் தீமைகளை நீக்கிடும் அந்த நல்ல குணங்கள் வளருகின்றது.

எல்லாரும் நன்றாக ஆக வேண்டும் என்பது அந்தத் தெய்வ சக்தியாக அது நமக்குள் வருகின்றது. நம் சொல் தெய்வச் சொல்லாக அது இயக்குகின்றது.

பிரதோஷத்தை (பிறருடைய தோஷத்தை) அதிகாலை நான்கு மணிக்குக் கழிக்கச் சொன்னார்கள் ஞானிகள்...!

பிறருடைய நோய்களை நாம் ஏற்று பரிவுடன் பண்புடன் கேட்டால் அந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்தால் நம்மை அது இயக்கிவிடும். அவன் உடலிலே வலிமை பெற்றது நோய்.

ஆனால், சாந்த உணர்வின் நிலைகள் அதனுடைய வலிமையை இழந்ததுதான். நல்லதைச் செய்ய வலிமை பெற்றது தீமை என்ற உணர்வுகள் பெற்றால் சாந்த உணர்வுகள் வலிமை இழக்கின்றது.

ஆகவே இவர் நோகும்போது நமக்குள் தோஷம் வந்துவிடுகின்றது. இதைத் துடைக்க வேண்டும் அல்லவா?

இந்தத் தோஷத்தை நீக்குவதற்குத்தான் காலை 4 மணிக்கு எல்லாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுப்பதற்கு ஞானிகள் காட்டினார்கள். ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கின்றோம்?

ஈஸ்வரன் கோயிலில் போய் சாயங்காலம் 4 மணிக்கு அபிஷேகம் செய்து நந்தீஸ்வரனிடம் சொன்னால் அவன் ஈஸ்வரனிடம் சொல்லி நமக்கு நன்மை செய்வான் என்று இப்படி நம்மைப் பைத்தியக்காரர் ஆக்கியுள்ளார்கள்.

இந்தத் தீமையை வென்றவன் அகஸ்தியன். அதன் உணர்வை நுகர்ந்து பாருங்கள். இதன் வழி நீங்கள் செய்யுங்கள். உங்கள் உயிர் செய்யும்.

என்னைப் பார்த்து, நீ சாமி, சக்தி பெற்றவர் சாமி செய்வார் என்றால் நான் செய்ய முடியாது. நீங்கள் நலம் பெற வேண்டுமென்று நான் பிரார்த்திக்கலாம்.

அந்தப் பிரார்த்தனையின் உணர்வுகள் நான் சென்ற பாதையை உங்களுக்குள் பதிவாக்கலாம். இதை எண்ணினால் குரு சென்ற அருள் வழியில் தீமைகளை நீக்கும் நிலைகளைச் செய்யும்.

பள்ளிக்கூடத்தில் போய் படிப்பையெல்லாம் படித்த பிற்பாடு வாத்தியார் சொல்லிக் கொடுத்தார். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிட்டார். நான் இப்பொழுது எங்கு போனாலும் வாத்தியாரே வந்து சொல்லுவார் என்றால் வாத்தியார் சொல்லுவாரா?

பள்ளிக்கூடத்தில் போய் இஞ்சினியருக்குப் படிக்கின்றீர்கள். ஆசிரியர் எல்லாம் கற்றுக்கொடுக்கின்றார். அவரை நினைத்தால் போதும் எல்லாம் அவர் செய்து கொடுத்து விடுவார் என்று சொன்னால் வந்துவிடுவாரா?

அவரை நினைத்துவிட்டுச் சும்மா இருக்க முடியுமா?

சொல்லிக் கொடுத்த நிலைகளை அவரை நினைப்பதை எப்படி நினைக்க வேண்டும்?

அவர் எதையெல்லாம் செய்யச் சொன்னாரோ அந்த உணர்வின் தன்மை நாங்கள் பெறவேண்டும் என்று அதை நுகர்ந்தால் அந்தச் செயலின் தன்மை இந்த உணர்வுகள் நமக்குள் உயிர் அந்த உணர்வை எடுத்து நம்மைச் செயல்படுத்த வைக்கும்.

ஏனென்றால், இங்கே இப்பொழுது (உலகம் முழுவதுமே) பெரும்பகுதி சாமி செய்வார் சாமியார் செய்வார் யாகம் செய்யும் மந்திரம் செய்யும் எந்திரம் செய்யும் யாரோ செய்வார்கள் என்ற நிலைகளில் தான் நாம் சென்று கொண்டிருக்கின்றோம்.

அருள்ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் ஆலயங்களில் காட்டப்பட்டுள்ளது. உனக்குள் இருக்கும் ஈசனை நீ மதி. அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலைக் கோயிலாக மதி. மனிதனால் உருவாக்கிய நற்குணங்களை நீ மதி.

அதன் உணர்வு கொண்டு நல்ல குணங்களைக் காக்கப்பட வேண்டுமென்றால் தீமைகளைப் பார்க்கும்போது பிறருடைய தீமைகள் நமக்குள் வந்தால் அதை எப்படி தூய்மையாக்க வேண்டும் என்று உணர்வினைத்தான் ஆலயத்தில் பதிவாக்கி உள்ளார்கள்.

தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் அதிலுள்ள செம்பையும் பித்தளையையும் அது கரைக்கின்றது. இதைப்போலதான் அருள்ஞானியின் உணர்வை நாம் நுகர்ந்தால் நமக்குள் இருக்கும் தீமைகளைக் கரைக்கின்றது.

நஞ்சை வென்றவனின் இந்த உணர்வின் தன்மை நம் தீமைகளை அடக்குகின்றது.

நல்ல குணம் கொண்டு தீமையின் உணர்வை நாம் நுகரப்படும்போது நல்ல குணத்தை அது அடக்குகின்றது அதர்வண. அதே சமயத்தில் இவை எல்லாம் அடக்கியது துருவ நட்சத்திரம்.

அதாவது துருவ நட்சத்திரம் ரிக். அதிலிருந்து வரக்கூடிய மணம் சாம. அதன் உணர்வை நாம் நுகர்ந்தால் இந்தத் தீமைகளை அடக்கக்கூடிய வல்லமை பெற்றது அதர்வண.

இந்த உணர்வின் தன்மை இழுத்துக் கொண்டபின் மீண்டும் அந்த துருவ நட்சத்திரத்தை எண்ணும்போது அது நமக்குள் வித்தாகின்றது யஜூர். அது வித்தானபின் மீண்டும் சாம.

எந்த உணர்வின் தன்மையை நாம் பெற்றோமோ அதன் ஈர்ப்பு வட்டத்தில் இந்த உணர்வுகள் அழைத்துச் சென்று அந்த அகஸ்தியன் பிறவியில்லா நிலை கொண்டு எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றானோ அங்கே அழைத்துச் செல்லும்.

பிரதோஷம் – பிரதோஷம் என்றால் என்ன? விளக்கம்

“எனக்கு இப்படித் துரோகம் செய்தான் பாவி..,” என்று எண்ணினால் இந்த உணர்வைப் பெற்றால் அடுத்து அவன் உணர்வுக்குள் நம்மை இழுத்துச் சென்று அவனைக் கெடுத்து பாம்பாகவோ தேளாகவோ பிறக்கச் செய்யும் நம் உயிர்.

அவனையும் கெடுக்கும். ஆகவே, மீண்டும் இங்கே பிறவிக்கு இழுத்து வரும். இதைப்போன்ற நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் அல்லவா?

அதற்குத்தான் ஆலயங்களிள் பிரதோஷம் என்ற நிலைகளைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

நமது வாழ்க்கையில் நாம் யாருமே தவறு செய்யவில்லை. நல்ல பண்பும் பரிவும் கொண்டு பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் செய்த பாவ நிலைகளும் தோஷ நிலைகளும் நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.

பல தோஷங்கள் செய்திருப்பார், பல பாவ நிலைகள் செய்திருப்பார், பல கொடூர உணர்வுகளைப் பார்த்திருப்பார், அவர் உடலில் தோஷமாக ஒட்டி அந்த உணர்வின் தன்மை வரும்.

அவரை நாம் பார்த்தால் அதன் உணர்வுகள் நமக்குள் தோஷங்களாக மாறுகின்றது.

இந்தத் தோஷத்தை மாற்றுவதற்காக சாயங்காலம் ஈஸ்வரன் கோயிலில் போய் நந்தீஸ்வரனுக்குப் பூஜை செய்துவிட்டு “நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா..,” என்கிறார்கள்.

நான் எல்லோருக்கும் அவர்கள் கஷ்டப்படும்பொழுதெல்லாம் உதவி செய்தேன், அவர்களுக்கு உதவினேன், இவர்களுக்கு உதவினேன் என்று சொன்னால் அவன் போய்ச் சொல்லப் போவதில்லை.

ஒரு நோயாளியின் உணர்வைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. நோயாளியை நாம் உற்று நோக்கினால் அந்த உணர்வின் தன்மை அதே நிலையை நமக்குள் ஆக்குகின்றது. ஆகவே, தோஷங்கள் இங்கே சாடுகின்றது.

இத்தகைய தோஷத்தை எல்லாம் நீக்கியவன் அந்த அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமானான் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதை சூரியன் கவர்ந்து வருகின்றது.

அதிகாலை 4 மணிக்கு எல்லாம் அது வெளிப்படுவதை நமது பூமி துருவப் பகுதியில் கவருகின்றது. நம் எண்ணத்தை காலை 4 மணியில் இருந்து 6 க்குள் துருவத்தின் வழியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம்மை மனிதனாக உருவாக்கியதே தாய், தந்தை. அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால், தாய் நம்மை எப்போதும் காக்கும் உணர்வு பெற்றவள். நம்மை எப்பொழுதும் பாதுகாக்கும் நிலை பெற்றவள். தந்தையைக் காட்டிலும் தாயின் நினைவுகள் நமக்குள் அவர் உடலின் நிலைகள் உருவாக்கி நமக்கு உணவாகக் கொடுத்து நம்மை உருவாக்கி மனித உருவைச் சீராக்கிக் கொடுத்தவள்.

பிறந்தபின் தன் துன்பத்தைப் பாராது நம்மைக் காத்தவள் தாய். ஆகவே அந்தத் தாயின் உணர்வை நாம் எப்படி கொண்டுவர வேண்டும்?

 நாம் சுவாசித்த உணர்வு நமக்குள் நந்தீஸ்வரன் ஆக இயக்குகின்றது.

தீமையின் நிலைகளைப் போக்க வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டால் நம் உயிர் அந்த உணர்வின் தன்மை நுகர்ந்து அதே உணர்வின் அணுவாக நமக்குள் உருவாக்குகின்றது.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி இதைப் பல முறை எண்ணி அந்த உணர்வை நமக்குள் சேர்த்துக் கொள்தல் வேண்டும்.

அகஸ்திய மாமகரிஷியை எண்ணி அவன் பெற்ற உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும். அவன் சென்ற பாதையில் நாங்கள் செல்ல வேண்டும் என்று எடுக்க வேண்டும்.

ஏனென்றால் அவன் இதைப்போல தீமைகளை இந்த தோஷங்கள் எல்லாம் நீக்கி ஒளியின் தன்மை பெற்றவன். அதன் உணர்வை நாம் நுகர்ந்தால் நந்தீஸ்வரன்.

அந்தத் துருவ நட்சத்திரம் நமக்குள் உருவாகி அது ஈசனாக உருவாக்கி நம்முடைய உடலில் உள்ள தோஷங்களை நீக்க வல்லமை பெற்றது. 

May 26, 2016

துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உயிரிலே மோதச் செய்தால் “கிரியை”

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகள் உங்கள் வாழ்க்கையைச் சீர்படுத்தவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெருக்கவும் இந்த உடலில் பிறவியில்லா நிலை அடையவும் உங்களுக்கு உதவும்.

ஆகவே, யாம் பதிவு செய்யும் அருள் ஞானிகளின் அருள் வித்துக்களுக்கு ஆக்கச் சக்தியாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை ஏங்கிப் பெற ஏங்கித் தியானியுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளியினை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறவேண்டும் என்று உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கித் தியானியுங்கள்.

எதை நாம் பெறவேண்டும் என்றாலும் அதற்கு முழுமையான ஆசை வேண்டும். அதாவது, "இச்சா சக்தி..., கிரியா சக்தி".

ஒரு மனிதனின் வேதனையை அறியச் செய்யும் பொழுது இச்சை. நம் உயிரிலே மோதும்போது கிரியை. வேதனை உணர்ச்சிகளை நாம் அறிகின்றோம். வேதனை உணர்வு நம்மை இயக்கி நம்மையும் வேதனைப்படச் செய்கின்றது.

ஆனால், உங்களுக்குள் வேதனையை நீக்கிய உணர்வினை இப்பொழுது பதிவு செய்கின்றோம். வேதனையை நீக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியினைப் பெறவேண்டும் என்ற இச்சை, அந்த ஆசை உங்களுக்கு வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உயிரிலே மோதச் செய்யும் போது கிரியை. அந்த உணர்வின் தன்மை அதன் ஞானத்தின் வழியில் உங்களுக்குள் அது சேர்ப்பிக்கும்.

ஆகவே, நீங்கள் இச்சைப்படுவது எதுவாக இருக்க வேண்டும்?

நஞ்சினை வென்றிடும் இருளினை நீக்கிப் பொருளினைக் காணச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளைப் பெறவேண்டும் என்ற இச்சைப்படுங்கள்.

அந்த உணர்வின் தன்மை உங்கள் உயிரிலே மோதச் செய்யுங்கள். இந்த உணர்ச்சிகளை உங்கள் உடல் முழுவதும் படரச் செய்யுங்கள். உங்கள் உடலிலுள்ள நல்ல அணுக்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியி்னைச் சேர்ப்பியுங்கள்.

தீமையைப் பிளக்கும் ஆற்றல் பெறுவீர்கள். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் பெறுவீர்கள்.

உங்கள் பார்வையால் மூச்சால் மற்றவர்களுடைய தீமைகளும் வேதனைகளும் அகற்ற முடியும். 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ள முடியும். மகரிஷிகளின் உணர்வலைகளை எளிதில் பெற முடியும். அவர்களின் ஆற்றலும் உங்களுக்குள் பெருகும்.

ஆகவே, துருவ நட்சத்திரத்துடன் ஒன்றி வாழும் நிலை பெறுங்கள்.

May 25, 2016

தீமையை நீக்கும் உணர்வை “அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை” நாம் பெற்றுப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்

நாம் எண்ணும் உணர்வுக்கொப்ப இந்த மனித உடலை இயக்கத் தெரிந்து கொண்டவர்கள் நாம், நமது ஆறாவது அறிவு கார்த்திகேயா.

ஒரு தையல் இயந்திரத்தில் தைக்கும்போது நாம் நுகர்ந்து செயல்படுத்தும் போது முதலில் நாம் கூர்மையாக எண்ணி அதை உற்றுப் பார்த்துத் தெரிந்து, தைக்கும் நிலைகளைப் பழகிக் கொள்கின்றோம்.

 அந்தப் பழக்கத்தின் உணர்வை உணர்த்திவிட்டால் நாம் எண்ணும் போது அந்தத் தையல் விலகிச் செல்லாதபடி இந்த உணர்வுகள் தான் இயக்குகின்றது.

அப்பொழுது அந்த உணர்வுக்கு இந்த ஆறாவது அறிவுதான் அதை உணர்த்தப்பட்டு அதைப் பழக்கப்படுத்தி அதற்குத்தக்க அந்தக் கை மற்ற அங்கங்களை இயக்கச் செய்கின்றது.

இதைப் போல்தான் கையில் பின்னலாடை செய்வோரும் அந்தப் பழக்கப்படுத்திவிட்டால் நம்முடன் பேசிக் கொண்டே அந்த உணர்வுகள் இயக்கிப் பின்னி விடுவார்கள்.

 இப்படி ஒவ்வொருவரும் அவர்கள் பழக்கப்படுத்திய நிலைகள் கொண்டு செயல்படுத்துகின்றார்கள். ஆக, நாம் பழக்கப்படுத்திய உணர்வுதான் அங்கே இயக்கப்படுகின்றது.

இதைப் போலத் தீமையை நீக்கிய உணர்வுகளை அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றுப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதைப் பழக்கப்படுத்திவிட்டால் நாம் எத்தகைய நிலைகளில் இருந்தாலும் அந்தத் தீமையை நீக்கும் உணர்ச்சிகள் வந்து தீமையை நீக்கி அந்த உணர்வுகளை ஒளியாக மாற்றிடும் தன்மை பெறுகின்றது.

நாம் பிறருடைய கஷ்டத்தை நுகர்ந்தால் நமது உயிர் அந்த உணர்வின் தன்மையை நமக்குள் இயக்கிவிடுகின்றது. அப்பொழுது அந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது.

கோபப்படுவோரைப் பார்த்தால் அவனை நுகர்ந்தால் நமக்கும் கோபம் வருகின்றது. அப்பொழுது யார் இயக்குவது? நாம் நுகர்ந்த உணர்வுதான் நம்மை இயக்குகின்றது.

ஆகவே, இந்த ஆறாவது அறிவின் தன்மை கொண்டு தீமையின் உணர்வு நமக்குள் வராமல் தடுக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலையை நாம் இயக்கி இந்த உடலை நமக்குகந்ததாக நம் எண்ணம் சொல் செயல் என்ற நிலைகளை மாற்றியமைத்துப் பழகுதல் வேண்டும்.

அதற்காகத்தான் அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில் எத்தனைவிதமான குறைபாடுகளை அறிய நேர்கின்றதோ அதை நீக்க அடுத்த நிமிடமே உங்களுடைய உணர்வுகள் துருவ நட்சத்திரத்தின் பால் இணைத்து தீமையை அப்பொழுதே தூய்மைப்படுத்திக் கொள்ளும் அந்த உணர்வின் தன்மையைப் பழக்குதல் வேண்டும்.