1. நம்மைப் போன்று ஆதியில் வாழ்ந்த மனிதர்கள் இன்று எப்படி,
எங்கே வாழ்கின்றார்கள்?
ஆதியிலே முதல் மனிதன் அணுவின்
ஆற்றலைக் கண்டுணர்ந்து, நஞ்சினை வென்று, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி, துருவ மகரிஷியாகி,
அவர் துருவம் சென்றடைந்து துருவ நட்சத்திரமானார்.
துருவ நட்சத்திரத்திலிருந்து
வெளிப்படும் உணர்வலைகளை சூரியனின் காந்தசக்தி கவர்ந்து, அலைகளாக நமது பூமியில் அதுவும்
படர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆக, அகஸ்தியனுக்குப் பின்
வந்த அக்கால மக்கள்
தன்னைக் காத்திடும் உணர்வு
கொண்டு விண்ணை நோக்கி ஏகி,
அவர்கள் சூரியனை எண்ணும்
பொழுது அதனைக் கவர்ந்து,
துருவ நட்சத்திரத்தைப் பின்பற்றி
அதை வளர்த்துக் கொண்டார்கள்.
அவர்கள் அனவரும் சப்தரிஷி மண்டலங்களாக, அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வின் ஆற்றலைக்
கவர்ந்து, அதன் ஈர்ப்பு வட்டத்தில்
சுழன்று கொண்டு இருக்கின்றார்கள்.
நம் பூமியில் வாழ்ந்து வளர்ந்த
அந்த மனிதன் துருவத்தில் வரும் நஞ்சினை அடக்கி, தன் உணர்வை ஒளியாக மாற்றிய
முதல் மனிதன் அகஸ்தியன் இன்றும் ஒளியாக துருவ நட்சத்திரமாகத்
திகழ்ந்து கொண்டுள்ளான்.
நம் சூரியக் குடும்பத்தில்
கோள்களும், நட்சத்திரங்களும், சூரியனை மையமாக வைத்து அதனின் ஈர்ப்பு வட்டத்திலே சுழலுகின்றது.
அதைப் போல, சப்தரிஷி மண்டலமும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றலை உணவாகக்
கொண்டு, அகஸ்தியரைப் பின் தொடர்ந்து வாழ்கின்றது.
நமது குருநாதர், மாமகரிஷி
ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில், நாம் அனைவரும்
அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழ்ந்திடும் நிலையாக
அழியா ஒளிச் சரீரம் பெறுவதற்கே
இதைத் திரும்பத் திரும்ப
உபதேசிக்கின்றோம்.
2. மனித வர்க்கத்தையே
முழுமை அடையச் செய்யும் விநாயக தத்துவம்
அம்மா அப்பா இறந்துவிட்டால்
நாம் என்ன செய்கின்றோம்? மூத்த மகன் செய்யவேண்டிய கடமை என்று மாவு விளக்கு ஏற்றி, நெய்
தீபம் இட்டு அணையாது காத்து, விநாயகர் கோவிலுக்குள் சென்றபின் அங்கு அர்ச்சனை செய்துவிட்டால்,
மோட்சத்திற்குப் போய்விடுவார்கள் என்று சாஸ்திர விதிகளை எழுதி வைத்துள்ளார்கள்.
இப்படி, விளக்கு அங்கு ஏற்றுவது அல்ல.
விநாயகனை வணங்கப்படும் பொழுது, அவர்களின் உணர்வை நாம் அங்கே எண்ணி,
உடலை விட்டுப்பிரிந்து சென்ற
சூட்சம சரீரத்தை,
அந்த சப்தரிஷி மண்டல
ஒளி அலையுடன் கலக்கச் செய்யவேண்டும்.
அப்பொழுது, உடல் பெறும் உணர்வுகள்
அங்கே கருகி, அந்த ஒளிக்கடலுக்கு அனுப்பிவிட்டு உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி என்றும்
ஒளியின் சரீரமாக இருக்க வேண்டும் என்று மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை நமக்குள்
வளர்த்து, அவர்கள் விண் செல்ல நாம் தியானிக்க வேண்டும்.
தாய் தந்தையர் முதல் மனிதனானார்கள்.
அவர்கள் நம்மை மனிதனாக்கினார்கள். அவர்களின் இனமான நாம், விழுது மரமாக்கியது. அந்த
உணர்வின் தன்மை கொண்டு நாம் விண் செலுத்தும் பொழுது, அவர்கள் முன் விண் சென்றால்,
அவர்களின் நினைவலைகள் நம்மை அங்கு இழுத்துச் செல்ல இது உதவும்.
இதைத்தான், மெய்ஞானிகள் நமக்குக்
காட்டிய அருள் வழியாக, மெய் வழியாக, மனிதன் முழுமை அடையும் ஒரே வழியாக, இந்த விநாயக தத்துவத்தைக் காட்டியுள்ளார்கள்..