ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2013

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உறுப்புகளை எப்படி இயக்குகின்றது?

1. கோப குணம் அதிகமாக உள்ளவர்களின் செயல்கள்
நமது உடலில் பல வகையான குணங்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகச் செயல்படும். ஒருவர் அடிக்கடி கோபமான குணத்தைச் செயல்படுத்துவார். அது கணங்களுக்கு அதிபதியாகி விட்டால் அவர் உடலிலே இரத்தக் கொதிப்பும், அடிக்கடி பிறரைத் தாக்கும் உணர்வுகளும், தன்னையறியாமலேயே, கோபிக்கும் நிலைகளும் வரும்.

ஒருவர் சாதாரணமாக எளிமையில் வேலை செய்து கொண்டிருப்பார். அவரைப் பார்த்தாலே இவருக்குக் கோபங்கள் வரும்.

அதிகமாகக் கோபப்படுபவர்களுக்கு, வீட்டில் யாரையாவது, ஏதாவது வாங்கிவரச் சொன்னால், அவர்கள் ஓடவேண்டும், ஓடவில்லையென்றால்,
நடக்கிறான் பார், போகிறான் பார்,
சொல்வதைக் கேட்கின்றானா பார் என்று,
இப்படி தன்னை அறியாமலேயே இந்த உணர்வுகள் கணங்களுக்கு அதிபதியாகி, இந்த உணர்வின் செயலை இது உருவாக்கும்.

ஆக அந்த நிலைகளை நாம் எடுப்போமென்றால், நாம் எடுக்கும் உமிழ்நீர், நமது உடலில் கலந்து, கலந்த இந்த நிலைகள் நமது உடலிலே சேர்ந்தபின், இது  உடலிலே ரத்தமாக மாற்றும் பொழுது, ரத்தத்துடன் கலந்து, இந்த ரத்தத்துடன் கோப உணர்ச்சிகளை அதிகமாகத் தூண்டுகின்றது.

இந்த கோபம் வருவது ஒன்று மட்டும் தனியாக இருப்பது இல்லை. கோபம் வந்துவிட்டால், “இப்படிச் செய்கின்றானே என்று வேதனைப்படுவார்கள்.

வேதனை என்பது விஷம். வேதனை என்ற விஷமான உணர்வும், கோப உணர்வும் இரண்டும் கலந்து, இந்த உணர்வின் சத்து ரத்தமாக  மாறுகின்றது.
2. கோபமான உணர்வும், வேதனையான உணர்வும் சேர்ந்து இதய நோயாக  (HEART ATTACK) வருகின்றது
நமது இதய வால்வு ரத்தத்தை உறிஞ்சி உடல் முழுவதும் பரப்புகின்றது.
ரத்தத்தை உறிஞ்சும் இந்த பிஸ்டன் (PISTON),
அது இழுத்து, சுவாசப்பைக்குள் அது ரத்தத்தைச் செலுத்தி,
மீண்டும் அது சிறுநீரகத்திற்கு அனுப்பும்.

சிறுநீரகத்திற்கு வந்தவுடனே, அது ரத்தத்தில் உள்ள மாசுகளை சுத்தம் செய்யும். நாம் எடுத்துக்கொண்ட
கோபமான, வேதனையான உணர்வுகள்
இந்த இதய வால்விலே உராயப்படும்பொழுது,
அங்கே எரிச்சல் ஏற்படும்.

நமது காரமான நிலைகள், கோபப்படவரின் உணர்வும், வேதனைப்பட்ட உணர்வும் ஆக, இரண்டு உணர்வுகளும் கலந்தவுடனே எறும்பு கடித்தால், நமக்கு எப்படி வீங்குகின்றதோ, இதைப் போல வேதனையின் காரமான குணங்களின் உணர்வுகள் கலந்த ரத்தங்களை இதயம் இழுத்துப் பாய்ச்சச் செய்யும்பொழுது (PUMPING) ரத்தங்கள் வால்வுகளில் உராயப்படும் பொழுது, வால்வுகள் வீக்கமடைந்து விடுகின்றன. 

அப்பொழுது வால்வுகளில் சீரான இயக்கமில்லையென்பதால், ஒரு பக்கம் பார்த்தவுடனே நெஞ்சு எரிகின்றது என்பார்கள். அந்தப் பக்கம் எடுத்தால் பளீர், பளீர் என்று மின்னும்.

ரத்தத்தை உடலின் மற்ற பாகங்களுக்கு இதயம் செலுத்தச் செய்யும் பொழுது, இந்த நிலையை மாற்றி மறு பக்கம் உறுப்புகளை மாற்றி அமைக்கும். இந்த வேளையில் வலி எடுக்க ஆரம்பித்துவிடும்.

வலி எடுக்க ஆரம்பித்தவுடனே, ஹார்ட் அட்டாக் (HEART ATTACK) வந்துவிடுமோ என்று பய உணர்வுகள் அதிகமாக வந்துவிடும். ஆக, நாம் எண்ணத்தால் எண்ணி சுவாசிக்கும் உணர்வின் தன்மை, நம்மையறியமலேயே இப்படிப் பல செயல்களைச் செய்விக்கும்.

இதைப் போல வேதனையும், கோபமும் அதிகமாகி, வால்வின் நிலைகள் அதிகமாக வீக்கமாகி விட்டால்,
அது எடுக்கும் ரத்தத்தை சுத்தமாக நிறுத்திவிடும்.
இதை இயக்கும் சிறுமூளையின் பாகமும். இதை இயக்க மறுக்கும்.

இவ்வாறு இயக்க மறுக்குமேயானால், உறுப்புகளில் சுவாசப் பைகளை அது செயல்படாது இறுக்கும். ஒரு நிமிடத்திற்குள், பளீர் என்று  மின்னியது போன்ற நிலையில் விரிந்த நிலைகள் மூடாது நிறுத்திவிடும், உடன் மூச்சு வெளியிலே போய்விடும்.
3. உயிர் எப்பொழுது உடலைவிட்டுப் பிரிய நேருகின்றது?
நாம் எந்தெந்த குணங்களை எண்ணுகின்றோமோ, அவை அனைத்தும் சூரியனின் காந்த சக்தி கவருகின்றது. நாம் எந்த குணத்தை எண்ணுகின்றமோ, காற்றிலிருந்து தனக்குள் எடுக்கும் அதன் வழிகொண்டு, நமது உடலுக்குள் இந்த காந்தப்புலன்கள் மற்றொன்றுடன் உராயப்படும் பொழுதுதான், நாம் இயங்குகின்றோம்.

ஒரு மோட்டாருக்கு காந்த சக்தி (MAGNETIC POWER) இருக்கும் பொழுது, அதனைச் சுழற்றப்படும் பொழுது, இடைவெளி விட்டபின்
அதனுடைய தன்மைகள் விட்டுவிட்டு இருந்தவுடனேதான்,
சுண்டி இழுக்கும் தன்மை பெறுகின்றது.

இதைப் போலத்தான், நாம் சுவாசிக்கும் உணர்வுகள் எந்த குணமானாலும்,
நாம் சுவாசித்த உணர்வுகள் உயிருடன் உராயப்பட்டு,
இந்த உணர்வுகள் நமக்குள் கரண்டை உற்பத்தி செய்து,
நம் எடுத்துக்கொண்ட உணர்வின் சத்தை உமிழ்நீராக மாற்றுகின்றது.

பின், அதை நமது உடலுக்குள் மற்ற உணர்வுகளுக்கு ஆகாரமாகக் கொடுக்கின்றது. இவ்வாறு செயல்படும்.
நம் உயிருக்குள்,
நாம் இழுக்கும், இந்த சக்திகள் குறையப்படும் பொழுது,
இதற்குள் இயக்கச் சக்தி குறைந்தால்
நமக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளனைத்தும் செயலற்றதாகிவிடும்.

இந்த ஹார்ட் அட்டாக்வரக்கூடியவர்களுக்கு, உயிரின் துடிப்பு மட்டும் இருந்து கொண்டே இருக்கும். நாடியைப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் துடிப்பு இருக்கின்றது என்று சொல்வார்கள். 

உயிரின் துடிப்பு என்றும் அழிவது இல்லை. ஒரு மனிதன் தீயிலே குதித்தாலும், உயிரின் தன்மை நெருப்பிலே வேகுவது இல்லை. அந்தத் துடிப்பின் இயக்கமாகத்தான் இருக்கும், இயற்கையில் அது இவ்வாறு இயங்குகின்றது.

இப்பொழுது எடுத்துக் கொண்ட குணங்களுக்கொப்ப, கணங்களுக்கு அதிபதியாக உயிர் இயக்கப்படும் பொழுது, அந்தக் காரமான உணர்வுகள் மற்ற உறுப்புகளைத் தனக்குகந்ததாகச் செயல்பட்டாலும், செயல்பட முடியவில்லையென்றால்,
தன் உணர்வின் வேகம் கொண்டு
நல்ல குணங்களால் உருவாக்கப்பட்ட
நம் உடலின் உறுப்புகளைப் பாழாக்கிவிடுகின்றது.
வீணாக்கிவிடுகின்றது.

இதனின் தொடர்கொண்ட நிலைகளில், வீரிய உணர்வு கொண்டு கார உணர்வுகள் நம் உடலுக்குள் படரப்படும் பொழுது, அது முன்னிலையில் இருக்கப்படும் பொழுது, மற்ற குணங்களைச் செயலற்றதாக்கி, இதற்குள் அடிமைப்பட்டு, மேல் வலிக்கின்றது, இடுப்பு வலிக்கின்றது, தலை சுற்றுகின்றது என்று வேதனைப்பட்டுக் கொண்டிருப்போம்.

நாம் யாரும் தவறு செய்யவில்லை, ஆனால் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் இவ்வாறு ஆகிவிடுகின்றது. ஆக இதைப் போன்ற நிலைகளிலிருந்து தப்ப, நாம் அவசியம் இந்தத் தியானம் செய்தே ஆகவேண்டும்,
4. பேரருளைப் பெற்று, பேரொளியாக மாற வேண்டும்
எப்பொழுதெல்லாம் நாம் தீமைகளைக் காணுகின்றோமோ, கேட்கின்றோமோ அந்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆத்ம சுத்தி செய்து,
நமக்குள் தீமைகள் சேராது தடுத்துப் பழகவேண்டும்.
நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.

நாம் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று,தை நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளிலும் இணைக்க வேண்டும்.

பின், அந்த ஒவ்வொரு உறுப்பையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெரொளியைப் பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால், நம் உடல் உறுப்புகள் தீமையான உணர்வுகளைக் கழிக்கக்கூடிய சக்திவாய்ந்த உறுப்புக்களாக மாறுகின்றது. நாம் உடல் நலம் பெறுகின்றோம்.
பேரருளைப் பெறுகின்றோம்.
பேரொளியாக மாறுகின்றோம்.

ஆகவே, இதனை நாம் வளர்த்து, நம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் பெறச் செய்ய வேண்டும், உலக மக்கள்  அனைவரும் இந்த நிலை பெற தியானிக்கவேண்டும்.

இவ்வாறு நாம் சிறுகச் சிறுக செய்து வந்தால், நாம் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழமுடியும். மகிழ்ந்து வாழ முடியும். பிறவியில்லா நிலை அடையமுடியும். அழியா ஒளிச் சரீரம் பெறமுடியும். எமது அருளாசிகள்.