ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 25, 2013

மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் சேர்த்தால், அது தீமையை நீக்கும் ELECTRONIC ஆகின்றது

1. கம்ப்யூட்டரைப் போன்று, ஞானிகளின் உணர்வை நமக்குள் பதிவுசெய்து கொள்ள வேண்டும்
நமது வாழ்கையில், நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில், அந்த மெய்ஞானிகள் உணர்த்திய பேருண்மைகளை நமக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 எப்படி ஒரு கம்ப்யூட்டரில் உள்ள உணர்வின் செல்களில் (MEMORY UNITt) பதிவு செய்து, அதை இயந்திரத்தில் இணைத்தபின் அது எதிர்நிலைகளைக் கண்டுணர்ந்து
பெரிய இயந்திரத்தையும்
தன் உணர்வுக்கொப்ப இயக்குகின்றது.

அதாவது, எதனை நாம் ஆணையிடுகின்றோமோ அதனின் உணர்வுக்கொப்ப தீயதை அகற்றுவதும், தன் இனத்தைச் சேர்ப்பதும், எலக்ட்ரானிக் அதனின் நிலைகள் கொண்டு இன்று செயல்படுகின்றது.
இன்று எலக்ட்ரானிக் சோக் (ELECTRONIC CHOKE) வந்துவிட்டது
அதிகமான கரண்ட் வந்தால் அதனை அடக்கி,
விளக்கு பழுதாகாத வண்ணம் (Fuse ஆகாமல்)
சமப்படுத்துகின்றார்கள். இது விஞ்ஞான அறிவு.

இதைப் போல, அந்த மெய்ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து, “எலக்ட்ரானிக்”.
பிறிதொருவரின் வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்தாலும்,
அதனைக் கழித்துவிட்டு
நம் உணர்வை மாற்றிடாத நிலைகள் அடையும் வண்ணமாக
மெய் உணர்வை ஊட்டினார்கள் ஞானிகள்.
2. கூட்டுத் தியானத்தில் நாம் பெறுகின்ற வலிமை
நாம் ஆலயங்களில் தேர் இழுக்கப்படும் பொழுது பலரும் ஒன்று சேர்ந்து, அந்தக் கடினமான தேரை இழுப்பது போன்று, உபதேசத்தில் கேட்டுணர்ந்த உணர்வு கொண்டு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி தியானிக்கும் பொழுது காற்றுக்குள் மறைந்துள்ள மெய்ஞானிகளின் உணர்வுகளை நாம் வாழும் இடத்தில் படரச் செய்வதுதான் கூட்டு தியானம்.

இதை நுகரும் பொழுது, அது உங்கள் உடலுக்குள் பதிவாவது மட்டுமல்ல. தியானத்தில் அமர்ந்த அனைவரும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற்று, அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற உணர்வினை வெளிப்படுத்தும் பொழுது, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, உயர்ந்த எண்ணத்தின் வலுவாக அது கூடி, உங்களுக்குள் சக்தி வாய்ந்த உணர்வலையாகப் பதிவு செய்வதே கூட்டுத் தியானம்.

இதிலே பதிவானபின், அனைவரின் எண்ணத்தின் வலு கொண்டு ஒவ்வொருவரும் நாம் ஈர்க்கும் திறன் பெற்று, படரச்செய்த உணர்வுகள் நமக்குள் அது இணக்கும் சக்தியாக மாறியபின்,
அடுத்து நாம் தனித்துத் தியானித்தாலும்
அருள் சக்திகளை நமக்குள் பெறச்செய்கின்றது.