ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2013

நாம் எண்ணுவதை உயிர் எவ்வாறு இயக்குகின்றது?

இன்றைய விஞ்ஞான உலகில், அமெரிக்காவில் டென்னிஸ் விளையாடுகிறார்கள் என்றால், நமது வீட்டில் இருக்கும் குழந்தைகள் TV மூலம் இவர்கள் யார் மேல் அன்பு கொண்டு இருந்தார்களோ, அவர்களின் விளையாட்டைப் பார்த்துத் துள்ளிக் குதித்து, அதிகமாகத் தன் உணர்வின் ஆர்வத்தைக் காட்டுகின்றனர். தோல்வி அடைந்து விட்டால், மிகவும் வேதனைப்படுகின்றனர்.

பிஞ்சு உள்ளங்களில் சோர்வும் வேதனையும் படும்பொழுது, இந்த விஞ்ஞான உலகில் குழந்தைகள் ஒன்றும் அறியவில்லை என்றாலும், ஆட்டத்தில் ஆர்வம் கொண்ட நிலைகள் சோர்வும் வேதனையும் படும்பொழுது, இந்த இரண்டு உணர்வையும் அந்தப் பிஞ்சு உள்ளங்கள் சுவாசிக்க நேருகின்றது. உயிரோ அதனை இயக்குகின்றது.

ஒரு கம்ப்யூட்டரில் நாம் எத்தகைய நிலையை இயக்குகின்றோமோ, அந்த உணர்வலையை
கம்ப்யூட்டரில் உள்ள காந்தப்புலன்
அவைகளைப் பிரித்து, நமக்கு அறிவிக்கின்றது.

இதைப் போன்றுதான், நமது உயிர் நாம் எத்தகையை குணத்தை எண்ணுகின்றோமோ, அதனின் உணர்வைப் பிரித்து எலக்ட்ரானிக்காக மாற்றி,
அதனின் உணர்வலைகள் எதுவோ,
அதை நமது உடலிலே இயக்கிக் காட்டுகிறது.

இந்த உண்மையை, அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே, உணர்வின் அலைகள் இயங்குவதை ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.
“ஓ” என்பது பிரணவம்,
“ம்” என்பது பிரம்மம்.
நமது உயிர் ஜீவனாக இருந்து இயங்குகின்றது,
நாம் எண்ணியதை ஓம் என்று உடலாக ஆக்குகின்றது.

சூட்சம நிலைகள் கொண்டதை நாம் எண்ணும் பொழுது, உயிருக்குள் பட்டு எலக்ட்ரானிக்காக மாற்றி உடலை இயக்குகின்றது. நாம் எண்ணிய அந்த குணத்தை ஜீவனாகச் செய்கின்றது. “ம்” என்று நம் உடலாக இணையச் செய்கின்றது. இதைத்தான் ஓம் நமச்சிவாய, சிவாய நம ஓம்.

இப்பொழுது, டேப்பில் எதைப் பதிவு செய்கின்றனரோ பதிவு செய்ததை, காந்தப்புலன் கொண்ட ஊசியுடன் உராயச் செய்யும் பொழுது,
பதிவு செய்த நிலைகளைத்தான்
மீண்டும் இயக்கிக் காட்டுகின்றது.
இதைப் போலத்தான், நமது உடலில் உள்ள புலனறிவும் நாம் எண்ணியதை நம் உயிர் இயக்கி, ஓம் என்று அந்த உணர்வின் சத்தை நமது உடலாக மாற்றி, அங்கமாக நம் உடலிலே பதிவு செய்துவிடுகின்றது.

நமது உயிர் நாம் எண்ணுவதை எவ்வாறு இயக்கி, நம் உடலாகச் சேருகின்றது? என்ற இந்த உண்மையினை பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்
அணுவின் ஆற்றலும்,
அணுவின் பெருக்கமும்,
அணுவின் இயக்கம் என்ற நிலையில்
அகஸ்தியர், தான் கண்டுணர்ந்த உண்மையினை அவர் உடலிலே விளைந்த உணர்வை வெளிப்படுத்தினார்.
நமது குருநாதர் காட்டிய வழியில்,
அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகளைத் தான்
உங்களுக்குள் சிறுகச் சிறுகக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.