1. சாகாக்கலை
நமக்கு உதவாது
இன்று சாதாரண நிலைகளில் இருக்கும்
நாம் எத்தனையோ மந்திரங்களை ஜெபிக்கின்றோம்.
எந்தெந்த மந்திரங்களை நாம்
ஜெபிக்கின்றோமோ
அதை ஜெபித்து, அந்த உணர்வை
நமக்குள் பதிய வைத்து,
எதைப் பெறவேண்டும் என்று
எண்ணுகின்றோமோ,
இந்த உணர்வின் தன்மை வலுவாக்கப்படும்
பொழுது,
அது சாகாக்கலை ஆகின்றது.
அதாவது, நாம் இறந்தபின் இதே
மந்திரத்தை ஒருவன் ஜெபிப்பான் என்றால், அந்த உடலுக்குள் இந்த நிலைகள் சாகாக்கலையாக
விளைந்து, அந்த உணர்வின் ஆற்றலை இயக்கும் இது சாகாக்கலை.
இந்த உடலிலே விளைந்த இந்த
உணர்வுகள்
எதை வளர்த்துக் கொண்டதோ, இந்தக் கலை
அடுத்த உடலுக்குள் போனவுடனே,
இதனையே இயக்கும்.
நீ எந்த உணர்வின் தன்மையை
நமக்குள் வளர்த்துக் கொள்கின்றோமோ, அது இந்த உடலிலே அழியா நிலைகள் பெறுகின்றது. இந்த
உணர்வின் ஆற்றல் இன்னொரு உடலுக்குள் சென்றாலும் அது சாகாநிலை அடைகின்றது.
உதாரணமாக, தனக்குள் இந்த
வாழ்க்கையை வெறுத்து, வெறுப்பின் தன்மையை வளர்த்து, இந்த உடல் எதற்கு? என்று தற்கொலை
செய்து கொண்டால், இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது சாகாக்கலையாக அடைகின்றது.
உடலைவிட்டுச் செல்லும் இந்த
உயிரான்மா இன்னொரு உடலுக்குள் சென்றபின், இது சாகாத நிலைகளில் அதே உணர்வின் தன்மை கொண்டு
வளர்ச்சியாகி,
அந்த மனிதனின் நல்ல உணர்வை
அழித்துவிட்டு
அழித்திடும் உணர்வு “சாகாநிலை” அடைகின்றது.
நாம் எந்தெந்த மந்திரங்களைச்
சொல்லி அந்த உணர்வுகளை வளர்த்துக் கொள்கின்றோமோ, இந்த உணர்வின் ஒலிகள் நமக்குள் பதிந்துகொண்டபின், இதே
மந்திரத்தை ஒருவர் ஜெபிப்பார் என்றால் இந்த உணர்வின் ஆத்மா ஜெபிப்பவர்களின் ஈர்ப்புக்குள்
சென்று, அதனின் நிலைகள் சாகாக்கலையாக அங்கே உணர்வின் தன்மை கொண்டு ஒன்றி, இந்த ஆன்மா
அங்கே வாழும்.
அங்கு வாழ்ந்தாலும், அவர்
இச்சைக்கு எடுத்துக் கொள்ளும் சிரமங்களை ஏற்படுத்தும் நஞ்சினை உட்கொண்டால், இந்த உடலில்
உள்ள ஆன்மாவிற்கு நஞ்சின் தன்மை அதிகமாகின்றது.
எந்த மனிதரானாலும், தனது உடலுக்குள் ஆகும் பொழுது நோய் இல்லாது
வளர்வது இல்லை.
தனக்குள் மாறுபட்ட உணர்வின்
தன்மை கொண்ட குணங்களைச் சுவாசிக்கும் பொழுது எதிர்நிலையாகி, அது நோயாகி, அதனின் நிலைகள்
வளர்ச்சியாகும் பொழுது, அதற்குள் சென்ற இந்த உயிரான்மா மனிதஉரு பெறும் கருவாக, அது
உருவாகாது.
ஆகவே, கருவாகாதபடி இந்த நோயையே
அங்கு உருவாக்கி,
இந்த உணர்வின் இயக்கமாக அந்த
உடலைப் பயன்படுத்தி,
தனக்கு வேண்டிய உணவை எடுத்துக்
கொள்ளும்.
அதனால் தான் இதைச் சாகாக்கலை என்பர்.
2. எதனிலும் அழியாதது ஒளியாக மாற்றுவது - அதுதான் வேகாக்கலை
ஆனால், மெய்ஞானிகளோ “வேகாக்கலை” என்பர். இன்று விண்ணிலிருக்கக்கூடிய எந்த நஞ்சும் இதை அழித்திடாத நிலைகள்
கொண்டு,
எதனிலும் அழியா நிலைகள் பெற்று,
தன் உணர்வின் நிலையை ஒளியாக மாற்றி
வேகாக்கலை என்ற நிலை பெற்றவர்
அகஸ்தியர்.
அவரிடமிருந்து வெளிப்படும்
உணர்வின் ஆற்றல், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு நம் பூமியிலே சுழன்று கொண்டிருக்கின்றது.
அதனைப் பருகும் நிலைதான்
யாம் சொல்லும் இந்தத் தியானத்தின்
நிலைகள்.