ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2013

நன்மை செய்யும் பண்பு கொண்டவர்களுக்கு எப்படித் தீமைகள் வருகின்றது?


1. நன்மை செய்யும் பண்பு கொண்டவர்களுக்கு எப்படித் தீமைகள் வருகின்றது?
மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உபதேசித்தருளிய உணர்வின் அடிப்படையில், அவர் கண்டுணர்ந்த நிலையை எம்மையும் அனுபவப் பூர்வமாக அறியச் செய்யும் வண்ணம், பத்து வருடம் காட்டுக்குள் சுழலச் செய்து, மனிதர்கள் மத்தியிலும் சுழலச் செய்தார்.

ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் அவர்கள் எவ்வாறு வாழுகின்றனர். எல்லோரும் நல்லவர்கள் தான். பிறருக்காக உதவி செய்கின்றேன் என்று, அவர்கள் பலருக்கு உதவி செய்கின்றனர்.

இருந்தாலும், அவர்கள் படும் துயரத்தை எண்ணி ஏங்கி, அந்த உணர்வை நுகர்ந்து, தன் பொருளால், எண்ணத்தால், செயலால், அவர்களைத் துயரிலிருந்து மீட்டிடும் நிலையாக, நல்ல நிலையை உருவாக்குகின்றனர்.

ஆனால், அவர்கள் பட்ட வேதனையின் தன்மையைத் தனக்குள் ஏற்றுக்கொண்டு, அதனால் அந்த வேதனையைத் தனதாக மாற்றிக் கொண்டு, அந்த வேதனையின் அடிப்படையிலேயே அவர்கள் காத்திடும் நிலை கொண்டு காக்கின்றார்கள்.

ஆக, அவர்கள் வேதனைப்பட்ட உணர்வுகள்
இவர்கள் உடலுக்குள் சேர்ந்து,
மீண்டும் இந்த நல்ல உணர்வுகள் அனைத்தும்
அழிந்துவிடுவதைப் பார் என்று குருநாதர் காட்டுகின்றார்.

இப்படி அடிக்கடி வேதனைப்படுபவர்களுக்கு நாம் பல உபகாரங்கள் செய்கின்றோம். இருந்தாலும், கடைசியில் யார் தமக்கு உதவி செய்தாரோ, அவருடைய எண்ணதைக் கொண்டு, அந்த வேதனைப்பட்டவர் நோயுற்ற நிலைகளில் அந்த ஆன்மா பிரிகின்றது.

அப்பொழுது, யார் உதவி செய்தாரோ, அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாக, நல்ல நேரத்தில் உதவி செய்த அந்த மனிதனுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? என்ற நினைவுடன் இந்த வேதனப்பட்ட உயிரான்மா வெளியில் வருகின்றது.
அவ்வாறு வெளி வரும் அந்த உயிரான்மா
யார் உதவி செய்தாரோ
அவரின் உடலுக்குள் வந்துவிடுகின்றது.
2. நன்றியின் பயனாக, ஆன்மா உடலுக்குள் புகுந்துவிடுகின்றது
“நாம் இவ்வளவு உதவி செய்தோமே,
இப்படி இறந்துவிட்டாரே”
என்று எண்ணத்தால் எண்ணி ஏங்கும் பொழுது,
இவர் எண்ணத்தை வலுவாகக் கூட்டிக் கொண்டு அதனின் உணர்வு நினைவு வரும் சமயம், அந்த உடலை விட்டுப் பிரிந்து வந்த, அந்த நோயான உணர்வுகளை விளைய வைத்த அந்த உயிரான்மா, உதவி செய்தவர் உடலுக்குள் வந்துவிடுகின்றது.

அவர் நன்றிக் கடனுக்கு எண்ணினார். ஆனால்,
நாம் அவர் செய்த நன்றியின் நிலைகளில் இயங்குவோம்.

“காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே” என்று சோர்வடைந்த நிலையில் இந்த ஆன்மாவை நினைக்கப்படும் பொழுது, அந்த ஆன்மா இங்கே வந்துவிடுகின்றது.
பின் அவருக்கு வந்த அதே வேதனையையும், நோயையும்
நாமும் பட நேருகின்றது.
ஆனால், நாம் தவறு செய்யவில்லை.

நன்றியின் பயனாக ஒரு ஆன்மா உடலுக்குள் எவ்வாறு வருகின்றது? வெறுப்பின் தன்மையில் வரக்கூடிய ஆன்மா எப்படி உள்ளே புகுகின்றது? என்ற நிலைகளைத் தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

ஆகவே, நாம் நன்மை செய்த நிலைகளுக்குள் இப்படி அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டுமா இல்லையா? என்று குருநாதர் கேள்வி எழுப்புகின்றார்.
3. நாம் செய்யும் நன்மை, நன்மையாக என்றும் நிலைத்திடவே இந்த உபதேசம்
இந்த மனித வாழ்க்கையில் மகரிஷிகள் தீமையை அகற்றி, விண் உலகில் எவ்வாறு இன்று சுழன்று கொண்டிருக்கின்றனர்? அவர்கள் உடலிலிருந்து தீமையை அகற்றிய நிலைகள், உடலில் விளைய வைத்த உணர்வலைகள், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் பூமியில் எவ்வாறு இங்கு சுழன்று கொண்டிருக்கின்றது?

அதை நீ எவ்வாறு பருக வேண்டும? அந்த மகரிஷிகளின் ஆற்றலை உனக்குள் சேர்த்து, உன் வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து நீ எப்படி விடுபடவேண்டும்? என்ற நிலையை உபதேசித்து, அனுபவபூர்வமாகவும் உபதேசித்து, அனுபவம் பெறும் வழியில் எம்மை குருநாதர் வழி நடத்தினார்.

யாம் குருநாதர் காட்டிய அந்த அருள்வழியில், அனுபவத்தில் எமக்குள் விளைய வைத்த ஆற்றல்மிக்க சக்திகளைத் தான் எமக்கு குருநாதர் கொடுத்த அதே வழியில் உங்களுக்கும் பெறச் செய்கின்றோம்.
சர்வ தீமைகளிலிருந்தும் நீங்களும் விடுபட முடியும்.
உங்களை நீங்கள் நம்புங்கள்.
எமது அருளாசிகள்.