ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2013

நம் உயிர் ஒரு நெருப்பு... எப்படிப் பயன்படுத்த வேண்டும்...?

1. பக்குவம் இல்லையென்றால், எதையுமே சீராகச் செய்ய முடியாது
உதாரணமாக, தோசையைச் சுடும் பொழுது, தோசை மேல்தான் ஆசையாக இருப்போம். ஆனால், நெருப்பு எப்படி எரிந்து கொண்டிருக்கின்றது என்பதைக் கவனிப்பதில்லை.

நெருப்பைத் திகு திகு என்று எரித்துவிட்டு, தோசைச் சட்டியில் மாவை ஊற்றினால், எப்படி இருக்கும்?

தோசைச் சட்டியில், எந்தப் பக்கம் அனல் அதிகமாக இருக்கின்றதோ, அந்தப் பக்கம் தோசை ஒட்டிக் கொள்ளும். பிகு தோசையை எடுத்தால், வரமாட்டேன் என்கிறது என்று இருப்பார்கள்.

தோசை, சட்டியை விட்டு வரமாட்டேன் என்கிறது என்று சொன்னால் எப்படி?  நாம் அடுப்பில் நெருப்பு வைத்திருக்கும் பக்குவத்தில்தான்  இதெல்லாம் இருக்கின்றது.
2. பக்குவம் தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள்?
அடுப்பில் நெருப்பு அதிகமாக இருக்கும் பொழுது, பக்குவம் தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள்?

முதலில்,  தோசைச் சட்டியில்  தண்ணீரை ஊற்றி,
சூட்டைத் தணிக்கின்றார்கள். 
எரியும் விறகை வெளியில் எடுத்து, 
நெருப்பின் வேகத்தைக் குறைக்கின்றார்கள். 

இப்படி நெருப்பையும், தோசைச் சட்டியின் சூட்டையும் சமப்படுத்திய பின்,  மாவைத் தோசைச் சட்டியில் ஊற்றினால், தோசை மிகவும் அருமையாக வருகின்றது.

ஆனால், நெருப்பையும், தோசைச் சட்டியின் சூட்டையும் சமப்படுத்தாதபடி, சனியன், தோசை வரமாட்டேன் என்கிறதே, என்று சுரண்டு சுரண்டு என்று சுரண்டிவிட்டு, மறுபடியும் எண்ணையைப் போட்டார்கள் என்றால் அதுவும் சூடாகின்றது.
ஆக பக்குவம் ல்லை என்றால்,
நாம் தோசையைக் கூட, சுட முடியாது.
3. நமக்குள் மோதும் உணர்வுகளை ஞானிகளின் உணர்வு கொண்டு பக்குவப்படுத்த முடியும்
நமது உயிர் ஒரு நெருப்பு. அதில், நாம் எதனுடைய பக்குவத்தைச் செலுத்துகின்றோமோ, நிச்சயம் அது செயல்படும். 

நீங்கள் வேறு யாரிடமும் யோசனை கேட்க வேண்டியதில்லை. ஆனால், அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். உங்களிடம், அதைத்தான் யாம் பதிவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

நமது வாழ்க்கையிலும் பக்குவம் தேவை. அதைப் பக்குவப்படுத்துவதற்கு ஞானம் தேவை.  அந்தப் பக்குவத்தை, உங்களுக்கு பெறச் செய்வதற்காகத்தான், யாம் இப்பொழுது உபதேசிக்கின்றோம்.

நமக்குள் வரும் தீமைகளை மாற்றுவது எப்படி? என்பதன் உண்மைகளை அறிய, குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று, பல அவஸ்தைகளைக் கொடுத்து உணர்த்தினார்,  அறியச் செய்தார். 

குருநாதர் காட்டிய அருள் வழியில், தீமைகளை மாற்றி அமைக்கும் நிலையாக, அகத்தின் இயக்கம் எப்படி என்பதை உங்களுக்கு உணர்த்தி, "சக்தி வாய்ந்த வாக்காக" அந்த மெய் ஞானிகளின் வித்துக்களை உங்களிடம் பதிவு செய்கின்றோம்.

இவ்வுலகில் உள்ள நஞ்சுகளிலிருந்து,
ங்களைக் காத்திடும் அருள் உணர்வுகளை
சாந்தத்தை உருவாக்கும் காந்தத்தை
உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்