ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 16, 2013

இயந்திர மனிதனுக்குள் (ROBOT) இயங்கும் எலக்ட்ரானிக்கின் சக்தி எது?

1. எலக்ட்ரானிக் எதிலிருந்து வந்தது?
விஞ்ஞானி ஒரு கம்ப்யூட்டரை உருவாக்கி, இவன் எத்தகைய ஆணையை இடுகின்றானோ
அதனின் உணர்வைப் பதிவு செய்துகொண்டு,
அதே அலைவரிசையில் அது இயக்கப்படும் பொழுது,
எதிர் அலைகளை இது உணர்ந்து,
இவன் வைத்திருக்கும் எந்த அலைவரிசையோ,
அதைக் காட்டிலும் எதிர் நிலைகள் வலுவாக இருந்தால்,
அதனுடைய இயக்கச்சக்தியாக இயக்கி,
அதை நம்மை அறியச் செய்யும் நிலை அடைகின்றது.
இது எலக்ட்ரானிக்.

இந்த எலக்ட்ரானிக் எங்கிருந்து வந்தது? T.V.ஐக் கண்டு உணர்வதற்கு முன் இதை விஞ்ஞானிகள் கண்டுகொள்ளவில்லை. சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்ப காந்தங்கள் துணை கொண்டு, T.V.ஐக் கண்டுபிடித்தான்.

T.V.ஐக் கண்டுபிடிக்கும் முன் சாதாரண ஏழையாக இருந்தான். அவன் T.V.ஐக் கண்டுபிடித்து மக்களுக்குக் காட்டப்படும் பொழுது, கண்டுபிடித்த நாட்டிலேயே, அங்கிருக்கக்கூடிய பெண்கள் அவனைக் கோழி முட்டையாலும் கல்லாலும் அடித்துத் துரத்தினார்கள்.

அவன் உயிர் வாழ்வதற்கே கடுமையாகிவிட்டது. அவன் தப்பித்து, போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தான். வெகு காலம் வெளியே வரமுடியவில்லை.

அத்தகைய கண்டுபிடிப்பை அரசாங்கம் இராணுவங்களுக்குப் பயன்படுத்தி, சில ஒலி அலைகளைப் பதிவு செய்து, படைகள் (இராணுவம்) இருக்கக்கூடிய எல்லைகளை அறிந்து, அங்கு நடக்கும் சம்பவங்களை அறிந்து கொள்ளப் பயன்படுத்தினார்கள். அதில் முன்னேற்றம் அடைந்ததை, இராணுவ நிலைகளுக்கு வைத்துவிட்டு, இன்று சாதாரண மக்களும் பார்த்து, கேட்கும்படி T.V. இருக்கின்றது.
2. மனித உடலுக்குள் விளைய வைத்ததுதான் எலக்ட்ரானிக்காக இயங்குகின்றது
T.V.யும், ரேடியோவும் நாம் பேசும் ஒலி அலைகளைக் காந்தப் புலன்கள் அது கவர்ந்து, அதாவது ஒரு இசைத்தட்டிலே அதைப் பதிவு செய்து, கெமிக்கல் கலந்த நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.

அதைப் பதிவு செய்து, மீண்டும் எந்திரத்தில் பதிவு செய்து ஒலி அலைகளாகப் பரவச் செய்யும் பொழுது, இதையும் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது.

கெமிக்கல் கலந்த உணர்வலையை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கின்றது. நாம் வீட்டிலே இருக்கும் T.V. ஐப் போட்டவுடன், சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வைத்துள்ள அதே உணர்வலைகளை
எந்த ஸ்டேசனில் ஒலி பரப்புச் செய்கின்றார்களோ
அது காற்றிலே படர்ந்திருப்பதைக் கவர்ந்து, பிரித்து
அங்கே நடக்கும் சம்பவங்களைத் திரைப்படங்களாகக் காட்டுகின்றது.

ஒரு வேப்ப மரம் தன் உணர்வின் சத்தால் மரமாக வளர்கின்றது. அதிலே விளைந்த வித்தை நாம் எங்கே கொண்டு போய் நடுகின்றோமோ, பூமியின் ஈர்ப்புக்குள் இருக்கும் தண்ணீரும் அந்த நீர் சத்தால் அது தனக்குள் கருவுறுகின்றது.

அந்த வித்து செடியாக முளைக்கப்படும் பொழுது, தன் இனமான தாய் மரம் வெளிப்படுத்தும் அந்த உணர்வின் சத்தைக் கவர்ந்து அது தன் இனத்தை வளர்க்கின்றது.

இதைப் போலத்தான், T.V. யில் ஒளி பரப்பு செய்யப்பட்ட மனிதனின் உணர்வலைகள், எண்ணங்கள், அலைகளாக பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.

அதை, ஆராய்ச்சியின் நிமித்தம் மனிதன் தன் உணர்வால் தன் எண்ணத்திற்குச் செயல்படும் பொழுது, எலக்ட்ரானிக் இயக்கத்தைக் கண்டுணர்கின்றான்.

மனித உடலில் உணர்வின் அலைகளை,
மிகவும் சக்திவாய்ந்ததாக அவன் பதிவு செய்த
இந்த உணர்வுகள்தான் எலக்ட்ரானிக்காகச் செயல்படுகின்றது.
அது மனிதனின் மூளை என்றும், இன்று அதே உணர்வுகள் எலக்ட்ரானிக்குள் செயல்படுத்தப்பட்டு, மனித உணர்வில் இருக்கும் அந்த ரோபோட் (ROBOT) என்ற இயந்திர மனிதனை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள்.
அவன் இடும் ஆணைப்படி, அந்த இயந்திர மனிதன் (ROBOT) இயங்குவதும், அதற்குள் எதிர் நிலை இருப்பதை அது கண்டுணர்ந்து நமக்கு இயக்கிக் காட்டுகின்றது.
இவையனைத்தும் இந்த உணர்வலைகள் மனிதனுக்குள் விளைய வைத்த நிலைகள்தான்.